Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, April 30, 2017

Akshaya Tritiya 2017 Special Kubera Lakshmi Yagam Conducted at Sri Danvantri Arogya Peedam, Walajapet.







Special Homams on MAY 1st at Sri Danvantri Peedam, Walajapet.

தன்வந்திரி பீடத்தில் 

ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு

முப்பெரும் விழா



வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை  01. 05.2017திங்கள் கிழமை காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி,தொழிலாளர் தினம்,மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.
ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜென்ம தினத்தை முன்னிட்டு குரு அருள் கிடைக்கவும் குடும்பம் தழைக்கவும் நோயின்றி மக்கள் நலமுடன் வாழவும் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.
உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு  முலவர் தன்வந்திரிக்கு தேன் அபிஷேகம் நடைபெற உள்ளது.

வளர் பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க  சிறப்புகூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
தொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு பூஜைகளை ஸ்ரீ ராமானுஜரின் 1000 வதுஜெயந்தி விழாவை முப்பெரும் விழாவாக  நடைபெற உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்


Special Events and Homams From 12.05.2017-18.05.2017 at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்அருள் தரும் அற்புத ஹோமங்கள்.



ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன்  வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.05.2017 வெள்ளிக் கிழமை முதல் 18.05.2017 வியாழக்கிழமை வரை உலக நலன் கருதி அருள் தரும் அற்புத ஹோமங்களும் மஹா அபிஷேகமும் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.

12.05.2017 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை பெண்கள் திருமணத் தடை நீங்க சுயம்வர கலாபார்வதி  யாகத்துடன் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரிக்கு மஹா அபிஷேகம். நடைபெற்று பங்கேற்கும் பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

ஹோமத்தில் பங்கேற்க  நபர் ஒருவருக்கு காணிக்கை ரூபாய் .2200/-மட்டும்.

12.05.2017 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத் தடை நீங்க இந்திராட்சி ஹோமத்துடன் ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்று பங்கேற்கும் ஆண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும்.

ஹோமத்தில் பங்கேற்க  நபர் ஒருவருக்கு காணிக்கை ரூபாய் .2200/-மட்டும்

12.05.2017 வெள்ளிக் கிழமை சுக்ரகிரக தோஷம் அகலவும் சாபங்கள் நீங்கவும் ஸ்ரீ ரங்கநாதர் ஹோமமும் ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகமும் தாமரை பூக்களால் அர்ச்சனையும் நடைபெறும்.

ஹோமத்தில் 4 நபர்கள் பங்கேற்க ரூபாய் 1000/-மட்டும்.

12.05.2017 வெள்ளிக் கிழமை தரித்திரங்கள் நீங்கவும் லஷ்மி கடாட்சத்துடன் குபேர சம்பத்து கிடைக்கவும் கிரக பீடைகள் அகலவும் ஸ்ரீ லஷ்மி குபேர ஹோமத்துடன் 6 அடி உயரமுள்ள ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு பால் அபிஷேகமும் சொர்ண புஷ்ப அர்ச்சனையும் நடைபெறும்

ஹோமத்தில் 4 நபர்கள் பங்கேற்க ரூபாய் 1000/-மட்டும்.

13.05.2017 சனிக் கிழமை ஆயுள் தோஷம் நீங்கவும் ஆயுள் பலம் கூடவும் சனிகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலவும் சனிதிசை, சனிபுக்தி, சனி அந்திரம்,மற்றும் சனி பெயர்ச்சியால் ஏற்படும் தடைகள் அகலவும்  71/2 சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஜென்ம சனி,போன்றவைகளால் ஏற்படும் தீமைகள் குறையவும் சனிசாந்தி ஹோமத்துடன் ஆயுஷ் ஹோமம் நடைபெற்று 9 அடி உயரமுள்ள ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் 1 அடி உயரமுள்ள சிக்கல் தீர்க்கும் செந்தூர ஆஞ்சநேயருக்கும் மஹா அபிஷேகம் நடைபெறும்.

ஹோமத்தில் ஒரு நபர் பங்கேற்க ரூபாய் 2200/-மட்டும்.


