Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, March 31, 2022

நோய் தீர்க்கும் ஔஷத்துடன் அமாவாசை யாகம்

                         தன்வந்திரி பீடத்தில் நோய் தீர்க்கும் ஔஷத்துடன் 

                                                    அமாவாசை யாகம் 31/03/2022

                                                               

                             

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 31.03.2022 வியாழக்கிழமை அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்,


ஹோமங்கள், ஔஷதம் வழங்குதல் மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

           














அமாவாசை பூஜை

நாளை 31.03.2022 வியாழக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணியளவில், சரப சூலினி ப்ரத்யங்கிரா ஹோமத்துடன் கண் திருஷ்டிகள் நீங்க மிளகாய் வற்றல் கொண்டு திருஷ்டி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது. அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷம் இல்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவார்கள்.

செய்வினை கோளாறுகள்

ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்சனை, கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும் இந்த யாகம் நடைபெறுகிறது.

மழைவளம் பெருகும்

மேலும் மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து மகிஷாசுரமர்த்தினி, ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகமும், ஔஷதம் மற்றும் அன்னப்பிரசாதம் ஸ்வாமிகளின் திருக்கரங்களால் வழங்கப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

கீழ்புதுபேட்டை, வாலாஜாபேட்டை.

தொலைபேசி : 04172-294022 / 09443 330203

Monday, March 28, 2022

ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி ஞான ஆலய பூமி பூஜை 28/03/2022

                             வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

                                  ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி ஞான ஆலய பூமி பூஜை



தச சஹஸ்ர (10,000) ராஜமாதங்கி மூலமந்தர ஜப ஹோமத்துடன் ராஜயோகம் தரும் அஷ்ட புஜ மரகத ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி ஞான ஆலய பூமி பூஜை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது

நாள்: 27.3.2022 - 28.3.2022 ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நிகழும் பிலவ வருடம் பங்குனி மாதம் 14ம் தேதி 28.3.2022 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் 9.50 மணிக்கு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜமாதங்கி தேவி ஞான ஆலய பூமி பூஜை நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கோ பூஜை, வேத பிரார்த்தனை, குரு வந்தனம், ஸ்ரீ மகா கணபதி பூஜை, விஷேச மஹா சங்கல்பம், கலச ஸ்தாபனம், ஸ்ரீ ராஜ மாதங்கி தியானம், ஆவஹந்தி, சோடஷ உபச்சார பூஜா சகித ஆவரண அர்ச்சனை, தீபாராதனை ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆவஹந்தி ஹோமம், ஸ்ரீ ராஜமாதங்கி தச சஹஸ்ர மூலமந்திர ஹோமம், மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை. மாலை 4.00 மணிக்கு ஸ்ரீ ராஜமாதங்கி தச சஹஸ்ர மூலமந்திர ஹோமம் தொடர்ச்சி மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.

மேலும் 28.3.2022, திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஸ்ரீ ராஜமாதங்கி தச சஹஸ்ர மூலமந்திர ஹோமம் பூர்த்தி, விஷேச மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று 9.00 மணி முதல் 9.50 மணிக்குள் அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜமாதங்கி தேவி ஞான ஆலய பூஜை ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் நடைபெறுகிறது இதில் பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மிக அருளாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

சியாமளா தேவி எனும் ராஜமாதாங்கி

‘சியாமளா தேவி’ என்றும், ‘ஸ்ரீ ராஜ சியாமளா’ என்றும், ‘ஸ்ரீமாதங்கி என்றும், ராஜமாதங்கி என்றும் ‘மஹாமந்திரிணீ’ என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் தேவியானவள், மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள்.

தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள்.

வேத‌ மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்’மந்திரிணீ’என்றும் போற்றபடுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ‘சியாமளா நவராத்திரி’ யைக் கொண்டாடி வழிபடுகிறோம்.

ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம: என்று போற்றுகிறது.

மேலும் ‘கதம்பவனவாஸினீ’ என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான‌ ஸ்ரீ நகரத்தில் ,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம் ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு ‘கடம்பவனம்’ என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில் (ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.

