Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, December 31, 2022

New Year 5 Homams at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                      ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 5 ஹோமங்கள் 

 வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , நாளை  ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை 9 மணி முதல் 12 மணி வரை ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.

 இதன்படி கல்வியில் சிறந்து விளங்க  ஸ்ரீ சரஸ்வதி ஹோமம்,  திருஷ்டி , எதிரிகள் பயம் விலக  மஹா சுதர்சன ஹோமம், ஆயுள்பயம் நீங்க ஆயுஷ் ஹோமம், உடல் நோய் , மன நோய்  விலக  மஹா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து  ஹோமங்கள்   நடைபெறுகிறது. 

புத்தாண்டை முன்னிட்டு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு  பூஜைகள் நடைபெறுகிறது. மேலும்  காலை முதல்  இரவு வரை  பக்தர்களுக்கு  தொடர் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட  ஹோமங்களில் பங்கேற்று  விசேஷ ஹோம  பிரசாதங்களை பெற்று  ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறுமாறு  பீடாதிபதி ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

 நாளை மறு நாள் 2ம்தேதி   திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு  வைபவம்  நடைபெறுகிறது.  முன்னதாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  சிறப்பு  பூஜைகளும் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

முன்னதாக இன்று 31ம்தேதி  சென்னை வராஹி பாலன் ஸ்வாமிகள்  குடும்பத்தினருடன் தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தார்.

ஓம் சக்தி மாலை அணிந்து  கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும்   வந்திருந்த திரளான பக்தர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  மூலவர் தன்வந்திரி பெருமாள் மற்றும்  89  பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து  பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.   






Indian Prime Minister Narendra Modi's mother death special prayers at Danvantri Arogya Peedam, Walajapet.

 பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவிற்கு அஞ்சலி செலுத்தி, சிறப்பு பிரார்த்தனை  வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்


 இந்திய நாட்டின்  பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார்  ஹீரா பென் மோடி   நேற்று  30ம்தேதி  இயற்கை எய்தினார்.  மறைந்த  திருமதி. ஹீரா பென் மோடி அவர்களின்  ஆன்மா சாந்தி அடையவும்,  முக்தி பெறவும் , அவரை பிரிந்து  வாடும் அவரது குடும்பத்தினர்  மீண்டும்  இயல்பு நிலைக்கு திரும்பவும் வேண்டி , வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  தலைமையில் , இன்று 31ம்தேதி சனிக்கிழமை காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. 

இதில் தன்வந்திரி குடும்பத்தினர் அனைவரும்  கலந்து கொண்டு  மறைந்த ஹீரா பென் மோடி  அவர்களுக்கு,  மவுன அஞ்சலி செலுத்தி , சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.





Wednesday, December 28, 2022

SRI KARTHAVEERYARJUNAR SAHASRA KALASABISHEGAM ,MAHA YAGAM at SRI DANVANTRI AROKYA PEEDAM

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                     ஸ்ரீகார்த்தவீர்யார்ஜுனர்  லட்ச ஜப மகா யாகம் சகஸ்ர  (1008) கலசாபிஷேகம்,   2000 தட்டு பூக்கள் கொண்டு  புஷ்பாஞ்சலி 

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி   ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்  லட்ச ஜப மகா யாகமும் ,சகஸ்ர (1008 )கலசாபிஷேகமும், 2000 தட்டுகளில் பூக்கள் கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது.

ஆயிரம் கைகள்  உடையவரான  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு, கைவிட்ட சொத்துக்கள் , களவு போன பொருள்கள் , இழந்த  செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி  லட்ச ஜப மஹா யாகமும் , 1008 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும்   நடைபெற்றது.

இதன்படி கடந்த  26ம்தேதி திங்கள் கிழமை  தொடங்கிய லட்ச ஜபம்2 நாட்கள் நடைபெற்றது. 

இன்று 28ம்தேதி காலை  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்க்கு மகா யாகமும், பின்னர் மாலையில் 1008 கலசங்களில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள  புனித நீர்  கொண்டு ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்க்கு சகஸ்ர கலசாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் 2000 தட்டுக்களில்  வைக்கப்பட்டிருந்த பூக்களை கொண்டு ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்க்கு புஷ்பாஞ்சலியும் , மகா தீபாராதனையுடன் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

கலசாபிஷேக  தீர்த்தம் பக்தர்களுக்கு  ஔஷத பிரசாதமாக   வழங்கப்பட்டது.

இந்த கார்த்தவீர்யார்ஜுனர் மகா யாகம் , சகஸ்ரகலசாபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனரை மனமுருக வழிபட்டு  பிரசாதமும் , பீடாதிபதி ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.   

இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.









