Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, September 30, 2022

2008 Varahi Deepam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

 நவராத்திரி 5ம் நாள் விழா ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ  சம்பதமாதாக்கள் ஹோமங்கள்,சிறப்பு அபிஷேகம் பூஜைகள்.

வளர்பிறை  பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராஹி ஹோமம், அபிஷேகம்

மாலையில் 2008 வராஹி  தீபம் ஏற்றப்பட்டது.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்& 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 5ம் நாளான இன்று 30ம்தேதி   வெள்ளிக்கிழமை

ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு  ஹோமங்கள்   மற்றும் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது .

அகிலாண்ட தேவியாக இருந்து  தினமும் அன்னம்  வழங்கும்  மாதா ஸ்ரீ அன்ன பூரணி தேவிக்கும் , கிராம,எல்லை தேவதைகளாக இருந்து காத்து  வரும் ஸ்ரீ சப்தமாதாக்களும் ஹோமங்கள், அபிஷேகங்கள் நடத்தி  அன்னதோஷம் அகலவும்,  அளவில்லா அன்னம் கிடைத்திடவும் , விவசாயம், விவசாயிகள் செழிக்கவும், கிராமங்கள் , நகரங்கள் செழிக்கவும் , தரித்திரங்கள் நீங்கிட  பிரார்த்தனை நடைபெற்றது. 

காசிக்கு நிகராக அருள்பாலிக்கும் அன்னபூரணி என பக்தர்களால் அழைக்கப்படும்  ஸ்ரீ அன்னபூரணி தேவி , வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தங்க அன்னபூரணியாக காட்சி  அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

தொடர்ச்சியாக  வளர்பிறை பஞ்சமி, லலிதா பஞ்சமி,  நவராத்திரி ஆகியவற்றை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு ,

 ஸ்ரீ வராஹி ஹோமம், சிறப்பு அபிஷேகம்  நடைபெற்று, வராஹி அம்மனுக்கு 1000 நுனி வாழை இலைகளில் , அரிசி, பூ, மஞ்சள்,குங்குமம், தாம்பூலம் வைத்து 2008 தேங்காய்களில் நெய் தீபமும், 1000 எலுமிச்சம்  பழங்களில் நல்எண்ணெய் தீபமும்  என வராஹி தீபம் ஏற்றப்பட்டு  ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு வழிபாடு செய்யப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.







Thursday, September 29, 2022

Sri Arokya lakshmi, Sri Kajalakshmi Homams at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  நவராத்திரி 4ம் நாள் விழா ஸ்ரீ ஆரோக்யலஷ்மி, ஸ்ரீ கஜலஷ்மி ஹோமங்கள்,சிறப்பு அபிஷேகம் பூஜைகள்.நாளை வராஹி  தீபம் ஏற்றப்படுகிறது.

வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்- 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

நவராத்தியில் 4ம் நாளான இன்று 29ம்தேதி வியாழக்கிழமை, மாபெரும் ஆரோக்யலஷ்மி ஹோமம், கஜலஷ்மி ஹோமம்  மற்றும் சிறப்பு அபிஷேகம் , பூஜை நடைபெற்றது .

அஷ்டலஷ்மிகளின் அருள் நமக்கு பரிபூரணமாக  கிடைத்தாலும்அதை அனுபவிக்க ஆரோக்யலஷ்மியின்  அருள் மிகமிக அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே அந்த வகையில் ஹோமத்தில்  உலக மக்களுக்கு ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் வேண்டி  பிரார்த்தனை செய்யப்பட்டது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மட்டுமே ஆரோக்யலஷ்மிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

நவராத்தி 5ம் நாளான  நாளை 30ம்தேதி வெள்ளிக்கிழமை  ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சப்தமாதாக்கள் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக பூஜைகளும் நடைபெறுகிறது.

மேலும் வளர்பிறை பஞ்சமி, லலிதா பஞ்சமி,  நவராத்திரி ஆகியவற்றை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு , வராஹி ஹோமம், சிறப்பு அபிஷேகம், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

இதன் தொடர்ச்சியாக  மாலையில்  வராஹி அம்மனுக்கு 1000 நுனி வாழை இலைகளில் , அரிசி, பூ, மஞ்சள்,குங்குமம், தாம்பூலம் வைத்து 2000 தேங்காய்களில் நெய் தீபமும், 1000 எலுமிச்சம்  பழங்களில் நல்எண்ணெய் தீபமும்  என வராஹி தீபம் ஏற்றப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.





Wednesday, September 28, 2022

Sri Gayathri devi, Sri Navakannigai, Sri Mancha matha Homams at Sri Danvantri Arokya Peedam Navarathri 3rd day

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 3ம் நாள் விழா ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ நவகன்னிகைகள், ஸ்ரீ மஞ்சமாதா ஹோமங்கள், அபிஷேகம் பூஜைகள்.

 வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,  நவராத்திரி விழா 10 நாட்கள்& 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  சைவம், வைணவம், ஸ்ரீசாக்தம்,சௌரம், கௌமாரம், காணாபத்யம் என 6 மதங்களுக்கு உரிய  தெய்வங்களை பிரதிஷ்டை செய்து  அதற்குரிய  ஹோமம் , பூஜைகள் உலக நன்மை வேண்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீசாக்த தெய்வங்களை முன்னிறுத்தி  நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 

நவராத்திரி 3ம் நாளான  இன்று 28ம்தேதி புதன்கிழமை ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ நவகன்னிகைகள், ஸ்ரீ மஞ்சமாதா ஆகிய தெய்வங்களுக்கு  ஹோமங்களும், பால்,  தயிர், சந்தனம், மஞ்சள் , பன்னீர் போன்ற திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், பூஜைகள்  நடைபெற்றது.

 ஸ்வாதி நட்சத்திரத்தை ஒட்டி ருணம், ரோகம், சத்ரு  தொல்லை போக்கும்  தெய்வமாக வழிபடும் ஸ்ரீலஷ்மி நரசிம்மரை  வேண்டி  ஸ்வாதி ஹோமமும், அபிஷேகமும்  நடைபெற்றது. 

 ஸ்ரீ காயத்ரி தேவி, ஸ்ரீ நவகன்னிகைகள் ,  ஸ்ரீ மஞ்சமாதா,ஸ்ரீலஷ்மி நரசிம்மர்  அருள், பரிபூரண அனுக்கிரகம் வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது. 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடத்தில் உள்ள ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கூர்ம அவதாரத்தின் மேல் காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

 நவராத்திரியில் 4ம் நாளான நாளை 29ம் தேதி  வியாழக்கிழமை  ஸ்ரீஆரோக்ய லஷ்மி, ஸ்ரீ கஜலஷ்மி ஆகியோருக்கு சிறப்பு ஹோமங்களும் , அபிஷேக,  பூஜைகளும் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.







Tuesday, September 27, 2022

Navarathri 2nd day Sri Varahi Homam at Sri Danvantri Arokya peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 2ம் நாள் விழா                           ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்குஹோமம், அபிஷேகம் பூஜைகள்.


வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,
நவராத்திரி விழா 10 நாட்கள்- 16 ஹோமங்கள் என்ற வகையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

நவ





ராத்திரி 2ம் நாளான  இன்று 27ம்தேதி  செவ்வாய்க்கிழமை , வாழ்வில் பல்வேறு தடைகளை நீக்கி  நம்மை  வெற்றிப்பாதையில்   கொண்டு செல்லும் அன்னை

ஸ்ரீ வராஹிக்கு  ஹோமம் நடைபெற்றது.

தன்வந்திரி பீடத்தில்  உள்ள ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு
பால்,  தயிர், சந்தனம், மஞ்சள் , பன்னீர் போன்ற திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ,  பூஜை நடைபெற்றது.

ஹோமத்தில் ஸ்ரீ வராஹி அம்மனுக்கு உகந்த கிழங்கு வகைகள்  வைத்து பிரார்த்தனை செய்து யாகத்தில் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து வராஹி தீபம் ஏற்றப்பட்டது.

கோடி ஜெப தொடர் யாகம் நடைபெற்று வருவதை ஒட்டி  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி  பகவானுக்கு சிறப்பு  பூஜைகள் நடைபெற்றது.
 
இந்த ஹோமம் மற்றும் பூஜைகளில்  கர்நாடக மாநிலம், ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர். குப்தா, வேலூர் பத்மாவதி பிரஸ் உரிமையாளர் குணசேகரன்  ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 நவராத்திரியில் 3ம் நாளான நாளை 28ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ நவகன்னிகைகள்,ஸ்ரீ காயத்ரி தேவி,ஸ்ரீ மஞ்சமாதா ஆகியோருக்கு சிறப்பு ஹோமங்களும் , அபிஷேக,  பூஜைகளும் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Monday, September 26, 2022

NAVARATRI HOMAMS at Sri Danvantri Arokya Peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

10 நாட்கள், 16 ஹோமங்கள்

 




89 திருச்சன்னதிகள் ,468 சிவலிங்கங்கள்  மூலவராக   கொண்டு  அன்றாடம்  ஹோமங்கள், பூஜைகள், யக்ஞங்கள் நடைபெற்று வரும் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  நவராத்திரியில் பக்தர்கள் தேவியின் அருளுடன்,  நலமும் பெற தினந்தோறும் ஹோமங்கள் என்ற வகையில் 10 நாட்கள், 16 ஹோமங்கள் நடைபெற உள்ளது. 

