Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 30, 2016

தன்வந்திரி பீடத்தில் 29.10.2016 சனிக் கிழமை தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மருத்துவர் கோலத்தில் பக்தர்கள் தரிசனம்


தன்வந்திரி பீடத்தில் 29.10.2016 சனிக் கிழமை தன்வந்திரி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மருத்துவர் கோலத்தில் பக்தர்கள் தரிசனம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு தன்வந்திரி ஜெயந்தி என்பதாலும், தீபாவளியை முன்னிட்டும் 29.10.2016 சனிக்கிழமை இன்று ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  நவகலச திருமஞ்சனம் நடைபெற்று, மருத்துவ அலங்காரத்தில் தன்வந்திரி பெருமாள் திருக்காட்சி அருளினார். பின்னர், தன்வந்திரி சன்னதி முன் பக்தர்கள் தன்வந்திரி மஹா மந்திரம் ஜெபிக்க, நெய், சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகிய பொருட்களைக் கொண்டு உரலில் வைத்து உலக்கையால் மருத்துவர்களும், பக்தர்களும், மருந்து தயாரித்து கொடுக்க, அதை பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்வந்திரி லேகியமாக தயாரித்து, ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினார். இதை தொடர்ந்து இரண்டாவது நாள் நடைபெற்ற இலவச ஆயுர்வேத முகாமில், ஆற்காடு தொழிலதிபர்  திரு. ஜெ. லக்ஷ்மணன் மற்றும் திரு. கு. சரவணன், ஆற்காடு அவர்கள், கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டனர்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Friday, October 28, 2016

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரிஜெயந்தியை முன்னிட்டு இராஜ அலங்காரத்தில் தன்வந்திரி பெருமாள் திருக்காட்சி வைபவங்கள்






தன்வந்திரி பீடத்தில் 28.10.2016 வெள்ளிக்கிழமை இன்று தன்வந்திரி ஜெயந்தி - தேசிய ஆயுர்வேத தினம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 தன்வந்திரி ஜெயந்தியின் சிறப்பு,

ஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான தேவேந் திரன் தனது செல்வங்களை இழந்தான். மீண்டும் அவற்றைப் பெற, திருமாலின் அறிவுரைக்கேற்ப அசுரர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதை சிவபெருமான் தன் கண்டத்தில் இருத்திக் கொண்டு நீல கண்டனானார். தொடர்ந்து காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம் என்ற யானை போன்ற பல்வேறு புனித மான பொருட்கள் வந்தன. பாற்கடலிலிருந்து கடைசி யில் திருமாலே தன்வந்திரி யாக அம்ருத கலசத்தை ஏந்தி வெளிப்பட்டார். தேவேந்திரன் சாவா மருந் தான அமிர்தத்தையும் தான் இழந்த பிற பொருட் களையும் பெற்று தேவலோகம் சென்றான்
திருமால் மக்களுக்கு மருத்துவராகத் தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு தற்போது பிரபலமாகி வருகிறது. தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் கீழுள்ள சுலோகத் தைக் கூறி வழிபடலாம். இதை 16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல பலன்கள் கிட்டும்,
ஓம் நமோ பகவதே  வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய
சர்வ ரோக நிவாரணாயத்ரைலோக்ய பதயே
த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப
ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்த.

உலக நலன் கருதி  வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில்காலை 10.00 மணிக்கு கோ பூஜையுடன் மூலவர் தன்வந்திரிக்கு பால் தயிர்,மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிருதம்,நெல்லிக்காய் பொடி, கரும்புசாறு, இவற்றுடன் 108 மூலிகை திரவியங்களை கொண்டு பிரத்தியோகமாக தயாரித்த மூலிகைப்பொடிகளினால் மஹா திருமஞ்சனமும், தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது
தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின் சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை திருமதி.நிர்மலா முரளிதரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து தன்வந்திரி மந்திரம் ஜபம் செய்தனர்.வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  உயர்திரு  S.A. ராமன்  அவர்கள் துவக்கி வைத்து ஆயுர்வேத மருத்துவத்தின் மகிமையை  சிறப்புரையாற்றினார். இம் மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக மகாலட்சுமி காலேஜ் நிர்வாகி டாக்டர் திரு.பாலாஜி அவர்களும் மற்றும் R.I.T.  கல்லூரி சேர்மன் திரு. போஸ் அவர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு இடங்களிலிருந்து வருகை புரிந்த ஆயுர்வேத மருத்துவர்கள் ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்பை எடுத்துறைத்தனர் ,.இம் மருத்துவ முகாம் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவ மையத்தின் R.M.O.  டாக்டர்.திருமதி. மீரா சுனில்குமார் தலைமையில் நடைபெற்றது ,. .இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று இலவச மருத்துவ ஆலோசனை பெற்று  இலவசமாக மருந்து மாத்திரைகளை பெற்று பயன் பெற்றனர்.

இந்த முகாம் நாளையும் நாளை மறுநாளும் காலை 10.00 மணிமுதல் நண்பகல் 2.00 மணிவரை  நடைபெறுகிறது. என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.  








Thursday, October 27, 2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மை ஸ்டாம்ப் வெளியீட்டு விழா நடைபெற்றது



தன்வந்திரி பீடத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 28.10.2016 முதல் 30.10.2016 வரை நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தன்வந்திரி அவதார தினத்தை சர்வதேச ஆயுர்வேத தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து அத்திருநாளை  சிறப்பிக்கும் வகையில் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் தன்வந்திரி ஹோமமும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து காலை 11.30 மணியளவில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை  வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் திரு.  S.A. ராமன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனையின் ஸ்தாபகரும், பீடாதிபதியுமான ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்

Wednesday, October 26, 2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மை ஸ்டாம்ப் வெளியீட்டு விழா.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தன் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் 57வது ஜெயந்தியை முன்னிட்டு 26.10.2016 புதன்கிழமை ஸ்வாமிகளின் புகைப்படம் அச்சிடப்பட்ட மை ஸ்டாம்ப் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில், கோட்ட அஞ்சல்துறை கண்கானிப்பாளர் அரக்கோணம்    திரு. V. குணசீலன் அவர்கள், மை ஸ்டாம்ப் வெளியிட, அற்காடு ஸ்ரீ மஹாலட்சுமி கல்வி நிறுவனங்கள் சேர்மன் திரு. D.L.பாலாஜி அவர்களும், வாலாஜா, லாவண்யா மருத்துவமனை இயக்குனர் டாக்டர். தொப்ப கவுண்டர் அவர்களும் வாலாஜாபேட்டை  திருமதி. டாக்டர் குழந்தைவேலு, ராமு நர்சிங்ஹோம், அவர்களும் மை ஸ்டாம்ப் பெற்றுக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

ராணிப்பேட்டை, அஞ்சல் துறை விற்பனை பிரிவு அலுவலர்          திரு. E.சிவக்குமார் அவர்களும் துறை சார்பான சேவைகளை குறித்து சிறப்புறை ஆற்றி விழாவிற்கு பெருமை சேர்த்தார். தன்வந்திரி பீடத்தின் சேவார்த்திகள் மற்றும் பக்தர்கள் விழாவில் பங்கு பெற்று ஸ்வாமிகளின் அசி பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்









Monday, October 24, 2016

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கால சர்ப தோஷ பரிஹார ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 24.10.2016 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஆயில்ய நட்சத்திரத்தை முன்னிட்டு பீடாதிபதி  கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி காலசர்ப தோஷ சாந்தி பரிஹார ஹோமம் நடைபெற்றது.

இராகு கேது தோஷம் அகலவும், நாக தோஷம் சர்ப தோஷம் விலகவும், ராகுபுக்தி ராகுதிசையினால் ஏற்படும் தடைகள் அகலவும், திருமணம் குழந்தைபேறு அமையவும் மேலும் ஒருவருடைய வாழ்க்கையில் இருந்து வரும் குடும்ப பிரச்சனைகள், நாள் பட்ட வியாதிகள், வியாபாரத்தில் வரும் இடையூறுகள், சகோதர, சகோதரிகளுக்குள் உள்ள மனவேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பெற, ஒருவருடைய வேலை அல்லது செய்யும் தொழில் மந்தமில்லாமல் சீராக நடைபெற, வீடு அல்லது வாகனங்கள் மூலமாக வரும் தொல்லைகளிலிருந்து விடுபட, தந்தையுடன் இருந்து வரும் மனக் கசப்பு நீங்கி சுமுக உறவு நிலவ, குடும்ப கஷ்டங்கள் இன்றி வளம் பெற மற்றும் எந்த காரியமும் தடைகள் இல்லாமல் தொடர்ந்து வெற்றி பெறவும் பக்தர்கள் பங்கு கொண்டு, பிரார்த்தனை செய்து ராகு கேதுவின் அருளையும், ஸ்வாமிகளின் ஆசிகளையும் பெற்றுச் சென்றனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்துனர் தெரிவித்தனர்.






ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது…

தமிழர் திருநாட்களில் முக்கியமான ஒன்று தீபாவளி பண்டிகை. இத்திருநாளில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை மிகவும் சந்தோஷமாக வண்ண வண்ண பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த திருநாட்களில் தீயினால் எந்த வித அசம்பாவிதமும் நிகழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தன்வந்திரி பீடத்தில் சேவை புரியும் சேவார்த்திகளுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும், பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கும் மற்றும் சுற்றுபுற கிராம மக்களுக்கும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆலோசனையின்படி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை இன்று ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், இராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு.முருகேசன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்பித்தார். இராணிப்பேட்டை தீயணைப்பு அலுவலர் திரு.கமலக்கண்ணன், ஆற்காடு தீயணைப்பு அலுவலர் திரு.சக்திவேல் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தார். இதில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புக் குழுவினர் கலந்து கொண்டனர்.  

இறுதியில் தன்வந்திரி பீடத்தின் சார்பாக திரு.பழனி ஓய்வுபெற்ற தீயணைப்பு அலுவலர் நன்றி கூறினார். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.