Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, January 29, 2014

27-foot Prathyankara Devi idol at Peedam

A 27-foot, Aishwarya Prathyankara Devi idol would be installed by Maha Peedam, Walajapet, shortly, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has said.

A special Maha Kali Prathyankara Devi homam would be held from March 28 to 30 when a joint prayer would be held. From December 19 to 25, 2013, a 12-foot deep and 16 foot wide yaagakundam was used for a special Prathyankara Devi homam adjacent to the Peedam complex. 6,000 kilos of red chillies were used in the homam among other material. This spot would be developed as a Maha Peedam where the 27-foot Aishwarya Prathyanakara idol would be installed, Swamigal said adding that along with the idol, Arthameru and Akanda Deepam would also be installed.

Devotees have been asked to write the following mandhiram:

"Sri Om Mahapeeda Pratyangira Devyai Namaha  --

Om Sri Mahapeeda Badrakaali Devyai Namaha"  

27 times on separate sheets of paper and send it to the Peedam in Walajapet before April 14 for these papers to be placed at the basement of the idol.  

Those who seek prasadam of the March 28-30 homam, should send a self-addressed envelope with Rs 10 stamp to the Peedam.

Writing the mandhirams and sending the same to the Peedam would help devotees get rid of various doshas and drishtis and evils, and bring benefits in the fields of trade, agriculture, education and help get married or get progeny and so on.

The mandhirams should be sent to  Maha Peedam, C/O Sri Danvantri Arogya Peedam, Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.

அன்புடன் அழைக்கிறோம்


Tuesday, January 28, 2014

தன்வந்திரி பீடத்திற்கு ப்ரத்யங்கிரா பீடத்தின் பீடாதிபதி சப்தகிரி அம்மா அவர்கள் வருகை ...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு ப்ரத்யங்கிரா பீடத்தின் பீடாதிபதி சப்தகிரி அம்மா அவர்கள் வருகை புரிந்தார். ஸ்வாமிகளுக்கு தன்வந்திரி குடும்பத்தினர் பூர்ண கும்ப மரியாதை வழங்கினர். பின்னர் பீடத்தின் மூலவர் தன்வந்திரி பகவானையும், இதர 69 பரிவார தெய்வங்களையும் சுற்றி சேவித்தார். சப்தகிரி ஸ்வாமிகள் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்தித்து ஆசி பெற்று மகிழ்ந்தார்.

மேலும் கடந்த மாதம் 19.12.2013 முதல் 25.12.2013 வரை 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு ப்ரத்யங்கிரா யாகம் நடந்த இடத்தில் 27 அடி உயர ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி மகா பீடம் அமைய இருக்கிற இடத்தை பார்வையிட்டார்.



தேவை மகா காளி ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி மந்திரங்கள்…

வேண்டியது அனைத்தும் அருளும் அதர்வண வேத மந்திரம் இதோ...

ஸ்ரீ ஓம் மகாபீட ப்ரத்யங்கிரா தேவ்யை நம:
ஓம் ஸ்ரீ மகாபீட பத்ரகாளி தேவ்யை நம:

Sri Om Mahapeeda Pratyangira Devyai Namaha

Om Sri Mahapeeda Badrakaali Devyai Namaha

வாலாஜாபேட்டையில் 27 அடி உயர ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி பீடம் விரைவில்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில், அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், சென்ற மாதம் 19.12.2013 முதல் 25.12.2013 வரை 12 அடி ஆழமும் 16அடி விட்டமும் கொண்ட பிரமாண்ட யாக குண்டத்தில் 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மகாபிரத்யங்கிரா தேவி யாகம் நடத்திய இடத்தில் மகா பீடம் அமைத்து 27 அடி உயர ஐஸ்வர்ய ப்ரயத்யங்கிரா தேவியை விரைவில் ப்ரதிஷ்டை செய்ய உள்ளார். இத்துடன் அர்த்தமேரு மற்றும் அகண்ட தீபமும் ப்ரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இந்த ப்ரதிஷ்டையில் உலக மக்கள் அனைவரும் பங்கேற்கும் விதத்தில் பக்தர்களிடம் மேற்கண்ட மகா காளி ப்ரத்யங்கிரா தேவி மந்திரத்தை எழுதி அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் கைப்பட எழுதி அனுப்பிய மந்திரங்களை விக்ரஹத்தின் கீழ் ப்ரதிஷ்டை செய்ய உள்ளோம்.

