ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் வருகை தந்தார். ஆட்சியருக்கு மங்கள இசையுடன் பூரணகும்பம் மரியாதை அளித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அவர் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு தைலாபிஷேகம் செய்தார். மேலும் பீடத்திலுள்ள 65 பரிவார தெய்வங்களையும், 468 சித்தர்களையும் வழிபட்டு ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார்.
மேலும் பீடத்தின் மூலவரான ஸ்ரீ தன்வந்திரி பகவானிடம் உலக நலன் கருதி சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
ஆட்சியர் அவர்களுக்கு பீடத்தின் சிறப்புகளைப்பற்றி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் எடுத்துரைத்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தன்வந்திரி பிரசாதம் வழங்கிய போது. |
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வரவேற்பு அளித்தபொழுது |
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு தைலாபிஷேகம் செய்தபொழுது |
மாவட்ட ஆட்சியர் 468 சித்தர்களுக்கு அபிஷேகம் செய்தபோது. |
மாவட்ட ஆட்சியர் பீடத்தின் பரிவார தெய்வங்களை பார்வையிட்டபோது. |
தன்வந்திரி பீடத்தில் அமைத்துள்ள காலச்சக்கரத்தின் மகிமையையும், மூலிகையின் முக்கியத்துவத்தையும் ஸ்வாமிகள் எடுத்துரைத்தபோது |
பீடத்தின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்ட ஆட்சியர் அவர்கள் பீடத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பதிவேட்டில் எழுதி வைத்தார்.
மேலும் ஆட்சியர் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மகிழ்ந்தார்.
Arokiya peedam attracting lot of VIPs.. Swamiji is great..
ReplyDeletePattabhiraman