ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில்
மஹா
தன்வந்திரி ஹோமம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில், ‘ஆல்ஃபா மைன்ட் பவர்’ குருஜி டாக்டர் விஜயலட்சுமி பன்தயன் அவர்களின் தலைமையில் 60 பேர் கொண்ட குழுவாக உலக நலன் கருதியும், உடல் நலம், மன நலம் கருதியும், மனம் அமைதி பெறவும், மனதை ஒருநிலைப்படுத்தவும், உடற்பினி நீங்கி அனைத்து செல்வங்கள் பெறவும், ஒருமனதுடன் கூட்டுப் பிரார்த்தனையுடன், மகா தன்வந்திரி ஹோமத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக ஸ்வாமிகள்,
வந்திருந்த பக்தர்களுக்கு அருளுரை கூறியதாவது… இப்போதெல்லாம் மக்கள் பகவானிடம், எனக்கு
அது வேண்டும், இதுவேண்டும் என்று கேட்பதை நிறுத்தி விட்டு, எனக்கு நல்ல ஆரோக்யம் கொடு,
மன வலிமையை கொடு, முக்தி கொடு என்று கேட்க ஆரம்பித்திருப்பதை பார்க்கும் போது மனதிற்கு
மகிழ்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.
எனவேதான் மக்களின்
மனதறிந்து ‘நோயற்று வாழட்டும் உலகு’ எனும் எங்களது தாரக மந்திரத்திற்கேற்ப பீடத்தில்
நாங்கள் மருத்துவக் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை மூலவராக ப்ரதிஷ்டை செய்துள்ளோம்.
சரி, ஆரோக்யம் மட்டும் கிடைத்து விட்டால் போதுமா… இன்னும் வாழ்வில் அனைத்து தேவைகளும்
வேண்டாமா, அவைகளனைத்தும் பூர்த்தியாகும் வகையில் எங்களது பீடத்தில் இதர 65 பரிவார தெய்வங்களையும்
பிரதிஷ்டை செய்துள்ளோம்.
இவற்றுள் குருவருளும்,
திருவருளும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் காஞ்சி மகா பெரியவா, ராகவேந்திரர், சீர்டி சாய்பாபா, குழந்தையானந்த சுவாமிகள் என குருமகான்களையும்,
சித்தனருள் பெறுவதற்காக சுமார் 400 க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளிலிருந்து
திருமண் எடுத்து வந்து 468 சித்தர்களை சிவலிங்க சொரூபமாக பிரதிஷ்டை செய்துள்ளோம்.
எனவே எங்களது பீடத்திற்கு
வந்திருந்து ஹோமங்களில் கலந்து கொள்ளும் உங்களுக்கு
உடல் ஆரோக்யத்தோடு சகலவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம்
வேண்டாம். எனவே இந்த மகா தன்வந்திரி ஹோமத்தில் அனைவரும் தங்களுடைய பெற்றோர்களையும்,
குருவையும் மனதில் நினைத்து தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்ளுங்கள்,
உங்கள் வேண்டுதல்கள் நிச்சயமாக நிறைவேறும் என்று ஆசீர் வதித்து ஹோமத்தை துவங்கி வைத்தார்.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரை வழங்கினார். அருகில் ‘ஆல்ஃபா மைன்ட் பவர்’ குருஜி விஜயலட்சுமி பன்தயன். |
ஹோமத்தில் கலந்து கொண்ட ‘ஆல்ஃபா மைன்ட் பவர்’ குழுவினர் |
ஹோமத்தில் கலந்து கொண்ட ‘ஆல்ஃபா மைன்ட் பவர்’ குழுவினர் |
ஸ்ரீ தன்வந்திரி பகவானின் பாடலை பீடத்தின் பாடகர் பாடியபோது. |
ஹோமத்தில் கலந்து கொண்ட ‘ஆல்ஃபா மைன்ட் பவர்’ குழுவினர் |
பின்னர் பக்தர்கள்
ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர 65 பரிவார தெய்வங்களையும் ப்ரார்த்தித்து தன்வந்திரி
பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும்
பெற்று பெரிதும் மகிழ்தனர்.
மேலும் பீடத்தில்
நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பங்ககேற்றனர்.
No comments:
Post a Comment