எனவே பக்தர்கள் பக்தி சிரத்தையுடனும், மன அமைதியுடனுடம் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து தங்களுக்கு தெரிந்த மொழிகளில் மேற்கண்ட இரு மந்திரங்களையும் தனித்தாளில் தலா 27 முறை எழுதி முழு முகவரியுடன் வருகிற தமிழ் வருடபிறப்பிற்குள் (14.04.2014) அனுப்பி வைத்து அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம்.

கோரிக்கைகள் நிறைவேற்ற மார்ச் 28 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் மகா காளி ப்ரத்யங்கிரா தேவி ஹோமத்தில் வைத்து கூட்டு ப்ரார்த்தனை நடைபெற உள்ளது. பிரசாதம் வேண்டுவோர் ரூ.10 மதிப்புள்ள தபால்தலை ஒட்டி சுய விலாசமிட்ட முகவரியுடன் எழுதி அனுப்புவோருக்கு பிரசாதம் இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

மந்திரம் எழுதுவதின் பலன்கள்...
கண் த்ருஷ்டி, ஓம்பல், செய்வினைக் கோளாறு, தேவையற்ற பயங்கள், எதிரிகள் தொல்லை, சத்ரு பயம், பித்ரு தோஷம், மரண பயம், மாங்கல்ய தோஷம், தேவையற்ற தடைகள், நாக தோஷம், சர்ப தோஷம், நவக்ரஹ தோஷங்கள், உடல் உபாதைகள், கொடிய நோய்கள் போன்றவைகள் நீங்கி திருமணம், குழந்தைபேறு, தொழில், வியாபாரம், உத்யோகம், விவசாயம், கல்வி, கேள்வி மற்றும் இன்னும் பல செயல்களில் நல்ல ஒரு முன்னேற்றமானது ஏற்படும்.

எழுதி அனுப்ப வேண்டிய முகவரி…
மகா பீடம்
C/o. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
தன்வந்திரி நகர், கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513. வேலூர் மாவட்டம்.
தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி : 04172-230033
www.mahapeedam.com
E-Mail : mahapeedam@hotmail.com


Sunday, January 26, 2014

தன்வந்திரி பீடத்தில் குடியரசு நன்னாளில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது…



வாலாஜா, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நன்னாளில் பீடத்தில் அமைந்துள்ள பாரத மாதாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் காலச்சக்ரத்தின் நடுவில் அமைந்துள்ள கொடிக்கம்பத்தில் குடியரசுதினத்தை முன்னிட்டு சுவாமிகளின் திருக்கரங்களினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நன்னாளில் உலக நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்களான,
  • சகல தோஷங்களும் நீங்க வேண்டி சகல தோஷ நிவாரண ஹோமம்
  • சத்ருக்களின் எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட வேண்டி சர்வ சத்ரு நிவாரண ஹோமம்.
  • திருமணமாகத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சுயம்வரகலா பார்வதி ஹோமம்.
  • சகல ஐஸ்வர்யங்களும் பெற வேண்டி சகல தேவதா ஹோமம்.
என மேற்கண்ட சிறப்பு ஹோமங்களை சிறந்த வேத விற்ப்பன்னர்களைக் கொண்டு, பலவிதமான மூலிகைகள், பழங்கள், பட்டுவஸ்த்திரங்கள் மற்றும் பலவிதமான பூக்கள், திரவியங்கள் முதலியவைகளை சமர்ப்பித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தி வைத்தார்.

இந்த ஹோமங்களில் சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களில் இருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு ப்ரார்த்தனை செய்தனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பங்கேற்றனர்.










Wednesday, January 22, 2014

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் 144வது ஜெயந்தி விழா நடைபெற்றது...

