காஞ்சி மகா பெரியவரைப் பற்றி சொல்ல
வேண்டுமானால் நமது வாழ்நாள் போதாது அந்தளவிற்கு அவருடைய மகிமைகள் எண்ணிலடங்காதவை.
மகானிடம் தரிசனம் தேடி வருபவர்களில் – குடிசை மக்களாகட்டும்… கோடீஸ்வரர் ஆகட்டும்… எல்லோருக்கும் தரிசனம் தந்து பிரசாதம் தருபவர்.
தேசத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். ஸ்வாமிகள். காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான புனித
ஸ்தலங்கள் பலவற்றையும் தரிசித்துள்ளார். காஷ்மீர்
முதல் கேரளம் வரை என்று இந்தியாவின் பல பகுதிகளுக்கும் யாத்திரை
செய்து கோடிக்கணக்கான பக்தர்களின் மனக்குறைகளைக் கேட்டு ப்ரார்த்தனையுடன்
ஆசீர்வதித்துள்ளார்.
இவருடைய
ஆசீர்வாதம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளுக்கு 13வது வயதிலேயே கிடைத்தது.
இதனால் பல அறிய பெரிய சாதனைகளை ஸ்வாமிகள் செய்துள்ளார்கள். தனக்கு குருவருள் கிடைத்ததின்
நினைவாக ஸ்வாமிகள் தனது பீடத்தில் மகா பெரியவா சன்னதியை ஸ்தாபித்துள்ளார். எனவே குருவாகியா
மகா பெரியவாளின் 120வது பிறந்தநாளான 25.05.2013 சனிக்கிழமை காலை 8.00 மணியளவில் ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மகா பெரியவாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் மற்றும்
ஹோமமும் நடைபெற்றது.
No comments:
Post a Comment