Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, October 18, 2017

குபேர லக்ஷ்மி யாகத்துடன் ஆரோக்ய லஷ்மி ஹோமம்

தன்வந்திரி பீடத்தில்
 தீபாவளியை முன்னிட்டு
குபேர லக்ஷ்மி யாகத்துடன்
 ஆரோக்ய லஷ்மி ஹோமம் நடைபெற்றது.

செல்வம் தரும்  லட்சுமி குபேர வழிபாடு

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை  4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது.
லட்சுமி குபேரன்
திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார்.திருப்பதி ஏழுமலையான் திருமணத்துக்கு கடன் கொடுத்தவர் குபேரன் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இதனால்வாழப் பிறந்தவனுக்கு வடக்குஎன்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன்லட்சுமி குபேரன்என்று அழைக்கப்படுகிறார்.
தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.
ஓம் க்ஷய குபேராய      வைஸ்ரவணாய
தந தா நியாதி பதயே         தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹா
என்ற குபேரனின் மந்திரத்தை தியானித்து அவனை வழிபட வேண்டும்.
லட்சுமி குபேரரை வழிபட்டால் நீங்காத செல்வம் நிலைத்து இருக்கும்.

 வீட்டில் அமைதி நிலவும். செல்வம் நிலைக்கும். என்பது மக்களின் நம்பிக்கை. மேலும் தீராத நோய்கள் பசிப்பிணி அகலவும். தானியங்களின் விளைச்சல் அதிகம்பெறவும். காரியங்களில் வெற்றி, மனோதைரியம் குழந்தைப் பேறு, அனைத்து காரியங்களில் வெற்றி, தெய்வீக அருள் கிடைக்கவும், கல்வியும் செல்வமும் பெற்று வாழ்க்கையில் சௌபாக்கியங்களுடன்  ஆரோக்யம்,ஆனந்தம் ஜஸ்வர்யத்துடன் வாழவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 18.10.2017 புதன் கிழமை மாலை  4.30 மணிக்கு உலக நலன் கருதி தீபாவளியை முன்னிட்டு மக்கள் ஆரோக்யத்துடன் வாழ்வில் வளத்தையும், செல்வத்தையும்  பெற வேண்டி குபேர லக்ஷ்மி யாகமும் ஆரோக்ய லஷ்மி ஹோமமும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மேற்கண்ட யாகத்திலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற அபிஷேகத்திலும் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்


Lord Danvantri Jayanti

Lord Danvantri Jayanti Celebrations at Sri 

Danvantri Peedam, Walajapet. Thanks to 

"DINAMALAR, DINAMANI, 

SAKSHI, ANDHRA JYOTHI" 

Daily News Papers 18.10.2017.


Tuesday, October 17, 2017

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா - உலக ஆயுர்வேத தினம்

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலக ஆயுர்வேத தினம்-ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று  17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை கோ பூஜை, கணபதி பூஜை, யாகசாலா பூஜை, கலச பூஜை, சூக்த பாராயணத்துடன் 108 மூலிகைகளை கொண்டு மாபெரும் தன்வந்திரி ஹோமமும்,108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், சிறப்பு சஹஸ்ர நாம அர்ச்சனையும், தீபாவளி மருந்து நிவேதனமும் சதுர்வேத பாராயணமும் நடைபெற்றது.

தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் சென்ற ஆண்டு முதல் உலக ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறதுசிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர். இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார். இன்று 13வது ஆண்டாக தன்வந்திரி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்களைக் கொண்டு, தன்வந்திரி மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு இந்த லேகியம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் மருந்து தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்டது. நாளை தீபாவளியன்று பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது. மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதனை தொடர்ந்து இரதோற்சவம் நடைபெற்றது. நாளை காலை 10.00 மணிக்கு தீபாவளியை முனிட்டு சிறப்பு லக்ஷ்மி பூஜை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.Monday, October 16, 2017

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
அக்டோபர் 17 ம் தேதி ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி மற்றும் உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை மாபெரும் தன்வந்திரி ஹோமமும் 108 கலசங்களில் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு மூலிகை தீர்த்த அபிஷேகமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை மங்கள இசையுடனும் மந்திர ஜபத்துடன் தன்வந்திரி லேகியம் தயாரிக்கும் வைபவமும் சிறப்பு ஸஹச்ர நாம அர்ச்சனையும், சதுர்வேத பாராயணமும் நடைபெறவுள்ளது.

தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாகவும் சென்ற ஆண்டு முதல்
உலக ஆயுர்வேத தினமாகவும்  கொண்டாடப்படுகிறதுசிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார். நாளை 13வது ஆண்டாக தன்வந்திரி ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. நாளை மாலை பீடத்திற்கு வருகைத்தரும் பக்தர்களின் கைகளினால், நெய், மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்களைக் கொண்டு, தன்வந்திரி மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு இந்த லேகியம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் மருந்து தயாரித்து தன்வந்திரி பகவானுக்கு நிவேதனம் செய்து தீபாவளியன்று பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மாமருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் சில மணி நேரங்கள் காட்சி தருவார். இந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Sunday, October 15, 2017

கந்தர்வ ராஜ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கந்தர்வ ராஜ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இன்று 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற்றது.


இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்ற இந்த ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொன்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.64 Bhairavar Pooja with Ashta Bhairavar

64 Bhairavar Pooja with Ashta Bhairavar Yagam at Sri Danvantri Peedam, Walajapet. Thanks to " JAYA TV "

Saturday, October 14, 2017

கந்தர்வ ராஜ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

கந்தர்வ ராஜ ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி நாளை 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது.

மேலும் இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் நடைபெற்று வருகின்ற இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பும் ஆண்கள் கீழ்கண்ட முகவரியினை தொடர்பு கொள்ளவும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203


வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்…

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 28.10.2017ல்

வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்

( Vasthu Homam )

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் எனும் வகையில் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார்.
இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.

வாஸ்து பகவான் அமைப்பு:

வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்க, அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

வாஸ்து நாள் வாஸ்து ஹோமம்:

வருகிற 28.10.2017 சனிக்கிழமை அன்று ஐப்பசி மாதம் 11ஆம் தேதி வாஸ்து நாள் என்பதால் காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக வாஸ்து ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று நாம் வசிக்கும் இல்லங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும் மற்றும் தொழிற்ச்சாலைகளிலும் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி வளம்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

வாஸ்து தோஷத்தால் ஏற்படும்தொல்லைகள்:

கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில் சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள், தொழில் செய்யும் இடத்தில் நல்ல நம்பிக்கையான நபர்கள் இல்லாமை, பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்கவழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் ஏற்பட வழிவகை செய்யும். இத்தகைய தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும்  மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,

வாலாஜாபேட்டை-632513

தொலைபேசி : 04172-230033 / 09443330203