ஸ்ரீ தன்வந்திரி
யோகா மையத்தில்
இலவச யோகா பயிற்சி இனிதே ஆரம்பமானது…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் நடத்தும் ஸ்ரீ தந்வந்திரி யோகா
மையத்தில் 5.5.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இலவச யோகா வகுப்பு துவக்க விழாவின்
போது பயிற்சிக்கு வந்திருந்த பெரியோர்களையும், மாணவ, மாணவியர்களையும் மற்றும் அனைவரையும்
பீடத்தின் யோகா மைய ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
வேலூர் மாவட்ட காவல் பயிற்சி கல்லூரியின் துணை கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்களை ஸ்வாமிகள் வரவேற்றபோது எடுத்தப்படம் |
பின்னர் இந்த விழாவை அனந்தலை ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.எம். வெங்கடேசன்
அவர்கள் தலைமை தாங்கி உரையாற்றினார். மேலும் இவ்விழாவில் உலக சமாதான ஆலயத்தின் நிகழ்ச்சி
தொகுப்பு அதிகாரி மெய்ஞானச் செல்வர் திரு.எஸ்.வி.கிரி அவர்கள் முன்னிலை வகித்தார்.
உலக சமாதான ஆலயத்தின் மெய்ஞான ஆசிரியர் திரு.மெய். வெங்கட்ராமன் அவர்கள் பேசுகையில் மணவ மாணவியர்கள் யோகா பயிற்சியின் மூலம் மன அமைதி, மனதை ஒருநிலைப் படுத்துதல், அறிவுத்திறன் வளர்த்த போன்ற பலவிதமான நன்மைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் பயிற்சி கல்லூரியின் துணை
கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள் கூறுகையில், யோகா பயிற்சி பெறுவதினால் குறைந்த
மதிப்பெண்கள் எடுக்கும் பள்ளிக் குழந்தைகள் அதிக மதிப்பெண்கள் எடுக்கமுடியும், கவண
ஈர்ப்பு அதிகமாகும், தேவையற்ற மனஉழைச்சல் நீங்கும், சக மாணவ மாணவியர்களிடமும், ஆசிரியர்களிடமும்,
பெற்றோர்களிடமும் மற்றும் அனைவரிடமும் நல்லிணக்கம் எற்படும் என்று கூறி வாழ்த்துரை
வழங்கினார்கள்.
மேலும் உலக மக்களின் நலன் கருதி, இலவச யோகா வகுப்பை ஏற்படுத்திக்
கொடுத்த ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்
மாணவ, மாணவியருக்கு வாழ்வின் ஒழுக்கங்கள் பற்றியும், உடல் நலம், மன நலம் பற்றியும்,
இறைநிலை பற்றியும் அருளுரை வழங்கினார்.
பின்னர் யோகா பயிற்சியாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் யோகாவின்போது
கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் போன்ற பல வழிமுறைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மேலும் தொடர்ந்து 15.5.2013 புதன்கிழமை மாலை வரை நடைபெறக்கூடிய
இந்த இலவச யோகா பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம் என்று கயிலை
ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட காவல் பயிற்சி கல்லூரியின் துணை கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள் உரையாற்றியபோது. |
உலக சமாதான ஆலயத்தின் நிகழ்ச்சி தொகுப்பு அதிகாரி மெய்ஞானச் செல்வர் திரு.எஸ்.வி.கிரி அவர்களை ஸ்வாமிகள் வரவேற்றபோது எடுத்தப்படம் |
உலக சமாதான ஆலயத்தின் மெய்ஞான ஆசிரியர் திரு.மெய். வெங்கட்ராமன் அவர்களை ஸ்வாமிகள் வரவேற்றபோது எடுத்தப்படம் |
ஸ்ரீ தன்வந்திரி யோகா மையத்தின் ஒருங்கினைப்பாளர் திரு.வெங்கட்ராமன் அவர்கள் உரையாற்றிய போது. |
நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளுக்கு
தேநீர் வழங்கப்பட்டது.
|
இலவச யோகா பயிற்சிக்கு வந்திருந்த மாணவன்
தான் என்னவாகப் போகிறேன் என்பதை பேசியபோது.
|
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி யோகா மையம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033
No comments:
Post a Comment