Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, November 29, 2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி கடந்த 19ம் தேதி முதல் 29ம் தேதி இன்று வரை 1 கோடி ஸ்ரீ தனலட்சுமி மஹாயாகமும், ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

19.11.2016 சனிக் கிழமை காலை ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மா அவர்கள் திருக்கரங்களால் ஒரு கோடி ஸ்ரீ தனலட்சுமி ஜபயக்ஞம் துவக்கி வைக்கப்பட்டு இன்று 29.11.2016 செவ்வாய்க்கிழமை வரை காலை மாலை இருவேளையும் கோபூஜையுடன் ஜப ஹோம பூஜைகளும், மஹாசங்கல்பம் கணபதி பூஜை, வாஸ்த்து புருஷஆகர்ஷண ஹோமம், தன்வந்திரி கணபதி பூஜை, தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கு ஹோமம், அஷ்ட லட்சுமி அங்குரார்பண பூஜை, நவக்கிரஹ பூஜை, மஹாலட்சுமி யந்திர பூஜை, தன்வந்திரி கணபதி ஹோமம், வாஸ்து புருஷ ஹோமம், லட்சுமி நாராயண ஹோமம், தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி ஹோமம், பரிவார தேவதைகள் ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், நவக்கரஹ ஹோமம், சகலதேவதா காயத்ரி ஹோமம், ஒரு கோடி தனலட்சுமி பீஜாட்ஷர ஹோமம் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் லலிதா சகஸ்ர நாமம் மஹாலட்சுமி, த்ரிசதி, லட்சுமி நாராயண த்ரிசதி மஹாலட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் முடிந்து தீபாரதனை நைவேத்தியம் மந்திர புஷ்ப்பம், சதுர் வேத பாராயணம் மஹாஆரத்தி நடைபெற்றது. ஸ்ரீ ஆரோக்ய லட்சுமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் 1008 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. மேற்கண்ட யக்ஞத்தை சுக்ல யஜீர் வேத சாஸ்த்திரிகள் ஸ்ரீமான்  வேலூர்  K.B. சூரிய நாராயண ஷர்மா அவர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரித்விக்கள் பங்கேற்று சிறப்பாக நடத்தித் தந்தனர்.

மேற்கண்ட யாகங்களில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், செங்கல்பட்டு திருவடி சூலம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய பீடாதிபதி தவத்திரு மதுரை முத்து ஸ்வாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு. A.K.  ராஜன், இராணிப்பேட்டை நாக் லதர்ஸ் மற்றும் நாக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு.பிள்ளை, வாலாஜாபேட்டை தொழில் அதிபரும் பிரைட் மைண்ட்ஸ் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியான  W.R.  மகேந்திரவர்மன், மருத்துவர் கஸ்தூரி சத்தியமங்களம், DR.ரங்கராஜன், அலமேலு பாஸ்கர் மற்றும் வெளிநாட்டு வாழ் பக்தர்கள், உள்ளூர் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதனைத்தொடர்ந்து இராணிப்பேட்டை சத்தியசாய் பக்தர்கள், பாண்டிச்சேரி பக்தர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்தனர்.

மேற்கண்ட அனைத்து நாட்களிலும் சிறப்பு அன்னதானங்கள் நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது 108 சுமங்களிகளுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு மங்களப்பொருட்களுடன் தனலட்சுமி யந்திரம், குங்கும பிரசாதம், 2017ம் ஆண்டு நாட்காட்டி வழங்கப்பட்டது என்று தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.






Sunday, November 27, 2016

14.12.2016 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு தன்வந்திரி பீடத்தில் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலிபூஜை


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி  புதன் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை 108 சுமங்கலிகள் பங்கேற்க்கும் ஸ்ரீ சூக்த ஹோமம் மற்றும் கர்ப ரக்ஷாம்பிகை யாகம் நடைபெறுகிறது..

இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், தம்பதியரிடையே சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை வேண்டியும், பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து  கூட்டுப்பிரார்த்தனை  நடைபெற உள்ளது.


இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு வழங்க உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை.632513
Ph : 04172 230033 / 9443330203


Monday, November 21, 2016

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன் கருதி 1 கோடி ஸ்ரீ தனலட்சுமி மஹாயாகமும் ஸ்ரீ லட்சுமி நாராயண ஹோமமும் மூன்றாவது நாளாக நடைபெற்றது.



