Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, October 31, 2022

Sri Kaarthaveeryajunar Jeyanthi Homam and Abishegam at Sri Danvantri Arokya Peedam



 





வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                    ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஜெயந்தி விழாலட்சார்ச்சனை, சத்ருசம்ஹார ஹோமம் நாளை சண்டியாகம் நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு இன்று 31ம்தேதி திங்கள்கிழமை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஜெயந்தி விழா நடைபெற்றது. 

ஸ்ரீகார்த்தவீர்யார்ஜுனர் ஜெயந்தியை ஒட்டி, இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பச்சைக்கல்லில் 4 அடி உயரத்தில் 16 கரங்களுடன்  நின்ற கோலத்தில்  தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்க்கு சிறப்பு ஹோமம் மற்றும்  பால்,தயிர், கரும்புச்சாறு போன்ற 16 விதமான  பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், நவகலச திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி, தீபசேவை ஆகியவை நடைபெற்றன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  காணாமல் போன  பொருள்கள் திரும்பக் கிடைக்கவும், இழந்த செல்வநிலையைத் திரும்பப் பெற, தோஷம் நீங்கிட, அடகு வைத்தநிலம், நகையை விரைவில் மீட்க, கடன் தொல்லை தீர, பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம்பெற வேண்டி  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனரை மனமுருக வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.

முன்னதாக  லட்சார்ச்சனையில் 5ம் நாளான இன்று  மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயார் சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் லட்சார்ச்சனை நடைபெற்றது. 

கந்தசஷ்டியை ஒட்டி  இன்று சத்ருசம்ஹார ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை பெண்களுடன்  உள்ள  ஸ்ரீ கார்த்திகை குமரனான  முருகபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 மங்கள சண்டியாகம் 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை  நவம்பர் 1ம்தேதி  செவ்வாய்க்கிழமை  காலை 7.30 மணி  முதல் மதியம் 2 மணிவரை,நவக்கிரக தோஷங்கள் அகல,  நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள்  நீங்கிட, தோஷங்கள்,திருமணத்தடை அகல,  மன அமைதி பெற்று,மன சோர்வு நீங்கி,திருஷ்டி, செய்வினை அகன்றிட,  கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில்,  வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி  மங்கள சண்டியாகம் நடைபெறுகிறது.


Sunday, October 30, 2022

Sri Kaarthaveeryajunar Jeyanthi vizha on 31.10.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீகார்த்தவீர்யார்ஜூனர்ஜெயந்தி விழா  நாளை 31ம்தேதி நடைபெறுகிறது.


வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.

இன்று 30ம்தேதி  ஞாயிற்றுக்கிழமை  பஞ்சமியை முன்னிட்டு  ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.  ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு நடைபெற்ற ஹோமம் மற்றும் அபிஷேக  பூஜைகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு   ஸ்ரீபஞ்சமுக வராஹியை மனமுருக  வழிபட்டு சென்றனர்.  
பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

 ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் ஜெயந்தி விழா
 இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பச்சைக்கல்லில் 4 அடி உயரத்தில் 16 கரங்களுடன்  நின்ற கோலத்தில்  தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்க்கு ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு  நாளை  31ம் தேதி திங்கள்கிழமை ஸ்ரீகார்த்தவீர்யார்ஜூனர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

விழாவை  ஒட்டி மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்  ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் ஹோமம் , பால், தயிர், கரும்புச்சாரு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு நவ கலச திருமஞ்சனம் ,புஷ்பாஞ்சலி, தீபசேவை  ஆகிய நிகழ்ச்சிகளும்,  இழந்த பொருளை மீட்டுத்தரும் பெருமாளும், சுதர்சன அம்சம் கொண்டவரும், ராஜாதி ராஜனாகவும், ஆயிரம் கைகள் உடையவர் என அழைக்கப்படுபவருமான ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.

 ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர் பூஜை மற்றும் ஹோமங்களில்கலந்துகொண்டால் காணாமல் போன நபர் அல்லது பொருள் திரும்பக் கிடைக்கும், இழந்த செல்வநிலையைத் திரும்பப் பெறலாம், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும், அடகு வைத்தநிலம், நகையை விரைவில் மீட்கலாம், கடன் தீரும், பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம்பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
 
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Saturday, October 29, 2022

Sathru Samhara Homam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சத்ரு சம்ஹார ஹோமம் , சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனை


வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

 கடந்த 27ம்தேதி  தொடங்கிய இந்த லட்சார்ச்சனை  வருகிற  நவம்பர் 5ம்தேதி சனிக்கிழமை முடிய நடைபெறுகிறது.
3  வது நாளான  இன்று   சனிக்கிழமை மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயார் சமேத மூலவர் தன்வந்திரி பெருமாள், உற்சவர் தன்வந்திரி  ஆகியோருக்கு  சிறப்பு பூஜைகளுடன்  லட்சார்ச்சனை நடைபெற்றது.

