Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, April 17, 2019

Bhagavan Mahaveer Jayanti 2019


தன்வந்திரி பீடத்தில்பகவான் ஸ்ரீ மஹாவீர் ஜெயந்தி விழாசிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றது.

இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் இன்று 17.04.2019 புதன்கிழமை பகவான் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு ஹோமத்துடன் பீடத்தில் பகவான் ஸ்ரீ மஹாவிர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

வாழ்வை உணர்த்திய மகாவீரர் :

அகிம்சை அறத்தைத் தாரக மந்திரமாக ஏற்று,சமண நெறிகளை உலகு வாழ்வாங்கு வாழ உபதேசித்த வர்த்தமான மகாவீரர். மகாவீரர் ஜயந்தித் திருநாளில் (29.3.18 வியாழன்) அவரை வணங்குவோம். இந்த உலகம் உய்யட்டும். உலகெல்லாம் அன்புமழை பொழியட்டும்!

சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரராகிய பகவான் மகாவீரர் பிறந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவரும் நல்ல ஆரோக்யம், ஐஸ்வர்யம், குடும்ப ஒற்றுமை, தொழில் அபிவிருத்தி போன்றவை பெற்று செழிப்புடன் வாழ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அகிம்சையே தர்மமாகும், எந்த ஜீவனையும் கொல்லாதே, எவரையும் சார்ந்திராதே, எவரையும் அடிமைப்படுத்தாதே என்பதே பகவான் மகாவீரர் அறிவுறுத்திய சமத்துவக் கொள்கையாகும். மனித வாழ்வு மேன்மையுற, பகவான் மகாவீரர் போதித்த அகிம்சை, சத்தியம், கள்ளாமை, பற்றற்று இருத்தல் போன்ற உயரிய நெறிகளை மக்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி அன்பு செழித்தோங்கும்.

இந்த இனிய நாளில், பகவான் மகாவீரரின் உயரிய போதனைகளை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி அன்பும், அறமும் நிறைந்த மகிழ்வான வாழ்வை வாழ்ந்திட வேண்டுமென்று  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203Sunday, April 14, 2019

Aishwaryam Tharum 5 Homangal


தன்வந்திரி பீடத்தில்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு

ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்

நடைபெற்றது.


வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  உலக நலன் கருதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று 14.04.2019 ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கீழ்கண்ட ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.

1.   நக்ஷத்திர தோஷங்கள் நீங்க நக்ஷத்திர சாந்தி ஹோமம்.
2.  எதிரிகள் விலக மஹா சுதர்ஸன ஹோமம்.
3.  ஆயுள் பயம் நீங்க ஆயுஷ்ய ஹோமம்.
4.  நீண்ட ஆயுள் பெற மஹா தன்வந்திரி ஹோமம்.
5. வாழவில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெற்றது.

யாகங்களை முன்னிட்டு காலை கோ பூஜையும், கணபதி ஹோமமும், வேத பராயணமும், கலச பூஜையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் :

ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார் . மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், தொழில் வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

தமிழ் புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற இந்த யாகங்களில் வேலூர் மாவட்ட DIG திருமதி வனிதா IPS அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மேலும் BSNL DGM திரு. வெங்கட்டராமன் அவரகள், சென்னை போரூர் ஸ்ரீ ரமணா இண்டச்ட்ரீஸ் திரு. குணசேகரன் அவர்கள் குடும்பத்தினர், பாண்டிச்சேரி திரு. சீனுவாசன் அவர்கள் குடும்பத்தினர், வாலாஜாபேட்டை திரு. துரைவேலு அவர்கள் குடும்பத்தினர், ஏராளமான மாணவ, மாணவிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும்  பங்கு கொண்டு நக்ஷத்திர தோஷம், ஆயுள் தோஷம், பயம், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை, நோய்கள், நீங்கி ஆயுள் ஆரோக்யத்துடன் குபேர சம்பத்து, கல்வி சம்பத்து பெற்று தமிழ் புத்தாண்டில் அனைத்து நலன்களையும் பெற்று வாழ பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பஙேற்ற பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Saturday, April 13, 2019

Rama Navami 2019 ....


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்ஸ்ரீராம நவமி உற்சவம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு இன்று 13.04.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை  ஸ்ரீராம நவமி உற்சவமாக ஹோமம், அபிஷேகம், பாராயணம், அர்ச்சனை, மஹாதீபாராதனை போன்றவைகள் இழந்த பதவி கிடைக்கவும், துன்பங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும் பிரார்த்தனை நடைபெற்றது.

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த நாளே ஸ்ரீராம நவமி என்பதாகும். தீபாவளி போலவே இந்தியா முழுவதும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமே ஸ்ரீராமர். ஸ்ரீராமர் அவதாரமாகவே இருந்தபோதும், மனிதனாகப் பிறப்பெடுத்ததால் நல்வினை, தீவினைகளுக்கேற்ப கஷ்டங்களை அனுபவித்தும், ஏகபத்தினி விரதனாக உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம், வளர்பிறை சுக்ல பட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஸ்ரீராம பிரான். ராமபிரான் அவதரித்த நாளே 'ராமநவமி' கொண்டாடப்படுகிறது.

பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள் வழிபடுகின்றனர்.

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு ஸ்ரீராமர், சீதாலக்ஷ்மி, லக்ஷ்மணர், பரதன், சத்ருக்னன், ஈஸ்வரர், கணபதி, ஆஞ்சநேயர், வசிஷ்டர், பிரம்மா போன்ற 14 தெய்வங்களுடன் ஒரே கல்லில் காட்சித்தரும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீராமர் ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து துளசி மாலை, பழங்கள், வெற்றிலை, பூ இவைகளை கொண்டு ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு திவ்ய நாம அர்ச்சனையும் மேலும் வடை, பருப்பு, எலுமிச்சம் பழம், புளி, வெல்லம் இவற்றைக் கொண்டு பானகம், நீர்மோர், பஞ்சாமிர்தம் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை நிவேதனமாக சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் நைவேத்யப் பொருட்களைக் குழந்தைகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ராமா பிரானின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இந்நாளில் ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் ஒன்று சேரவும், குடும்ப நலம் பெருகி, வறுமையும், பிணியும் அகலவும், நாடியப் பொருட்கள் கைகூடவும். இழந்த பதவி மீண்டும் கிடைக்கவும், துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெறலாம் என்பது ஐதீகம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.