19.11.2016 சனிக் கிழமை முதல் தினமும் ஜப ஹோம பூஜைகள் காலை 7.30 மணிக்கு கோபூஜையுடன் ஆரம்பித்து 8.00 மணியளவில் மஹாசங்கல்பம் கணபதி பூஜை வாஸ்த்து புருஷஆகர்ஷண ஹோமம் நடைபெற்று வருகிறது.. இதனை தொடர்ந்து 1.தன்வந்திரி கணபதி பூஜை2. தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி மற்றும் இதர பரிவார மூர்த்திகளுக்கு ஹோமம்3.அஷ்ட லட்சுமி அங்குரார்பண பூஜை 4. நவக்கிரஹ பூஜை 5.மஹாலட்சுமி யந்திர பூஜை முடித்து காலை 10.00 மணியளவில் மஹா ஹோமம் தன்வந்திரி கணபதி ஹோமம் வாஸ்து புருஷ ஹோமம் லட்சுமி நாராயண ஹோமம் தன்வந்திரி ஆரோக்ய லட்சுமி ஹோமம் பரிவார தேவதைகள் ஹோமம் அஷ்ட லட்சுமி ஹோமம் நவக்கரஹ ஹோமம், சகலதேவதா காயத்ரி ஹோமம், தனலட்சுமி பீஜாட்ஷர ஹோமம் முடித்து மதியம் 12.00 மணியளவில் மஹா பூர்ணாஹீதி காலையில் இருந்து மதியம் வரை பிறகு சாயங்கால பூஜைகள் 4.30 மணியளவில் லலிதா சகஸ்ர நாமம் மஹாலட்சுமி, த்ரிசதி, லட்சுமி நாராயண த்ரிசதி மஹாலட்சுமி ஸ்தோத்திரம் பாராயணம் முடிந்து தீபாரதனை நைவேத்தியம் மந்திர புஷ்ப்பம், சதுர் வேத பாராயணம் மஹாஆரத்தி நடைபெற்று வருகிறது.மேற்கண்ட யக்ஞத்தை சுக்ல யஜீர் வேத சாஸ்த்திரிகள் ஸ்ரீமான்  வேலூர்  K.B. சூரிய நாராயண ஷர்மா அவர்கள் தலைமையில் 10க்கும் மேற்பட்ட ரித்விக்கள் பங்கேற்று சிறப்பாக நடத்தி வருகின்றனர். இன்றைய ஹோமத்தில் இராணிப்பேட்டை நாக் லதர்ஸ் மற்றும் நாக் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் திரு.பிள்ளை மற்றும்  வாலாஜாபேட்டை தொழில் அதிபரும் பிரைட் மைண்ட்ஸ் கல்வி நிறுவனத்தின் நிர்வாகியான  W.R.  மகேந்திரவர்ம்மன் அவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் பக்தர்கள் அனைவரும் 29.11.2016 வரை நடைபெறும் கோடி ஜப யக்ஞத்தில் பங்குபெற வேண்டுகிறோம்.இந்த தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.





Saturday, November 19, 2016

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸம்வத்ஸர அபிஷேக ஹோம நிறைவு விழா

 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கடந்த நவம்பர் 13.11.2016 தொடங்கிய ஸம்வத்ஸர அபிஷேக ஹோமங்களின் நிறைவு விழா  19.11.2016 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ,திருமதி நிர்மலா முரளிதரன் அவர்களின் பரிபூர்ண ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த ஹோமங்களில் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீ ஸ்ரீ சக்தி அம்மா அவர்களும் இரத்தினகிரி ஸ்ரீ ஸ்ரீ பாலமுருகனடிமை ஸ்வாமிகள் ,கலவை  ஸ்ரீ சச்சிதானந்த ஸ்வாமிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட ஆச்சாரியர்களும் கலந்து கொண்டு ஆசி வழங்கினர். மேலும் ஸ்ரீபுரம் நாராயணி  பீடம் சக்தி அம்மா அவர்கள் 1 கோடி தனலட்சுமி  பீஜ மந்திர ஜப ஹோமத்தை தொடங்கி வைத்தார். ஸ்ரீ சக்தி அம்மா  அவர்கள் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும் ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி தாயாருக்கும் அபிஷேகம் செய்து சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளராக.சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி மாலா அவர்கள்,  பல துறை அதிகாரிகள் மற்றும்  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு திருவருள் பெற்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Friday, November 18, 2016