 கந்த சஷ்டியை முன்னிட்டு 5 வது நாளாக இன்று சத்ரு சம்ஹார ஹோமமும்,  வேறு எங்கும் இல்லாத வகையில் தன்வந்திரி பீடத்தில், கார்த்திகைபெண்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ கார்த்திகைக்குமரனான முருகபெருமாளுக்கு சிறப்பு கலசஅபிஷேக  பூஜைகள் நடைபெற்றது.

மேலும் சனிக்கிழமையை  முன்னிட்டு ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் ,ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஆகிய ஸ்வாமிகளுக்கும் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு   தெய்வங்களை மனமுருகி வணங்கி  வழிபட்டு சென்றனர்.  

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Friday, October 28, 2022

Vaasthu Day Homam and Abishegams at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்வாஸ்து  நாள் முன்னிட்டு சிறப்பு ஹோமம்வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை

இந்தியாவிலேயே வாஸ்து பகவானுக்கு 6 அடி விட்டத்தில்,  அஷ்டதிக் பாலகர்கள் மற்றும் பஞ்சபூதங்களுடன் தனி சன்னதி  அமைக்கப்பட்டுள்ள
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, வாஸ்து நாட்களில் வாஸ்து பகவானுக்கு ஹோமமும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று 28ம்தேதி  வாஸ்து நாளை முன்னிட்டு  காலை  வாஸ்து பகவானுக்கு ஹோமம் நடைபெற்றது. பின்னர்   வாஸ்து பகவான் சன்னதியில்  வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சொந்த வீடு, நிலம்,மனை  பாக்யம் அமைய வேண்டி ஸ்ரீ வாஸ்து பகவானை வணங்கி  சென்றனர்.  

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.







Thursday, October 27, 2022

Latcharchanai (27.10.2022 to 5.11.2022) at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்உலக மக்கள் நன்மைக்காக








லட்சார்ச்சனை


வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள்  லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

இன்று 27ம்தேதி வியாழக்கிழமை தொடங்கிய இந்த லட்சார்ச்சனை  வருகிற 5ம்தேதி சனிக்கிழமை முடிய  நடைபெறுகிறது. லட்சார்ச்சனை தொடங்குவதை முன்னிட்டு   இன்று  ஆரோக்யலஷ்மி தாயார் சமேத மூலவர் தன்வந்திரி பெருமாள், உற்சவர் தன்வந்திரி  ஆகியோருக்கு குங்குமம், துளசி  ஆகியவை கொண்டு லட்சார்ச்சனை  நடைபெற்றது.

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெற உள்ள இந்த லட்சார்ச்சனையில்  பக்தர்கள் பங்கேற்று தன்வந்திரி பெருமாள், ஆரோக்யலஷ்மி தாயார் மற்றும் 89 பரிவார மூர்த்திகளையும் தரிசித்து   பயன் பெறலாம்.
 
மேலும் கந்தசஷ்டியில் 3 வது நாளான இன்று 27ம்தேதி  சத்ரு சம்ஹார ஹோமமும்,  பீடத்தில் கார்த்திகை பெண்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனான முருக பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இந்த லட்சார்ச்சனை,ஹோமம்,பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளையும், ஸ்ரீ கார்த்திகைகுமரனையும் மனமுருக வழிபட்டனர்.

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
 

Wednesday, October 26, 2022

Sri Lakshmi Narasimhar, Sri Karthaveeryajunar, Sathru samhara Homams at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ லஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர், சத்ரு சம்ஹார ஹோமங்கள் , சிறப்பு பூஜைகள் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, இன்று 26ம்தேதி  புதன்கிழமை ஸ்வாதி  நட்சத்திர தினத்தை  முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி நரசிம்மர், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர்   ஹோமங்கள் மற்றும்  கந்த சஷ்டியை முன்னிட்டு  ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு  சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியவை நடைபெற்றது. மேலும் ஸ்ரீ கூர்ம லஷ்மி நரசிம்மர் , ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர், கார்த்திகை பெண்களுடன்  உள்ள ஸ்ரீ கார்த்திகை குமரன் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் ,பூஜைகள் நடைபெற்றன.

ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளில் சென்னை  உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய ஆணையருமான டாக்டர்.பி.ஜோதிமணி,   ராணிப்பேட்டை தொழிலதிபர்  பி.ஆர்.சி. ரமேஷ்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆற்காடு வழக்கறிஞர் சங்கர்  உள்பட பலர் உடன் இருந்தனர்.  

இந்த ஹோமங்களிலும், பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தெய்வங்களை மனமுருக வழிபட்டனர்.

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.






Tuesday, October 25, 2022

Amavasai- Piratyankira yagam, Patrakali yagam, Mahisasuramarthini Poojai

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஐப்பசி மாத அமாவாசையை  முன்னிட்டு  ஸ்ரீ பத்ரகாளி,ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி யாகங்கள் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி  சிறப்பு பூஜை 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, இன்று 25ம்தேதி செவ்வாய்க்கிழமை  ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு , உலக  மக்கள்  நன்மைக்காகவும், ஆரோக்யம், ஐஸ்வர்யம் வேண்டியும் ஸ்ரீ பத்ரகாளி, ஸ்ரீ சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி  யாகங்களும், ஸ்ரீ மகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு  பூஜைகளும் நடைபெற்றது.

 மூலிகைகள், நவதானியங்கள், மிளகாய் வற்றல், பூசணிக்காய் ஆகியவை கொண்டு நடைபெற்ற இந்த ஹோமங்களிலும், பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  தெய்வங்களை மனமுருக வழிபட்டனர்.

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.









Monday, October 24, 2022

Deepavali Sri Lakshmi Kuberar Homam and Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் , அபிஷேக பூஜைகள் 

குபேரபுரி, அழகாபுரி, ஆரோக்யபுரி, ஐஸ்வர்யபுரி  என  பல்வேறு  பெயர்களில்   பக்தர்களால்  அழைக்கப்படும் வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, 5 அடி உயரத்தில் பத்மநிதி, சங்கநிதியுடன்  ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. 

 தீபாவளி பண்டி¬கையை முன்னிட்டு  இன்று 24ம்தேதி திங்கள் கிழமை , உலக மக்கள் அனைவரும் ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யமுடன், ஆனந்தமாக வாழ ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்  நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பலவித  வண்ண மலர்களால்  விசேஷ அர்ச்சனை, தீப சேவை  ஆகியவையும் நடைபெற்றது. யாகம்  மற்றும் அபிஷேகத்தில் பங்கேற்று  வ-ழிபட்ட பக்தர்களுக்கு  பிரசாதமும், குபேர ரட்சை, டாலர்,  குங்குமம் ஆகியவை  வழங்கப்பட்டன.

 நாளை 25ம்தேதி செவ்வாய்க்கிழமை  அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ சரப சூலினி  ப்ரத்யங்கிரா தேவி யாகமும் சிறப்பு  பூஜையும் நடைபெறுகிறது.

 தீபாவளி பண்டிகையை ஒட்டி ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

 







Sunday, October 23, 2022

Maha Puspa Yagam at Sri Danvantri Arokya Peedam

 


 

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா தன்வந்திரி பெருமாளுக்கு  500  கிலோ பூக்களால்  மகா புஷ்ப யாகம் 

வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  ஆக்ஞைப்படி, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா   கடந்த 21ம்தேதி  முதல்  வருகிற 24ம்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.

 விழாவில் இன்று 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், 500 கிலோ எடையில் பல வண்ண  பூக்கள் கொண்டு  புஷ்ப யாகமும், 108   நெய் தீபம் ஏற்றி சிறப்பு ஆராதனையும், அன்னதானமும், தீபாவளி  பண்டிகை முன்னிட்டு தன்வந்திரி லேகியம் தயார் செய்தலும் நடைபெற்றது. 

இன்று நடைபெற்ற  புஷ்ப யாகத்தில்  வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த  நூற்றுக்கணக்கான பக்தர்கள், புஷ்ப யாகத்திற்கு  தங்கள் கைகளாலேயே  பூக்களை  பெற்று  மனமருக தன்வந்திரி  பெருமாளை பிரார்த்தனை செய்தனர்.

பக்தர்களுக்கு  பீடாதிபதி  டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.

மாலை ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. 

 மாலையில், முன்னோர்கள்  முக்தி அடைய  வேண்டி  எம தீபம் ஏற்றப்பட்டது. நாளை 24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம்  நடைபெறுகிறது.








இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.