14.05.2017 ஞாயுற்றுக் கிழமை  அனைத்து விதமான சாபங்கள் நீங்கவும் மஹா லஷ்மி கடாட்சம் கிடைக்கவும் காலை 6.30 மணியளவில் கோபூஜை பின்னர் குலதெய்வ தோஷங்கள் மற்றும் சாபங்கள் நீங்கி குலதெய்வ அருள் பெற்று குடும்பத்தில் சுபிட்சங்கள் ஏற்பட காலை 8.00 மணிக்கு ஸ்ரீ பால் முனீஸ்வர்ருக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். இதனை தொடர்ந்து இழந்த பொருட்கள் மீண்டும் பெறவும் இராஜாங்க தோஷங்கள் அகலவும் உத்தியோகம் வியாபாரம் தொழில் போன்றவைகளில் ஏற்படும் நஷ்டங்கள் விலகவும் காணாமல் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கவும். திருட்டு பயம் அகலவும் காவல் தெய்வங்களின் கருணை கிடைக்கவும் காலை 9.00 மணிக்கு  4 அடி உயரமுள்ள பச்சை நிறத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜீனருக்கு மஹா அபிஷேகமும் இரட்சாபந்தனமும் நடைபெறும். அன்றைய தினமே காலை மாணவ மாணவியருக்கு மருத்துவ  அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் இடம் கிடைத்து சிறந்த மருத்துவராக வேண்டியும் மருத்துவ மனைகள் நல்ல முறையில் இயங்கவும் மருத்துவர்களும் மருத்துவ துறை சார்ந்தவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் செயல்படவும் பொருளாதர தடை,ஆரோக்ய தடை நீங்கவும் மக்களின் உடல் ரீதியான நோய்கள், மனரீதியான நோய்கள் அகலவும் ஆட்கொல்லி,உயிர் கொல்லி நோய்களான புற்று நோய் இருதய நோய் சர்க்கரை நோய் சிறுநீரக கோளாறு மூளைக் காய்ச்சல் போன்ற பல்வேறு வகையான நோய்களிலிருந்து மக்கள் விடுபடவும் காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை மஹா தன்வந்திரி ஹோமம் நடைபெற்று ஸ்ரீ ஆரோக்ய லஷ்மிக்கும் 9 அடி உயரமுள்ள மூலவர்  ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகத்துடன் மூலிகை தீர்த்தாபிஷேகம் நடைபெற்று தைல பிரசாதம் வழங்கப்படும்.

மேற்கண்ட அனைத்து பூஜைகளிலும் ஹோமத்திலும் நான்கு நபர்கள் பங்கேற்க ரூபாய் 3000/-மட்டும்.


15.05.2017 திங்கட் கிழமை காலை 10.00 முதல் 12.00 மணிவரை மரண பயம் விலகவும் மாங்கல்ய தோஷம் அகலவும் இயற்கை வளம் பெறவும் நட்சத்திர தோஷங்கள் அகலவும் சந்திர திசை சந்திர புக்தியினால் ஏற்படும் இன்னல்கள் நீங்கவும் மண்வளம் மழைவளம் இயற்கை  வளம் பெற வேண்டியும் விவசாயிகள் நலம் பெறவும் ஸ்ரீ ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம் நடைபெறும்.

பூஜைகளிலும் ஹோமத்திலும் நான்கு நபர்கள் பங்கேற்க ரூபாய் 2000/-மட்டும்.


16.05.2017 செவ்வாய் கிழமை காலை 10.00  முதல் 12.00 மணி வரை பஞ்ச பூதம் மற்றும் அஷ்டதிக் பாலகர்களின் கருணையுடன்ஸ்ரீ வாஸ்து பகவான் அருள் பெற்று வீடு நிலம் மனை மண் மற்றும் சௌபாக்கியங்கள் ஏற்படவும் தடைபட்டு வருகின்ற கட்டிட பணிகள் திருப்பணிகள்  விரைவில் நிறைவடையவும் வீடு அலுவலகம் ஆலயங்கள் தொழிற்சாலைகள் வியாபார ஸ்தலங்கள் திருமண மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்க ஸ்ரீ வாஸ்து  சாந்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகமும் நடைபெற்று செங்கல்,மச்ச யந்திரம்,வாஸ்து யந்திரம், பூமி மண்,போன்ற பொருட்கள் பிரசாதஙகள் வழங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பூமி தோஷங்கள் அகலவும் பூமி தாயின் அருள் பெறவும் தேச நலம் தேக நலம் வேண்டியும் ஸ்ரீ பாரத மாதாவிற்கு மஹா அபிஷேகமும் நடைபெறும். இதனை தொடர்ந்து நவகிரகங்களால் ஏற்படும் தடைகள் அகன்று நன்மைகள் பெறவும் நட்சத்திர தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறவும் நட்சத்திர தேவதைகளின் அருள் பெறவும் தன்வந்திரி பீடத்தல்  காலசக்ர வடிவில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்சங்களுக்கும் 9 நவகிரக விருட்சங்களுக்கும் கால சக்கர பூஜையும் இரட்சாபந்தன வைபவமும் நடைபெறும்.

