கயிலை எஸ்.தங்கராஜ் (நடுவில்) அவர்கள் யோகா மையத்தில்பேசிய போது, அருகில் யோகா பயிற்சியாளர் வெங்கட்ராமன் அவர்கள் (பைஜாம் அணிந்திருப்பவர்) |
கயிலை
எஸ்.தங்கராஜ் அவர்கள்
ஸ்ரீ தன்வந்திரி ஆரேக்ய பீடத்திற்கு வருகை..
சென்னையைச் சேர்ந்த
தொழிலதிபர், கயிலை எஸ்.தங்கராஜ், அவர்கள் தனது குடும்பத்தினர்கள் மற்றும் தனது நிர்வாக
அங்கத்தினர்களுடன் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து உலக நலன் கருதி
ஸ்ரீ தன்வந்திரி பகவானை ப்ரார்த்தினர். மேலும் பீடத்தில் உள்ள 65 பரிவார தெய்வங்களையும்
வழிபட்டனர்.
பின்னர் பீடத்தில்
நடைபெறுகின்ற இலவச யோகா மையத்தினை பார்வையிட்டு அங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவிர்களிடம்
அவர் பேசியதாவது…
கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் உயர்ந்த உள்ளத்தை இங்கே இந்த பயிற்சியில் அமர்ந்திருக்கும்
உங்களை பார்க்கும் போதே தெரிகிறது. ஆகவே இந்த பயிற்சியினை நன்றாக கற்றுக்கொண்டு கல்வியில்
சிறந்து விளங்கவும், வாழ்வில் செல்வ செழிப்பை அடையவும், எவ்வளவு பணம் சேர்ந்திடினும்
உதவும் உள்ளம் ஏற்படவும் வேண்டும் என மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் ஸ்ரீ தன்வந்திரி
பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும்
பெற்று மனம் மகிழ்ந்தனர்.
உலக மக்கள் நன்மையடையும் பொருட்டு யாகங்கள் பலநடத்தியும் அதன் பொருளுனரத்தக்க வகையில் ,அவர்களுக்கு அன் நன்மைகள் சேந்திடவும் பெரிதும் பலம் சேர்த்துகொண்டுள்ள முரளிதர ஸ்வாமிகள் அவர்கள் தொண்டு வளர்க்க வாழ்க வளமுடன் ,மேலும் தன்வந்திரி என்ற கடவுளின் நன்மையான
ReplyDeleteவிரி யுரைகளை இப்பகுதி மக்களுக்கு பரிச்யமாக்கிய பெருமை முரளிதரசுவாமி களுக்குத்தான் பெருமை ,நன்றி வாழ்க வளமுடன்