ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
புத்த
பூர்ணிமா
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள புத்தர் பிரான் |
புத்தரின் பிறப்பு,
ஞானோதயம் மற்றும் மஹா சமாதி ஆகிய புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று
சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்த பூர்ணிமா எனப்படுகிறது.
மன்னரின் மகனாக
அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த
அன்றைய தினத்தையே புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
.
கயா என்னும் காட்டுப்
பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில்
தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளி பெற்று தனதுக் கேள்விகளுக்கான
பதில்களைக் கண்டுபிடித்தது முதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.
.
தனது 80வது வயதில்
தனது பிறந்த நாளும், தான் ஞானம் அடைந்த நாளுமான அதே வைசாகா நாளான அன்று புத்தர் இவ்வுலக
வாழ்வைத் துறந்தார்.
.
புத்தன் என்ற சொல்லுக்கு
“விழித்தெழுந்தவன்” “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும்
வெற்றிக்கொண்டார். ‘தான்’ ‘தனது’ என்ற நிலையிலிருந்து தனித்துக் காணப்பட்டார்.
.
இதனையொட்டி 24.05.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் குரு
மகா பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புத்தர் பிரான் சிலைக்கு விசேஷ அபிஷேகமும், கூட்டுப்பிரார்த்தனையும்
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
No comments:
Post a Comment