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் 144வது ஜெயந்தி விழா இன்று 22.01.2014 தை 9 ம் தேதி புதன் கிழமை காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் விசேஷ ஹோமமும், மஹா அன்னதானமும், அபிஷேகமும், கூட்டுப்பிரார்த்தனையும், மஹா தீபாராதனையும், நவாவர்ண பூஜையும் நடைபெற்றது. மேலும் பக்தி சங்கீர்த்தனங்களும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தன்வந்திரி பீடத்தில் மட்டுமே குழந்தையானந்த சுவாமிகளுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் இருவரையும் ஒரு சேர தரிசித்து மகிழ்ந்தனர்.

சேஷாத்ரி சுவாமிகளின் அற்புதங்கள்…
இவர் 1870ம் ஆண்டு பிறந்தார். இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார்.இவரின் வரலாறை கேட்டால் வித்தியாசமானது. இவர் தங்கக்கை சேஷாத்ரி என்றும் அழைக்கப்பட்டார். இதற்க்கு காரணம் இவர் சிறுவயதாக இருந்தபோது இவர் ஊரில் இருந்த கண்ணன் கோவிலில் விழா நடந்தது. அந்தகோவில் விழாவிற்க்கு இவர் தன் தாயுடன் சென்று இருந்தார் அந்தநேரமாகஅந்தக்கோவிலில் ஒருவன் பொம்மை விற்று கொண்டிருந்தான் .

சிறு குழந்தையான சேஷாத்ரி பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்க தாய் வேண்டாம் என்றார். இதை பார்த்த பொம்மை விற்றவன் அம்மா சிறு குழந்தை கேட்கிறது உங்களிடம் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை ஒரு பொம்மை நான் சும்மா தருகிறேன் என்று சேஷாத்ரியிடம் ஒரு பொம்மையை கொடுத்தான்.

சிலமணிநேரங்களுக்கு பிறகு சேஷாத்ரியை தேடி பொம்மை விற்பவன் வந்தான் அம்மா இது சாதாரண குழந்தை இல்லை ஞானக்குழந்தை என்றான். ஏனென்றால் சற்றுமுன் என்னிடம் நிறைய பொம்மைகள் இருந்தன பலநாட்களாக அந்த பொம்மைகள் விற்கவில்லை இப்போது விற்று தீர்ந்துவிட்டது இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை இது சாதாரண கை இல்லை தங்கக்கை என்று பாராட்டினான் அதனாலேயே இந்தபெயர் வந்தது.

ஞானமார்க்கத்தை தேடிய சேஷாத்ரி தனது இளமைப் பருவத்தில் திருவண்ணாமலை வந்தார் அங்கேயே சுற்றி திரிந்தார் இவர் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் குளிப்பார் அங்கு வரும் பக்தர்களில் சிலர் மீது மட்டும் [கடும் தோஷம் உடைய] பக்தர்கள் மீது தண்ணீரை வாயில் கொப்பளித்து துப்புவார் பலருக்கு பல்வேறு விதமான நோய்கள் தீர்ந்து இருப்பதாக இதனால் நம்பப்படுகிறது. பலருக்கு பல்வேறுவிதமான தோஷங்கள் விலகிஉள்ளது. இவர் திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் இருக்கமாட்டார் இவரை கிறுக்குச்சாமி என்றும் அழைக்கப்பட்டார் அதற்க்குகாரணம் இவர் ஊரை சுற்றி வந்துகொண்டே இருப்பார் எந்தநேரத்தில் எந்தசெயலை செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது. திடீரென்று ஒரு கடைக்குள் செல்வார் கடையில் உள்ள நெய்டின்னை தட்டிவிடுவார் கடைக்காரருக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும் இப்படி இவர் செய்வதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்த மக்களும் வியாபாரிகளும் இவர் பார்வை நம் மீது படாதா என ஏங்குவர். ஆனால் சரியான நபருக்கு மட்டுமே இவரின் கருணைப்பார்வை படும். ஒருமுறை ஒரு சவஊர்வலம் சென்று கொண்டிருந்தது அதன் பின்னே சென்ற இவர் திடீரென ஒரு கல்யாணவீட்டிற்க்குள் சென்றார்.