Tuesday, December 27, 2022

SRI KARTHAVEERYARJUNAR LAKSHA JAPA MAHA YAGAM at SRI DANVANTRI AROKYA PEEDAM

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                            ஸ்ரீகார்த்தவீர்யார்ஜுனர்  லட்ச ஜப மகா யாகம் சகஸ்ர கலசாபிஷேகம்              நாளை நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி   ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்  லட்ச ஜப மகா யாகமும் , சகஸ்ர கலசாபிஷேகமும் நடைபெறுகிறது.

 ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு, கைவிட்ட சொத்துக்கள் , களவு போன பொருள்கள் , இழந்த  செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி  லட்ச ஜப மஹா யாகம்  நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு  1008 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

இதன்படி நேற்று  26ம்தேதி திங்கள் கிழமை  தொடங்கிய லட்ச ஜபம் இன்றும் 27ம்தேதி நடைபெற்றது. நாளை 28ம்தேதி ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் யாகமும்  பின்னர் மாலையில் 1008 கலசங்களில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள  புனித நீர்  கொண்டு ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர்க்கு சகஸ்ர கலசாபிஷேகமும் நடைபெறுகிறது.

 கலசாபிஷேக  தீர்த்தம் பக்தர்களுக்கு  ஔஷத பிரசாதமாக   வழங்க்கப்பட உள்ளது.  

இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.







Monday, December 26, 2022

Danvantri Annabishegam, Sri Lakshmi Varahar Sahasra Kalasabishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                               மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அன்னாபிஷேகம்                                                 ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு 1008 கலசாபிஷேகம்   

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  மூன்று நாட்கள்  முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும்    தொடங்கி நடைபெற்று  வந்தது. 

இதன்படி  இன்று 26ம்தேதி திங்கள்கிழமை  பகல் 12 மணிக்கு,  பத்ம பீடத்தில் 9 அடி உயரத்தில்  நின்ற கோலத்தில்  அருள்பாலித்து வரும்  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  வேறு எங்குமே இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  பின்னர்  மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் , பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக  ஓளஷத பிரசாதமாக வழங்கப்பட்டது.

 முன்னதாக  கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம் நடத்தப்பட்டு  ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு சிறப்பு  பூஜைகளுடன் 1008 கலசங்களில் நிரப்பபட்டிருந்த புனித நீர் மூலம் கலசாபிஷேகமும்  நடைபெற்றது.. 

 இன்று 26ம்தேதி திங்கள் கிழமை முதல் 28ம்தேதி முடிய ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு, கைவிட்ட சொத்துக்கள் , களவு போன பொருள்கள் , இழந்த  செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி  லட்ச ஜப மஹா யாகம்  நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 28ம்தேதி புதன் கிழமை மாலை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு  1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

அபிஷேக பூஜைகளின்  அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக  பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது ஆகும்.  

ஸ்ரீ லஷ்மி வராஹர்  ஹோமம், கலசாபிஷேகம்,  மூலவர்ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அன்னாபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து

 பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.








Saturday, December 24, 2022

Sri Danvantri Annabishegam on 26.12.2022 at Sri Danvantri Arokya peedam


வாலாஜாபேட்டை 
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 
மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 
அன்னாபிஷேகம் 

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  மூன்று நாட்கள்  முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது.

இதன்படி  தன்வந்திரி  பீடத்தில்   வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை  பகல் 12 மணிக்கு, பத்ம பீடத்தில்  நின்ற கோலத்தில்  அருள்பாலித்து வரும்  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  வேறு எங்குமே இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.  மேலும் 26ம்தேதி காலை தன்வந்திரி பீடத்தில் உள்ள  ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு சிறப்பு  பூஜைகளுடன் 1008 கலசாபிஷேகம்  நடைபெறுகிறது. 

 வருகிற 26ம்தேதி திங்கள் கிழமை முதல் 28ம்தேதி முடிய ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு, கைவிட்ட சொத்துக்கள் , களவு போன பொருள்கள் , இழந்த  செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி  லட்ச ஜப மஹா யாகம்  நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 28ம்தேதி புதன் கிழமை மாலை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு  1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.

அபிஷேக பூஜைகளின்  அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக  பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Friday, December 23, 2022

Hanuman Jayanthi at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு                             1008 லிட்டர் பால் அபிஷேகம்                                                                                                                பாண்டிச்சேரி  சபாநாயகர் பங்கேற்பு


 வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  மூன்று நாட்கள்  முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது.

இதன்படி  தன்வந்திரி  பீடத்தில்   இன்று  23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு   தன்வந்திரி பீடத்தில்  9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோம் பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு  மஞ்சள், சந்தனம்,திரவிய பொடி , இளநீர் ஆகியவை கொண்டும், 1008 லிட்டர் பாலில் அபிஷேகமும்  தீபாராதனையும் நடைபெற்றது.
 இறுதியில்  கங்கா தீர்த்தம் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.
 