பூஜைகளிலும் ஹோமத்திலும் நான்கு நபர்கள் பங்கேற்க ரூபாய் 1000/- மட்டும்.

17.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணி வரை குரு அருளுடன் மாணவ மாணவிகள் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று அவரவர்கள் விருப்ப்ப்படி நல்ல பள்ளி கல்லூரிகளில் சேர்ந்து மேற்கல்வி தொடரவும் கல்வு கேள்வி பக்தி, ஞானம், வைராக்கியத்துடன் கலைகளில் தேர்ச்சி பெறவும் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமத்துடன் தன்வந்திரி பீடத்தில் வெளிர்பச்சை நிறத்தில்  4 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கு பாலாபிஷேகத்துடன் ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் நடைபெற்று ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்து எழுது பொருட்கள் வழங்கப்படும்.

பூஜைகளிலும் ஹோமங்களிலும் இரு நபர்கள் பங்கேற்க ரூபாய் 500/- மட்டும்.


இதனை தொடர்ந்து அனைத்து சாபங்கள் தோஷங்கள் நீங்கி தம்பதிகளுக்குள் அன்நோன்யம் ஏற்பட்டு  சந்தான பாக்கியம் பெற தத்த ஹோமம் நடைபெற்று தன்வந்திரி பீடத்தில் பச்சைநிறத்தில் 4 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு பால் அபிஷேகம் செய்து பால்பிரசாதம் வழங்கப்படும்.

பூஜைகளிலும் ஹோமங்களிலும் தம்பதிகள் பங்கேற்க ரூபாய் 1000/- மட்டும்.

18.05.2017 வியாழக் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  குரு அருள் வேண்டியும் குடும்பத்தில் மகிழ்ச்சி வேண்டியும் சீரடி சாய்பாபா,மஹா அவதார பாபா, மற்றும்  மகாவீர்ருக்கு பால் அபிஷேகமும் கல்வியில் சிறந்து விளங்கவும் தொழில் மேன்மையடையவும் சத்ரு உபாதைகள் நீங்கவும்  வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் பஞ்சபட்சி தோஷங்கள் அகலவும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஹோமம், ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ கருட ஹோமம் மற்றும் ஸ்ரீ சுதர்சன ஹோமம் நடைபெற்று இதனை தொடர்ந்து மஹா அபிஷேக ஆராதனையும் நடைபறும்.


பூஜைகளிலும் நான்கு ஹோமங்களிலும் பங்கேற்க ரூபாய் 1000/- மட்டும்.

Akshaya Tritiya Special Homams at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
அட்சயதிருதியை முன்னிட்டு குபேர லட்சுமி யாகத்துடன்
16 வகையான யாகங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அட்சயதிருதியை முன்னிட்டு இன்று 29.04.2017 இந்துக்களின் புனித மாதமான சித்திரை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி ஏகோபித்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பயன் தரும் 16 ஹோமங்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.இந்த யாகத்தில் திரு..மணிவண்ணன் DRO/ மேலாண் இயக்குநர் மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைஅம்முண்டி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

இன்று கீழ்கண்ட 16 ஹோமங்கள் நடைபெற்றது.


1.மகா கணபதி ஹோமம் காரியத்தடை நீங்க. 2.ஆயுஷ்ய ஹோமம் ஆயுள் பலம்பெற. 3.சரஸ்வதி 4.லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் கல்வி கேள்வி ஞானம்பெற்று அதிக மதிப்பெண்கள் பெற. 5.சுயம்வரகலாபார்வதி யாகம் பெண்களின் திருமணத்தடை நீங்க. 6.கந்தர்வராஜ ஹோமம் ஆண்களின் திருமணத்தடை நீங்க. 7.சொர்ண ஆகர்ஷ்ண பைரவர் யாகம் தொழில், உத்தியோகம் பெற. 8.தன்வந்திரி ஹோமம் நோய்கள் நீங்கி ஆரோக்யம் பெற.9.குபேர லட்சுமி யாகம் ஐஸ்வர்யம் பெற்று குடும்பம் ஷேமம் பெறவும். 10.நவக்கிரஹ சாந்தி ஹோமம் நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்கள் அகல. 11.சனிசாந்தி ஹோமம் சனிக்கிரஹத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய. 12.கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம் இழந்ததை மீண்டும் பெற. 13.வாஸ்து சாந்தி ஹோமம் வாஸ்து தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற. 14.நட்சத்திர சாந்தி ஹோமம் நட்சத்திர தோஷங்கள் நீங்கி நன்மைகள் பல பெற. 15.சந்தான கோபால யாகம் குழந்தைபாக்யம் பெற. 16.மஹா காலபைரவர் ஹோமம் அனைத்து கவலைகளும், தடைகளும் நீங்க., முக்தி பெறவும் மேற்கண்ட 16 வகையான ஹோமங்கள் சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு ஆகம முறைப்படி முறையாக செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதனை தொடர்ந்து நாளை  லஷ்மி குபேர்ருக்கு விஷேச அபிஷேகமும், சொர்ண புஷ்ப அர்ச்சனையும் நடைபெற உள்ளது



Wednesday, April 26, 2017

Amavasai Homam at Sri Danvantri Arogya Peedam, Walajapet

தன்வந்திரி பீடத்தில் இன்று நெய் மிளகாய் யாகம்
நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 26.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம். சத்ரு சம்ஹார ஹோமம் சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம்,மஞ்சள் மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் முடிந்தவுடன் பிரசாதம் வழங்கப்பட்டது...  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











Monday, April 24, 2017

Kaarya Siddhi Homams at Sri Danvantri Arogya Peedam for the Month of MAY 2017


108 Sankaabhishekam and Somavara Pradosha Pooja Held at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

தன்வந்திரி பீடத்தில்
 மழை வேண்டியும் வெப்பம் தனியவும்
108 சங்காபிஷேகமும்  சோம வார பிரதோஷ பூஜையும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 24.04.2017  திங்கட்கிழமை சோம வார பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு 108 சங்குகளை கொண்டு சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் பால்,தயிர்,பழம்சந்தனம், பன்னீர் இளநீர், கொண்டு மஹா அபிஷேகமும் வில்வ இலைகளாலும், வன்னி இலைகளாலும் அர்ச்சனையும் நடைபெற்று மஹா தீபாரதனையுடன் சங்குதீர்த்தப் பிரசாதமும் தயிர் சாதமும் வழங்கப்பட்டது.சங்காபிஷேகத்தில் பங்கேற்றவர்கள் இறைவன் அருளால் மழை பெய்து வெப்பம் தனியவும் விவசாயிகள் நலம் பெறவும் இயற்கை வளம் பெறவும் மன அமைதி பெறவும் .ஐஸ்வர்யங்கள் வேண்டியும், சகல விதமான நோய்கள் அகலவும், கங்கா தேவியின் ஆசி கிடைக்கவும், நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் குறையவும் நந்தி தேவனையும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரனையும் ப்ரார்த்தனை செய்தனர்.

நாளை 25.04.2017 ஸ்ரீ ரங்கநாதருடைய ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பால ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை நடைபெறயுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Amavasai Special Yagams at Sri Danvantri Arogya Peedam, Walajapet on 26.04.2017

தன்வந்திரி பீடத்தில்
அமாவாசையில் நெய் மிளகாய் யாகம்



வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் வருகிற 26.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பித்ரு தோஷம் நீங்க பித்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீபாதம்,ஸ்ரீ அத்ரி பாதம், அனுசுயாதேவி, ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,மற்றும் ஸ்ரீ ராகுகேதுவிற்க்கு சிறப்பு பால் அபிஷேகமும் நடைபெற உள்ளது.
அமாவாசை என்பதால் நண்பகல் 12.00 மணியளவில் மஹா ப்ரத்தியங்கிரா சன்னதி முன்பு நெய் மிளகாய் கொண்டு சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது மேலும் ஸ்ரீ ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிகப்பு குங்குமம்,மஞ்சள் மற்றும் பால்,போன்ற பொருட்களால் மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.என்ற தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமாவாசை யாகத்தின் சிறப்பு :

பித்ரு தோஷம் நீங்கும். தடைபட்ட திருமணம் நடைபெறும்..

விவாகரத்து ஆனவர்களுக்கு வாழ்வு மலரும். தம்பதியரிடையே அன்னியோன்னியம் ஏற்படும். குழந்தை பாக்கியம் ஏற்படும்.கடுமையான உடல் உபாதைகள் நீங்கும், மனநோகலும் முறையான திருமணம் நடக்கும், கருச்சிதைவை தடுக்கும். ஆண்வாரிசு ஏற்படும். துர்மரணம் ஏற்படாது. போன்ற பல்வேறு நன்மைகள் ஏற்படும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.