‘கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா'(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்) சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே ‘பண்டாசுரன்’ (உலகாயத) விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே ‘விஷங்க வதம்’ செய்கிறாள்.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ராஜமாதங்கி:

மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த அம்பிகைக்கு தன்வந்திரி பீடத்தில் மாபெரும் ஆலயம் அமைய உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்ககுடியதாகும் 5.6 அடி உயரத்தில் மாணிக்கக் கற்கள் பதித்த வீணை, எட்டுத் திருக்கரங்கள், வெளிர் மரகதப் பச்சை வண்ணம், திருமார்பில் குங்குமச்சாந்து தரித்த வண்ணம், திருநெற்றியில், சந்திரகலையுடன், கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம், தாமரை பூவுடன், பச்சைக்கிளி சிரித்த முகத்துடன் காட்சிதரும் வண்ணம் அமைய உள்ளார்.

இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும் ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்பட உள்ளார்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள்.

சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி. இந்த தகவலை தன்வந்த்ரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Saturday, March 26, 2022

ஸ்ரீ விஸ்வரூப அஷ்டநாக கருடர் 48 நாள் மண்டலாபிஷேக பூர்த்தி வைபவம் 27/03/2022


ஸ்ரீ விஸ்வரூப அஷ்டநாக கருடர் 48 நாள் 
மண்டலாபிஷேக பூர்த்தி வைபவம்  


16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு

மண்டல பூஜையுடன் ஹோமங்கள், வருகிற 27.3.2022 ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறுகிறது

 

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சென்ற  6.2.2022 ஞாயிற்றுக்கிழமை 16.8 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு வருகிற 27.3.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மண்டல பூஜைடன் ஹோமங்கள் மற்றும 9 வகையான திரவியங்களை கொண்டு மூலவர் ஸ்ரீ கருட தன்வந்திரிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

 கருட தன்வந்திரி வழிப்பட்டால் கிடைக்கும் நன்மைகள்

கருடனை வணங்கினால் சகலவிதமான நன்மைகளும் பெருகும். கண் பார்வை குறைபாடுகள் அகலும் பகையும் பிணியும் நீங்கும். செல்வளம் கொழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.  சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள், விஷ ஜந்துக்களால் ஏற்படும் தோஷங்கள், திருமணத்தடை, புத்திரத்தடை, பூமி தோஷம், வாகனத்தடை, குடும்பத்தடைகள் மேலும் வாகன விபத்து, கண்டங்கள், தோல் வியாதிகள் போன்ற பல்வேறு விதமான தடைகள் விலகும். தீராத நோய்கள் மற்றும் பார்வை கோளாறுகள் தீரும், மருத்துவ செலவுகள் குறையும், மனக்குழப்பம் நீங்கி தெளிவும் பெறலாம். தைரியமும் பெருகும், எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும், கண்ணுக்கு தெரிந்த மற்றும் தெரியாத எதிரிகள் அனைவரும் நீங்கி எதிரியற்ற நிலை உருவாகும். கூர்மையான அறிவு, கூர்மையான புத்தி, கூர்மையான பார்வை கிடைத்து ஆயுள் அதிகரிக்கும், கடன் தொல்லை நீங்கும், பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திரஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி பண வரவு அதிகரிக்கும், மகாலட்சுமி கடாக்ஷம் கிடைக்கும். நாட்டிற்கு வளம் சேர்க்கும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுவதன் மூலமாகப் பெறமுடியும் என்று பத்ம புராணம் கூறுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஸ்ரீ கருட தன்வந்திரி விஷேச திரவியங்களைக் கொண்டு நவக்கலச திருமஞ்சனம் மற்றும் விலை உயர்ந்த மூலிகைகள் கொண்டு நடைபெறும் ஹோமங்களிலும் கலந்து கொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



 

Thursday, March 17, 2022

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 16.03.2022 பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 16.03.2022 பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வராஜ ஹோமம் மற்றும் பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி ஹோமம் மற்றும் 
தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற  சந்தான கோபால ஹோமம்  மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு ராகு/கேது அன்னாபிஷேகம் நடைபெற்றது. 
 

















 

 

 


  


தொடர்புக்கு 
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை

Tuesday, March 15, 2022

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமி 16/02/2022 முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது

 ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருமணத்தடை நீங்க சிறப்பு யாகங்கள்

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 16.02.2022 புதன்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை முப்பெரும் யாகங்கள் நடைபெற்றது.



தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம்

                                        சந்தான கோபால யாகம் பலன்கள் :

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர்களுக்கு ஏற்படுகின்ற காலசர்ப தோஷம், சர்ப தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம் போன்ற பல்வேறு தோஷங்கள் நீங்கி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி சந்தான கோபால யாகமும், ஸ்ரீகிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற்றது.

ஆண்கள் திருமணத் தடை நீக்கும் கந்தர்வ ராஜ ஹோமம்

கந்தர்வ ராஜ ஹோமம் பலன்கள் :

திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு உள்ள செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ ஹோமமும், கலசாபிஷேகம் நடைபெற்றது.

பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம்

                          

                                சுயம்வர கலா பார்வதி ஹோமம் பலன்கள் :

இன்று நடைப்பெற்ற சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், வசீகர தோஷம், போன்ற எல்லாவிதமான திருமணத் தடைகளும், தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கலந்து கொண்ட  பெண்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்பாக ஸ்ரீ மஹா கணபதி பிரார்த்தனையும் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும் சர்ப தோஷங்கள் நீங்க, ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

மேற்கண்ட முப்பெரும் யாகங்களில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து பிரசாதம் வழங்கினார் தொடர்ந்து அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி 14.3.2022 முன்னிட்டு நவகலச திருமஞ்சனம் நடைபெற்றது

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஏகாதசி முன்னிட்டு இன்று           14.3.2022 திங்கட்கிழமை மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு 

                    வகலச திருமஞ்சனம்  நடைபெற்றது





Saturday, March 12, 2022

21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரமுள்ள

விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 4.2.2022, வெள்ளிக்கிழமை பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது. 5.2.2022, சனிக்கிழமை மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை முன்னிட்டுவிஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷணம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

                                

                                       





SRI VISWAROOPA AHTA NAGA KAL GARUDAR PRADHISHTA MAHOTSAVAM ON 06/02/2022

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் 21 அடி உயரமுள்ள விஸ்வரூப அஷ்டநாக கல் கருடர் பிரதிஷ்டா வைபவம் 6.2.2022, ஞாயிற்றுக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்



ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 4.2.2022, வெள்ளிக்கிழமை பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரதிஷ்டா வைபவ கால பூஜைகள் தொடங்கப்பட்டது. 5.2.2022, சனிக்கிழமை மூலவர் விஸ்வரூப அஷ்டநாக கல் கருடருக்கு நவகலச திருமஞ்சனம் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது. அதை தொடர்ந்து மேட்டூர் சகோதரர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

6.2.2022, ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் 21 அடி உயரமுள்ள அஷ்ட நாக விஸ்வரூப கல்கருடர் பிரதிஷ்டா வைபவத்தை

முன்னிட்டுவிஸ்வரூபம், கோ பூஜை, த்வார பூஜை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி சதுஸ்தான பூஜை, மஹா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு, கும்ப உத்தாபனம், நூதன பிம்பத்திற்கு ப்ரோக்ஷணம், ப்ராணப் பிரதிஷ்டை, தீபாராதனை, சாத்துமுறை நடைபெற்றது. ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களால் 1000 கிலோ புஷ்ப அபிஷேகம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புஷ்ப பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Monday, March 7, 2022

SRI RAJA MATHANGI TEMPLE BOOMI POOJA ON 28/03/2022 @ SRI DANVANTRI AROGYA PEEDAM

வாலாஜாபேட்டை ஸ்ரீ தந்வந்திரி ஆரோக்ய பீடத்தில் யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி வருகிற பங்குனி மாதம் 13 ம் நாள் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மாபெரும் ஸ்ரீ ராஜ மாதங்கி யாகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து பங்குனி 14 ம் நாள் 28.03.2022 திங்கள் கிழமை காலை 9.00 மணி முதல் 9.50 வரை அருள்மிகு அஷ்டபுஜ மரகத ஸ்ரீ ராஜ மாதங்கி தேவி ஞான ஆலயம் பூமி பூஜை நடைபெறவுள்ளது.

 

SPECIAL THIRUMANJANAM TO LORD SRI ASHTA NAGA KAL GARUDA BAGHAWAN @ SRI DANVANTRI AROGYA PEEDAM

ஸ்ரீ கருட பகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம் 04.03.2022 முதல் 06.03.2022 வரை வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்றது.