 பின்னர் ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 1008 ஜாங்கிரிகள், வடைகள், எழுமிச்சம்பழம்,  வெற்றிலை, வாழைப்பழங்களால்  மாலைகளும் அணிவிக்கப்பட்டும்,  வெண்ணெய், துளசி மாலை சாற்றி பூஜைகளுடன்  மகாதீபாராதனை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாண்டிச்சேரி சபாநாயகர்  ஏம்பலம்.ஆர்.செல்வம் , சித்தூர் ஸ்ருதி பால் உரிமையாளர் கன்னையா உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஹனுமன் ஜெயந்தி விழா   ஹோமம், பூஜைகள்,  அபிஷேகங்களில் ஏராளமான பக்தர்கள், சுற்றுப்புறகிராம  நிர்வாகிகள், பொதுமக்கள்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டு  அபிஷேக பால் உள்பட  பிரசாதங்களும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.

 வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை  பகல் 12 மணிக்கு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  வேறு எங்கும் இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

 மூன்று அபிஷேக பூஜைகளின்  அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக  பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.  

இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.












Thursday, December 22, 2022

1000 Kalasabishegam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு  சகஸ்ர கலசாபிஷேகம்                                         மலேசியா  சங்கரமடம் சத்குரு ஸ்ரீஸ்ரீ  ஜெயப்பிரகாஷேந்திர  சரஸ்வதி                 மகா ஸ்வாமிகள் பங்கேற்பு 

 வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  மூன்று நாட்கள்  முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. 

இதன்படி இன்று 22ம்தேதி  வியாழக்கிழமை மாலை 4 மணியளவில்  , வேறு எங்கும் இல்லாத வகையில்  பீடத்திலேயே நந்தியுடன்  அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு  சிறப்பு ஹோமம்  மற்றும்  பூஜைகளுடன்  சகஸ்ர கலசாபிஷேகம்  நடைபெற்றது. இந்த கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு  தங்கள் கைகளாலேயே  கலசங்களை எடுத்து கொடுத்து , ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரரை  மனமுருக வழிபட்டு , பிரசாதமும்,  பீடாதிபதி ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.

முன்னதாக  இன்று காலை தன்வந்திரி பீடத்திற்கு வந்த மலேசியா  சங்கரமடம்,   திருஅண்ணாமலையார் தேவஸ்தானத்தை சேர்ந்த  ஜகத்குரு சங்கராச்சார்ய சத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயப்பிரகாஷேந்திர  சரஸ்வதி மகா ஸ்வாமிகளுக்கு , பீடத்தின்  சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி,  அன்னாபிஷேகம் ஆகியவற்றிற்கான  பூர்வாங்க  ஹோம, பூஜைகளை தொடங்கி வைத்து , தன்வந்திரி பீடத்தில் தரிசனம் செய்து , ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார். 

அப்போது  ஈரோடு சுந்தரேச சிவாச்சாரியார்  உள்பட பலர் உடன் இருந்தனர். 

தன்வந்திரி  பீடத்தில்  நாளை  23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  காலை 10 மணிக்கு, தன்வந்திரி பீடத்தில்  9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும்,1008 ஜாங்கிரிகள், வடைகள், எழுமிச்சம்பழம்,  வெற்றிலை, வாழைப்பழங்களால்  மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி  சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. 

வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை  பகல் 12 மணிக்கு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  வேறு எங்கும் இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட  அபிஷேக பூஜைகளின்  அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக  பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.  

இதற்கான ஏற்பாடுகளை  ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.











Wednesday, December 21, 2022

Sahasra Kalasabishegam

வாலாஜாபேட்டை 

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

நாளை  சகஸ்ர கலசாபிஷேகம்


 வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  மூன்று நாட்கள்  முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. 


இதன்படி நாளை 22ம்தேதி  வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு , வேறு எங்கும் இல்லாத வகையில்  பீடத்திலேயே நந்தியுடன்  அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு  சிறப்பு பூஜைகளுடன், கலச அபிஷேகம்) சகஸ்ர கலசாபிஷேகம்  நடைபெறுகிறது.


 நாளை மறுநாள் 23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  காலை 10 மணிக்கு, தன்வந்திரி பீடத்தில்  9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும்,1008 ஜாங்கிரிகள், வடைகள், எழுமிச்சம்பழம்,  வெற்றிலை, வாழைப்பழங்களால்  மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி  சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. 


 வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை  பகல் 12 மணிக்கு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  வேறு எங்கும் இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 


 மேற்கண்ட  அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.  