 இன்று 26.9.2022ம் தேதி தொடங்கி வருகிற 5.10.2022 புதன் கிழமை முடிய தினசரி அந்தந்த தெய்வங்களுக்கு  சிறப்பு ஹோமங்கள் , அபிஷேக, ஆராதனைகள்  நடைபெறுகிறது. 

 நவராத்திரி தொடக்க நாளான இன்று 26ம்தேதி காலை  மங்கள வாத்தியத்துடன் பூர்வாங்க பூஜை, கோ பூஜை, மகா கணபதி சங்கல்பத்துடன் ஸ்ரீ மகா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம், ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி ஹோமம் ஆகியவையும், அன்னதானமும் , தீப அலங்கார சேவையும் நடைபெற்றது.

 இனி வரும் நாட்களில் கீழ் கண்டவாறு ஹோமங்கள் நடைபெறுகிறது. 

27.9.2022- ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஹோமம்.

28.9.2022-ஸ்ரீநவகன்னிகைகள், ஸ்ரீகாயத்ரி தேவி,ஸ்ரீ மஞ்சமாதா ஹோமங்கள்

29.9.2022-ஸ்ரீ ஆரோக்யலஷ்மி,ஸ்ரீ கஜலஷ்மி ஹோமங்கள்.

30.9.2022-ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ சப்தமாதா ஹோமங்கள்

1.10.2022- ஸ்ரீ தாய்மூகாம்பிகை,ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஹோமங்கள்

2.10.2022- ஸ்ரீ அஷ்ட புஜ மரகத ராஜமாதங்கி ஹோமம்

3.10.2022-ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி ஹோமம்,

4.10.2022- ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீவாக் தேவி சமேத சதுர்முக பிரம்மா ஹோமங்கள்

5.10.2022- ஸ்ரீ  மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகை ஹோமம்.

ஆகிய ஹோமங்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை                          ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்

Sunday, September 25, 2022

Mahapiratyamkira Homam (1008 plate red chilli)at Sri Danvantri Peedam

1000 தட்டில் மிளகாய் வற்றல் கொண்டு  மகா ப்ரத்யங்கிரா ஹோமம்  உள்பட பல்வேறு ஹோமங்கள்,3008 சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டு, அன்னதானம் 
 மஹாளய அமாவாசையை முன்னிட்டு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
 
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி 
 யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 25ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, மஹாளய அமாவாசையை முன்னிட்டு
 ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் ஹோமம், பகவதி சேவா, குருதி பூஜை ,
 1000 தட்டுகளில்  மிளகாய் வற்றல், மூலிகைகள், நவதானியங்கள்,
 மஞ்சள், குங்குமம் போன்ற சௌபாக்ய பொருள்கள் கொண்டு சரப சூலினி 
மகா ப்ரத்யங்கிரா  யாகமும், திருஷ்டி துர்கா ஹோமம்,  ஸ்ரீ மகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம்  ஆகியவையும், ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு  3008 தேங்காய்கள் சிதறு காய்களாகவும் உடைக்கப்பட்டது.

மஹாளய அமாவாசையை ஒட்டி நடைபெற்ற பூஜைகள், அபிஷேகம், ஹோமங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு  சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. 
  
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Saturday, September 24, 2022

Puratasi saturday Maavilakku at Sri Danvantri Arokya Peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை  முன்னிட்டு 108 மாவிளக்கு பூஜை , புஷ்பாஞ்சலி 

 வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 24ம்தேதி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு காலை 10 மணிக்கு  மூலவர்  ஸ்ரீ தன்வந்திரி பகவான்  சன்னதியில், தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து  108  மாவிளக்கு பூஜையுடன் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

புரட்டாசி  மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி நடைபெற்ற இந்த சிறப்பு மாவிளக்கு பூஜை மற்றும் புஷ்பாஞ்சலியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்ரீ தன்வந்திரி பகவானை வணங்கி வழிபாடு செய்து , ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடமும் ஆசி பெற்று சென்றனர்.  

  நாளை 25ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசையை ஒட்டிகாலை 10 மணி முதல் ஸ்ரீ விநாயகர் தன்வந்திரிக்கு 3008 சிதறு தேங்காய்கள் உடைத்து, 1000 தட்டில் மிளகாய் வற்றல், மூலிகைகள், நவதானியங்கள், மஞ்சள், குங்குமம் போன்ற சௌபாக்ய பொருள்கள் கொண்டு சரப சூலினிமகா ப்ரத்யங்கிரா  யாகமும்,  மாலையில்  திருஷ்டி துர்கா யாகத்துடன் ஸ்ரீ மகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம், பகவதி சேவா, குருதி பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.




