Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, May 12, 2013

ஸ்ரீ ப்ரத்யங்கரா தேவி யாகம் - நிகும்பல யாகம் நடைபெற்றது



ஸ்ரீ தன்வந்தி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும்.

ஸ்ரீ ப்ரத்யங்கரா தேவி யாகம் - நிகும்பல யாகம்

பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கரா தேவி. 
இவள் பத்ரகாளியின் சொரூபம். 

தேவி சிங்க முகத்துடனும், கரிய உடலுடனும், சிறிய கண்களுடனும், கைகளில் சூலம், கபாலம், டமருகம், பாசம் போன்ற ஆயுதங்கள் ஏந்தியும், நீல நிற ஆடை உடுத்தி, தனது வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சிங்கத்தின் மீது சிம்மவாகினியாய் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றாள். அகோர ரூபம் என்றாலும், தேவிக்கு இங்கு மங்களம் அருளும் சாந்த வடிவம், பயம் நீக்குபவள், பயம் கொண்டோர் தனது நாமத்தை சொல்ல பயம் தீர துணையிருப்பவள், கேட்டவர்க்கு கேட்டதை அருளும் இவள் பக்தருக்கு என்றும் துணையிருப்பவள்.


பிரத்யங்கரா தேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கரா, பிராம்பி பிரத்யங்கரா, ருத்திர பிரத்யங்கரா, உக்கிர பிரத்யங்கரா, அதர்வண பிரத்யங்கரா, பிராம்மி பிரத்யங்கரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள். கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர். இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவரகளாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர். தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லஷ்மி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர். உக்கிர தெய்வமாக காணப்பட்டாளும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

“ஓம் ஷம் பஷ ஜ்வாலாஜிஹ்வே 
கராளதம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரா ஷம் ஹ்ரீம் ஹிம்பட் “
என்ற இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிரீத்தியான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும். உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் ப்ரீத்தியானது.

பிரத்யங்கரா தேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கரா, பிராம்பி பிரத்யங்கரா, ருத்திர பிரத்யங்கரா, உக்கிர பிரத்யங்கரா, அதர்வண பிரத்யங்கரா, பிராம்மி பிரத்யங்கரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.

தேவி உருவான வரலாறு  ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை. இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார். சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரமாண்ட பறவை. கூரிய நகங்களையும், பற்களையும் கொண்டது. சரபரும், நரசிம்மமும் சண்டையிட்டனர். நீண்ட நாட்கள் நீடித்தத சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்காரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார். நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் தேவி. நரசிம்மர் சாந்தமானார். தான் சிவ பெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் பாடினார். இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள்.

இவளை உபாசிப்பவர்கள் கடன், சத்ரு தொல்லைகளிலிருந்து மீள்வர். 16 செல்வங்களையும் பெற்று பெரு வாழ்வு வாழ்வர்.

ஸ்ரீ பிரத்யங்காதேவியின் 108 போற்றி

ஓம் சகல நயகி போற்றி
ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி
ஓம் தர்ம பரிபாலதையே போற்றி
ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி
ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி
ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி
ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி
ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி
ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி
ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி
ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி
ஓம் ஹரத்துள்ளாயே போற்றி
ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி
ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி
ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி
ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி
ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி
ஓம் சிங்க முகமுடையவலே போற்றி
ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி
ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி
ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி
ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி
ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி
ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி
ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி
ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி
ஓம் கர்ணகோர ரூபமே போற்றி
ஓம் ஞானவழி எழிலே போற்றி
ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி
ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி
ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி
ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி
ஓம் வானம் பூமி காபாயே போற்றி
ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி
ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி
ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி
ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி
ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி
ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி
ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி
ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி
ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி
ஓம் சித்தி வழி சித்தியே போற்றி
ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி
ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி
ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி
ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி
ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி
ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி
ஓம் தயை சுவை மோகனமே போற்றி 
ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி
ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி
ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி
ஓம் பத்ரகாளி வடிவே போற்றி
ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி
ஓம் சூலினியின் துணையே போற்றி
ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி
ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி
ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி
ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி
ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி
ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி
ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி
ஓம் மாவீர கோகிலமே போற்றி
ஓம் சர்வபாப விநாசனி போற்றி
ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி
ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி
ஓம் உகந்தது தருவாயே போற்றி
ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி
ஓம் கணித்தது புகுவாயே போற்றி
ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி
ஓம் ஆபத் சகாயமே போற்றி
ஓம் ஆகாய வெளிவழியே போற்றி
ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி
ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி
ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி
ஓம் பார்வதி மய சக்தியே போற்றி
ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி
ஓம் பிரணவரூப ஒலியே போற்றி
ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி
ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி
ஓம் புவன யோக வீரமே போற்றி
ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி
ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி
ஓம் புத பேத நாசினி போற்றி
ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி
ஓம் வனநேச பாரிதியே போற்றி
ஓம் குண ரூப சாரதியே போற்றி
ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி
ஓம் டமருகம் தரித்தாய் போற்றி
ஓம் சூலமும் கொண்டாய் போற்றி
ஓம் பக்தரின் பிரியமே போற்றி
ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி
ஓம் ராஜராஜ தேவியே போற்றி
ஓம் கங்காதர காருண்யே போற்றி
ஓம் வித்தைக் கதிபதியே போற்றி
ஓம் வித்வ மூல சித்தமே போற்றி
ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி
ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி
ஓம் காமதேனு மடியே போற்றி
ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி
ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி
ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி
ஓம் மகாபல மாசக்தியே போற்றி
ஓம் மகா பைரவி தேவியே போற்றி
ஓம் நலம் தரும் நாயகியே போற்றி
ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி

என்ற இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது. அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும்.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையிலிருந்து  மூன்றாவது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  கீழ்புதுப்பேட்டை கிராமம் . அங்கு மரங்கள் அடர்ந்த இயற்கையான  சூழலில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம். இப்பீடத்தில் விசேஷ நாட்களில் நடக்கும் ’நிகும்பலா’ யாகத்தின் போது மூட்டை மூட்டையாக மிளகாய்களைக் கொட்டினாலும்  நெடி வராமல் இருப்பது அதிசயமாகவே பார்க்கிறார்கள். இங்கு அமைந்திருக்கும் 9 அடி மகிஷாசூர மர்த்தினி சிரித்த முகத்துடன் 18 கைளில் 18 ஆயுதங்கள் கொண்டு வீற்றிருக்கும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும். இதன் அருகிலேயே அமைந்துள்ளது ப்ரத்யங்கிரா பீடம்.

மேற்கண்ட ஹோமம் 12.05.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 100க்கும் மேற்பட்ட நிகும்பலா யாகமும், ப்ரத்தியங்கரா ஹோமமும் நடைபெற்றுள்ளது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சரபேஸ்வரர் ஹோமம், வாஞ்ச கல்ப கணபதி ஹோமம், திருஷ்டி துர்கா, நவதுர்கா, சண்டி துர்கா, மஹா சண்டி, நவ சண்டி போன்ற பல ஹோமங்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லோக ஷேமத்திற்காக நடத்தி வருகிறார்.


தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment