Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, August 21, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாக சதுர்த்தி - கருட பஞ்சமி - வாராகி பஞ்சமி வைபவங்கள் 20.08.2023 & 21.08.2023

   


 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாக சதுர்த்தி - கருட பஞ்சமி வாராகி  பஞ்சமி வைபவங்கள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை நாக சதுர்த்தியில் ஸ்ரீ ராகுகேதுவை வேண்டி சிறப்பு ஹோமம் மற்றம் அபிஷேகமும் 21.08.2023 திங்கள்கிழமை  கருட பஞ்சமி நாளில் 21 அடி உயர விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவானுக்கு விஷேச ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

இதில் சர்ப்ப தோஷங்கள் நாக தோஷங்கள் கால சர்ப்ப தோஷங்கள் ஆண், பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும், செல்வம் பெருகவும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெருகவும், விபத்துக்கள் வராமல் தடுக்கவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் வாகன யோகங்கள் அமையவும், பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும் விசேஷமான திரவியங்களைக் கொண்டு மேற்கண்ட சிறப்பு ஹோமங்களும் அஷ்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து 22.08.2023 செவ்வாய்க்கிழமை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஹோம அபிஷேகமும் 23.08.2023 வாஸ்து நாளை முன்னிட்டு ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோம அபிஷேகமும் நடைபெறவுள்ளது இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.










Picture

Saturday, August 19, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாக சதுர்த்தி-கருட பஞ்சமி-வாராகி பஞ்சமி விழா இரண்டு நாட்கள்- மூன்று விழாக்களாக நடைபெறுகிறது.

                                                         ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

நாக சதுர்த்தி-கருட பஞ்சமி-வாராகி பஞ்சமி விழா

இரண்டு நாட்கள்- மூன்று விழாக்களாக நடைபெறுகிறது.

 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் வருகிற 20.08.2023 ஞாயிற்றுக்கிழமை ஆவணி 3ம் நாள் சதுர்த்தி திதி ஹஸ்தம் நட்சத்திரம் கூடிய நாக சதுர்த்தி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ஓரே கல்லில் ஏக ரூபத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ ராகு கேதுவை வேண்டியும் 21.08.2023 திங்கள்கிழமை ஆவணி 4ம் நாள் சித்திரை நட்சத்திரம் பஞ்சமி திதியுடன் கூடிய கருட பஞ்சமி நாளில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 21 அடி உயரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ விஸ்வரூப அஷ்டநாக கல் கருட பகவானை வேண்டி காலை 10.00 மணிமுதல் 12.00 மணிக்குள்ளாக சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் விசேஷ அபிஷேகங்களும் நடைபெறுகிறது. இதில் சர்ப்ப தோஷங்கள் நாக தோஷங்கள் கால சர்ப்ப தோஷங்கள் ஆண், பெண் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறவும், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெறவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழவும், செல்வம் பெருகவும், கொடிய நோய்களிலிருந்து விடுபடவும், நீண்ட ஆயுள் பெருகவும், விபத்துக்கள் வராமல் தடுக்கவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் வாகன யோகங்கள் அமையவும், பஞ்சபட்சி தோஷங்கள் விலகவும் விசேஷமான திரவியங்களைக் கொண்டு மேற்கண்ட சிறப்பு ஹோமங்களும் அஷ்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும் வண்ண மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளது. மேலும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு 21.08.2023 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு பஞ்சமியை முன்னிட்டு காளி, சூலினி, வாராகி, பகுளாமுகி, திரிபுர பைரவி, என ஐந்து முகங்களுடன் தஸ புஜங்களுடன் 5அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வாராகிக்கு விசேஷ திரவியங்கள் மற்றும் கிழங்கு வகைகள் கொண்டு ஹோமமும் விசேஷ அபிஷேகமும் வாராகி தீபமும் ஏற்றி வழிபாடு நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவருளுடன் குருவருளையும் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் தொடர்புக்கு 9443330203. 

Tuesday, August 1, 2023

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடி - பௌர்ணமியில் சிறப்பு யாகங்கள் 01.08.2023

 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடி - பௌர்ணமியில் சிறப்பு யாகங்கள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 1/8/2023 செவ்வாய்க்கிழமை ஆடி16ம் நாள் பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஆண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமண பாக்கியம் பெற கந்தர்வ ராஜ ஹோமமும் பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமண பாக்கியம் பெற சுயம்வர கலா பார்வதி யாகமும் தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகமும் நடைபெற்றது. மேலும் சிவலிங்கரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும் மற்றும் ராகு - கேது விற்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுரையும் அன்னப்பிரசாதமும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து 3.08.2023 வியாழக்கிழமை ஆடிப்பெருக்கினை முன்னிட்டு ஸ்ரீ தங்க அன்னபூரனிக்கு விஷேச அபிஷேகமும் அன்னப்படையலும் மஞ்சள் கிழங்குடன் மாங்கல்ய சரடு வழங்கும் நிகழ்ச்சியும் 5.08.2023 மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் குடும்ப ஷேம ஹோமமும் குல தெய்வ பூஜையும் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.