சவ ஊர்வலத்தில் கலந்துவிட்டு தீட்டோடு கல்யாணத்திற்க்குள் வருகிறானே என்று அனைவரும் இவரை விரட்டினர் எதையும் பொருட்படுத்தாமல் சமையலறையில் வைத்து இருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் கல்யாணவிருந்திற்காக வைத்து இருந்த சாம்பாரை தட்டிவிட்டார். ஆத்திரமடைந்தவர்கள் அவரை அடிக்கப்பாய்ந்தனர் திடீரென ஒருவர் அவரை அடிக்காதீர்கள் சாம்பாரை பாருங்கள் என்று காண்பித்தார் அதற்க்குள் ஒரு நாகம் இறந்து கிடந்தது சுவாமிகளின் சக்தியை நினைத்து அவரை கையெடுத்து வணங்கினர் மக்கள் அனைவரும். இப்படி இவரின் வரலாறு அதிகம். ஒரு முறை ஊரில் அம்மை நோய் அதிகம் இருந்தது யாரும் வெளியில் வரக்கூடாது என்ற ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவை மீறி வெளியில் வந்தார் இவரை 15 நாட்கள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.


இரண்டு நாட்களுக்கு பிறகு விழுப்புரம் செல்வதற்கு நீதிபதி காரில் சென்று கொண்டிருந்தபோது நீதிபதியின் கண்களுக்கு சாலையோரத்தில் இவர் தெரிந்தார் அப்படியே தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்ரி உள்ளாரா எனப்பார்த்து வரச்செய்தார் அவர் அங்கு பத்திரமாகஉள்ளார் என உதவியாளர் வந்து தகவல் சொன்னார். நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை அவர் ஒரு மகான் என புரிந்துகொண்டார் தன் தவறை உணர்ந்து அவரை விடுதலை செய்தார். இப்படி பல அற்புதங்கள் நிகழ்த்திய சுவாமிகள் 1929ம் ஆண்டு மறைந்தார் அவரின் இறுதி ஊர்வலத்தில் பகவான் ரமணர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.

Monday, January 13, 2014

Installation of Sri Veera Brahmangaaru idol -- Jan 17 On Friday

The idol of Sri Veera Brahmangaaru will be installed at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 17, 2014. This will be the 69th deity at the Peedam. 

The five-foot high idol has been sculpted by Thiru Loganathan, renowned sculptor of Prakash Kalaikoodam, Mamallapuram.

The idol will be installed at a function to be presided over by Rathnagiri Balamuruganadimai swamigal, in the presence of Tirutani Baladatha Peedam Acharya Yoganand Swamigal. 

The installation will be held between 9 to 10 a.m. on Friday, January 17, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said, adding that devotees should come in large numbers to attend the auspicious function. 

Sri Veera Brahmangaaru was renowned for his book Kaalagnaanam, which explains how life will be in the kaliyuga, and how men will live and should live in the kaliyuga. He was born at Pothalur in Andhra Pradesh. Though he had no formal education, he was a great scholar with enormous knowledge of the world and mankind. 

A special Ayurveda camp and an annadhanam would be held, Swamigal said. 

Lakshmi Narasimha homam for Vaikunta Ekadasi

A special Lakshmi Narasimhar homam was performed on Vaikunta Ekadasi day at Sri Danvantri Arogya Peedam, 

Walajapet, on January 11, 2013, in the presence of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal. Special decoration was provided to Sri Moolavar Danvantri idol at 5 a.m. on Saturday. 

The Danvantri family and devotees participated in a joint prayer for world peace. 

The Lakshmi Narasimhar homam was performed which would help one get rid of Pithru Dosham and other doshams. The homam was conducted by vedic experts Rajappa Sivam, Rajivgandhi Sivam and Vivekananda Sivam. 

In view of Ekadasi and Koodaaravalli, devotees were provided prasadam like theertham, tulasi and sweet pongal. Devotees took the blessings of Sri Muralidhara Swamigal. Later, they took part in the annadhanam at the Peedam. 

Samathuva Pongal celebration at Peedam

The tenth year Samathuva Pongal celebrations will be held at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on January 14, 2013.

A novel scheme of free distribution of spirituality books will also be distributed to motivate children to learn about Indian spirituality, religion and the spiritual greats of the past. Books on Ramayanam, Alwars besides Bible and Koran, would be distributed by the Peedam, its founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal said.