Friday, September 23, 2022

Pirathosam at Sri Danvantri Arokya Peedam

 பிரதோஷ பூஜை 

 பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும்,  ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதீஸ்வரருக்கும்  பஞ்ச திரவியங்களுடன்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

 பூஜையில் கலந்து கொண்ட  பொதுமக்கள், பக்தர்களுக்கு   யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன், பிரசாதமும் வழங்கினார். 

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  உள்ள ஸ்ரீ மரகதேஸ்வரர்  பீடத்திலேயே நந்தி பகவானும் இடம் பெற்றுள்ளது. இந்த சிறப்பு வேறு எங்கும் இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.



இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Maavilakku Poojai on 24.9.2022 at Sri Danvantri Arokya Peedam


 

Sarpapali,Narayanapali, Sarpa yagam at Sri Danvantri Peedam

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 3 நாட்களாக நடைபெற்று  வந்த சர்ப்பயாகம், நாராயண பலி, சர்ப்ப பலி பூஜைகள் நிறைவு  

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின ஆக்ஞைப்படி கடந்த 20ம்தேதி முதல்  22ம்தேதி முடிய  3 நாட்கள் சர்ப்ப யாகத்துடன்  சர்ப்ப பலி, நாராயணபலி ,சம்பூர்ண பூஜைகள்  நடைபெற்றது. 

இந்த சர்ப்பயாகத்தை ஒட்டி பகவதி சேவா, குருதி பூஜை,கால பைரவர் பூஜை போன்ற விசேஷ  பூஜைகள் நடைபெற்று நேற்று காலை 

சர்ப்ப யாகத்திற்கான   மகா கணபதி ஹோமம், பாயச ஹோமம்,  அடிச்சு தளி நைவேத்தியம்,  நூறும் பாலும்  பூஜைகளும்  நடைபெற்றது.

இதை தொடர்ந்து நேற்று 22ம்தேதி இரவில் நாராயணபலி, சர்ப்ப பலி பூஜைகள்  நடைபெற்றது.

இதில் சர்ப்ப தோஷங்கள், சர்ப்ப கோபங்கள், கால சர்ப்ப தோஷம்,  நாக தோஷம், ஆயில்ய நட்சத்திர தோஷங்களி விலகி , தடைகள் விலகி வாழ்வில் சுபிட்சம் பெற பிரார்த்தனைகள் நடைபெற்றது. 








மேற்கண்ட பூஜைகள், யாகங்களில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பால், மஞ்சள்,திரிமதுர பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  

Sunday, September 18, 2022

Sri Sarabeswarar Abishegam at sri Danvantri Arokya Peedam 18.9.2022

 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ராகுகாலத்தில் ஸ்ரீசரபேஸ்வரர் 

சிறப்பு அபிஷேகம்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி இன்று   18.9.2022 ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை  4.30--




6.00  ராகுகாலத்தில் , ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் ,4 அடிஅகலத்தில்  விசேஷமான முறையில்  அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரபேஸ்வரருக்கு  சரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு  அபிஷேக பூஜை நடைபெற்றது. 

 இந்த யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக  பூஜைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு சகலவிதமான பிரச்சனைகளும் நீங்கி தேவைகள் பூர்த்தியடைய  ஸ்ரீ சரபேஸ்வரரை  தீபம் ஏற்றி  வணங்கி  வழிபாடு நடத்தினர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Thei Pirai Astami 10 Bairavars yagam Abishegam, poojai at Sri Danvantri Arokya peedam

 ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில்   தேய்பிறை அஷ்டமி மகா பைரவர் யாகம்  10  பைரவர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் 

வாலாஜாபேட்டை,ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு 

டாக்டர். ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  இன்று  18.9.2022ம்தேதி  தேய்பிறை அஷ்டமியை   முன்னிட்டு பைரவர்கள் மகா யாகம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

யாகத்தை  முன்னிட்டு உலகில் வேறு எங்கும் காணமுடியாத வகையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,   அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என ஒரே கல்லில்  அஷ்ட பைரவர்களுடன் அமைந்துள்ள 

ஸ்ரீ அஷ்ட கால மகா பைரவர் மற்றும் தனிசன்னதி கொண்டுள்ள  ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரும் என மொத்தம் 10 பைரவர்களும்  மகா யாகம் நடத்தி பூர்ணாஹூதி செய்யப்பட்டது.

 பின்னர் 10 பைரவர்களுக்கும்  பஞ்ச திரவிய அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

 இந்த யாகம் மற்றும் அபிஷேக, பூஜைகளில் பக்தர்களின் சகல விதமான தோஷங்கள்   நீங்கி தேவைகள் பூர்த்தி அடைய  பிரார்த்தனை செய்யப்பட்டது.





யாகம் மற்றும் அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்ட  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.