இந்த சிறப்பு அபிஷேகங்களுக்கான  பூர்வாங்க பூஜைகள் நேற்று 20ம்தேதி  பாலகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளுடன் தொடங்கியது. இன்று 21ம்தேதி

 மூலவர் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு  ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்றது.


மேலும் இன்று மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க  வடிவில்  உள்ள 468 சித்தர்களுக்கும், சித்தர்களின் குருவான  ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்தனர். 


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.  






Tuesday, December 20, 2022

3 Days Abishegams- Special Homams

வாலாஜாபேட்டை
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
மூன்று நாட்கள் மூன்று  அபிஷேகங்கள்,
இலவச ஔஷதம் வழங்கும் விழா முன்னிட்டு
சிறப்பு ஹோமங்கள்
 
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூன்று நாட்கள் & முத்தான மூன்று  அபிஷேங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இதன்படி  வருகிற 22ம்தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு,   வேறு எங்கும் இல்லாத வகையில்  பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு ,  1000 கலசங்களில்  புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் , கலச அபிஷேகம் ( சகஸ்ர கலசாபிஷேகம்)  நடைபெறுகிறது.

 வருகிற 23ம்தேதி வெள்ளிக்கிழமை ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு  1008 லிட்டர்கள் சிறப்பு   பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 வாழைப்பழங்கள்,1008 வடை,1008 ஜாங்கிரிகள், 1008 வெற்றிலை, 1008 எழுமிச்சை பழங்கள்  அடங்கிய மாலைகள் அணிவிக்கப்பட்டு , துளசி மற்றும் வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற  உள்ளது.

அதே போல் வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு  திருவோண நட்சத்திரத்தில், மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு , வேறு எங்கும் காணாத வகையில் மஹா அன்னாபிஷேகம்  நடைபெறுகிறது.
 
 மேற்கண்ட  அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.  

முன்னதாக  இந்த சிறப்பு அபிஷேகங்களை முன்னிட்டு இன்று டிசம்பர் 20ம்தேதி பூர்வாங்க  பூஜைகளுடன் , பால கணபதி ஹோமம்  உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

நாளை 21ம்தேதி  புதன்கிழமை  மூலவர் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு  ஹோமங்கள் , பூஜைகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.  

Monday, December 19, 2022

3 DAYS - 3 ABISHEGAMS

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மூன்று நாட்கள் , மூன்று  அபிஷேகங்கள் ஔஷதம் வழங்கும் விழா

உலகிலேயே சைவம்,வைணவம்,ஸ்ரீசாக்தம்,சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஷண்மதத்திற்குரிய அனைத்து தெய்வ சந்நிதிகளும், நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்களும், எண்ணற்ற மகான்களும் பரிபூரணமாக  பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஆகும்.

வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூன்று நாட்கள் & முத்தான அபிஷேங்களும், ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இதன்படி  வருகிற 22ம்தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு,   வேறு எங்கும் இல்லாத வகையில்  பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு ,  1000 கலசங்களில்  புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் , கலச அபிஷேகம் ( சகஸ்ர கலசாபிஷேகம்)  நடைபெறுகிறது.

 வருகிற 23ம்தேதி வெள்ளிக்கிழமை ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு  1008 லிட்டர்கள் சிறப்பு   பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 வாழைப்பழங்கள்,1008 வடை,1008 ஜாங்கிரிகள், 1008 வெற்றிலை, 1008 எழுமிச்சை பழங்கள்  அடங்கிய மாலைகள் அணிவிக்கப்பட்டு , துளசி மற்றும் வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற  உள்ளது.

அதே போல் வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு  திருவோண நட்சத்திரத்தில், மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு , வேறு எங்கும் காணாத வகையில் மஹா அன்னாபிஷேகம்  நடைபெறுகிறது.
 
 மேற்கண்ட  அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள் ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.   இந்த அபிஷேக பிரசாதங்கள்  பக்தர்களின்  பிணிகளை தீர்க்கவல்லது  எனவும் , எனவே  இந்த முத்தான மூன்று  அபிஷேகம், பூஜைகளில்  பக்தர்கள் பங்கேற்று   பிரசாதங்களை ஔஷதமாக பெற்று  தங்கள் நோய் மற்றும் பிணிகளை தீர்த்து பயன்பெறுமாறும், தெய்வங்களின் ஆசியும் பெற்று பயனடையுமாறு  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று டிசம்பர் 19ம்தேதி ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகளுடன் , அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

நாளை முதல் பல்வேறு வகையான ஹோம பூஜைகள் மார்கழி அமாவாசை முன்னிட்டு நடை பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.