Sripuram Golden Temple Peedathipathi Sri Sri Sakthi Amma visiting Danvantri Peedam, Walajapet On 19th November 2016


தன்வந்திரி பீடத்தில் 2017ம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியீட்டு விழா

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 6 நாட்களாக நடைபெற்ற ஸம்வத்ஸர அபிஷேக விழாவில் இன்று 2017 ம் ஆண்டு தினசரி காலண்டர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு. A.K.  ராஜன் அவர்கள் தினசரி காலண்டர் வெளியிட வேலூர் துர்காபவன் உரிமையாளர் திரு. உதய சங்கர் பெற்றுக் கொண்டார்.இந்த நிகழ்ச்சி செங்கல்பட்டு திருவடி சூலம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலய பீடாதிபதி தவத்திரு மதுரை முத்து ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலேசியாவிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவத்தனர்.



Wednesday, November 16, 2016

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடத்தில் உலக புரோகிதர் ஹோமம் 16.11.2016 காலை நடைபெற்றது இன்று சௌரம் கடவுளான ஸ்ரீ பட்டபிஷேக ராமருக்கு ஸ்ரீ ராமநாம மூலமந்திர ஜப ஹோமம் நடைபெற்றது.மற்றும் பூர்ணாஹீதி கலச புறப்பாடு மற்றும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமருக்கு மஹாஅபிஷேகமும் மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

 புரோகிதர்கள் நேரம், காலம் ஏன்று பார்க்காமல் தங்கள் குடும்பம்,                குழந்தை  ஏன்று  பார்க்காமல்  வர்கள்  வாழ்வில் நிகழ்வுகளுக்குமுக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின்சேவையே  மகேசன் சேவை ஏன்ற முறையில் ஜாதி,  
,மொழி  பேதமின்றி  மற்றவர்களின்  குடும்பத்தில்  புரோகிதப்பணி   செய்து   வருகிறார்கள். ப்படிப்பட்டவர்களின் வாழ்விலும் சில பிரச்னைகள், சில வியாதிகள்,பலவிதமான தடைகள், மனச்சஞ்சலங்கள்,               கருத்து வேறுபாடுகள், பணப் பிரச்சனை, மன பாதைகள்,மனப் போராட்டங்கள் நிகழ்கின்றனர். இத்தகைய கஷ்டங்களைமனதில்கொண்டுநடைபெறும்சுப/சுபநிகழ்ச்சிகளுக்குச் சென்று ஸ்ரீவேதவ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் னுக்ரஹத்தாலும் புரோகிதர்கள் வரப்போகும் சுப/ சுப நிகழ்ச்சிகளுக்கு பலன்களை முன்கூட்டியே தெரிந்துக்கொண்டு தற்குண்டான பரிகாரங்களைச்சொல்லி பூஜைகள் செய்து க்ஷேமங்களை உண்டுபண்ணுகின்றர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்பக்ஷேமம்,ஆவர்களைச்  சார்ந்தவர்களின்க்ஷேமத்திற்காக 16.11.2016 புதன்கிழமை காலை6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜைமற்றும் யக்ஞங்கள், வாலாஜாபேட்டை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ரோக்ய பீடத்தில், தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.











                

Tuesday, November 15, 2016

வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று கௌமார கடவுளான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விஷேச ஹோமங்களும் நவகலச அபிஷேகமும் த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  சென்ற 13.11.2016 ஞாயிற்று கிழமை முதல்
தன்வந்திரி  பெருமாளுக்கும் இதர பரிவார தெய்வங்களுக்கும் சன்மத முறைப்படி
ஸம்வஷ்சர அபிஷேகம் சப்தாஹம்மாக நடைபெறுகிறது.நேற்று காணாபத்தியம்
முறைப்படி ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெற்றது. இன்று கௌமார கடவுளான
ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விஷேச ஹோமங்களும் நவகலச அபிஷேகமும்
த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற்றது. வருகை புரிந்த பக்தர்களுக்கு பிரசாதம்மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த ஹோமத்தில் சிறப்பு அழைப்பாளராக சென்னை செம்பாக்கம் ஸ்ரீபாலாசமஸ்தானத்தின் பீடாதிபதி இளம் பூர்ணசிவம் பூர்ணாஹீதியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இந்த தகவலைதன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.




  

Events of Sri Danvantri Peedam, Walajapet