நவகிரஹங்களில் பூரண சுபபலம் கொண்டவரான குரு பகவான் தேவர்களின் குரு ஆவார். அவருடைய பூரண அனுகிரஹம் ஒருவருக்கு இருந்தால், சகல சௌபாக்கியங்களுடன் கூடிய புகழ் மிக்க வாழ்வு அமையும். ‘குருபகவான் பார்க்க கோடி நன்மை’ என்கிறது வேதத்தின் ஒரு அங்கமான ஜோதிட சாஸ்திரம்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல குருபகவான் எடுத்துக்கொள்ளும் காலம் ஓர் ஆண்டு. இந்தக் காலக்கட்டத்தில் குரு பகவானின் கோசாரத்தினால் அசுப பலன்களை அடையக்கூடிய ராசிகளை சேர்ந்த அன்பர்கள், இந்த குருப் பெயர்ச்சி மஹா யாகத்தில் பங்கேற்பதன் பயனாக, அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு, சுப பலன்களைப் பெறலாம்.
எனவே 28.5.2013 செவ்வாய்கிழமை அன்று இரவு 9.18 மணியளவில் நவகிரஹங்களில் நடுநாயகரான குரு பகவான், வாக்கிய பஞ்சாங்க கணக்குப்படி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப் பெயர்ச்சி ஆகிறார். அதை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தன்வந்திரி பகவானின் ஆசியோடும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளோடும் 29.5.2013 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு ‘குருப்பெயர்ச்சி மஹா யாகம்’ ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் மிகச்சிறப்பான முறையில் நடைபெற இருக்கிறது.
மேலும் உலகப்புகழ் அதிர்ஷ்டம் ஜோதிட பானு சி.சுப்பிரமணியம், ஆசிரியர், பாலஜோதிடம், அவர்களின் தலைமையில் சிறந்த வேத விற்பன்னர்கள் பங்கேற்று மேற்படி யாகம் மற்றும் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, அர்ச்சனைகள் நடைபெற இருக்கின்றன.
இந்த இடப்பெயர்ச்சி காலத்தில் பரிகாரம் செய்துகொள்ள வேண்டிய ராசி அன்பர்கள் : மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்.
ஆகவே பக்தர்கள் அனைவரும் குருபெயர்ச்சி யாகத்தில்
கலந்துகொண்டு நற்பலன்களை அடைய வேண்டும் என்றும், மேற்கொண்டு நடைபெறும் சிறப்பு அன்னதானத்திலும்
கலந்துகொள்ள வேண்டும் என்றும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment