Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, October 8, 2023

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நடைப்பெற்றது 18.09.2023

                                        ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

விநாயகர் சதுர்த்தி விழா கால சக்கர பூஜையுடன் நடைபெற்றது

 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டைஅனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ,ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞன ஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படிவிநாயகர் சதுர்த்தி  புரட்டாசி மாதம் 1ம் தேதி 18.9.2023, திங்கள்கிழமை காலை 10 மணிக்கு

விநாயகர் சதுர்த்தி 27 நட்சத்திரங்களுக்கு,12 ராசிகளுக்கு ,9 வக்கிரகங்களுக்கு என மொத்தம் 48  மண்டலங்களுக்கும் விருட்சங்கள் அமைத்து காலச்சக்கரம் என்ற பெயரில் அமைந்துள்ள செடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அஷ்டதிரவியங்கள் மற்றும் விளாம்பழம்,மோதகம்,அப்பம்,சக்கரைப் பொங்கல், சுண்டல் போன்ற விநாயகருக்கு பிடித்த விசேஷப்பொருட்களுடன் அருகம்பில்,கரும்பு. வெள்ளெருக்கம் வேர் மற்றும் பல வகையான அற்புத மூலிகைகளைக் கொண்டு மஹா கணபதி ஹோமமும் தன்வந்திரி ஹோமமும் நடைபெற்றது.


தன்வந்திரி பீடத்தில் தன்வந்திரி விநாயகரின் சிறப்புகள்

 

தன்வந்திரி பீடத்தில் மட்டுமே உலகில் வேறெங்கும் காணாத வகையில் அமர்ந்த கோலத்தில், 4 அடி உயரத்தில் சிம்ம பீடத்தில் இராஜ பரிபாலனம் செய்யும் வகையில் ஒரே கல்லில் வடக்கு நோக்கி தன்வந்திரி பெருமாளும். தெற்கு நோக்கி விநாயகர் பெருமாளும் அமர்ந்து பக்தர்களுக்கு கர்ம வினை நீங்கும் விதத்திலும். கர்மப்பிணி போக்கும் விதத்திலும் திரு காட்சி தருகிறார்.

 

மஹா கணபதி  ஹோம பலன்கள்


விநாயகர் சதுர்த்தி அன்று நடைபெற்ற  கணபதி ஹோமங்கள்  மூலம்  நட்சத்திரநவக்கிரக தோஷங்கள் மற்றும்  12 ராசிகளில் ஏற்படும் அசுப பலன்கள் 

குறைந்து சுப பலன்கள் ஏற்படும் மேலும்  கெட்ட சக்திகளை அழித்து நன்மை தரும்,  குழந்தைப்பேறு  கிடைக்கும்,  அனைத்து விதமான தடைகள்  நீங்கி விரைவில் திருமணம்தொழில்வியாபாரம்விவசாயம் , உத்தியோகம்  போன்றவைகள்  நல்ல முறையில்  அமைந்து குடும்ப

 சுபிட்சத்துடனும்மன மகிழ்ச்சியுடனும்  வாழலாம்.

ஹோமத்தில் பங்கேற்பதின் மூலம்  மஹா கணபதியின்  பரிபூரண அருளால் கர்ம வினைகள்  நீங்கி   நல்லபுத்திஞானம் கிடைக்கும்

புண்ணியம் உண்டாகும்வீட்டில் தானியம் பெருகும்நவக்கிரக தோஷங்கள் , மனக்கவலைகள் விலகும்பொன்,பொருள் சேர்க்கையும்செயல்களில் வெற்றியும் ஏற்படும்நோய்கள் குணமாகும்.   பொதுமக்கள்பக்தர்கள் இந்த ஹோமங்களில்  பங்கு பெற்று , விநாயகர் தன்வந்திரி ஆசியுடன்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியும் ஒரு சேர பெற்று சென்றனர்இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு நல்லெண்ணெய்சீயக்காய் து|ள்கதம்பப்பொடிபால்தயிர்கரும்பு சாறுபன்னீர்இளநீர்சந்தனம்மஞ்சள்விபூதிபஞ்சாமிர்தம் போன்ற 12 விதமான அபிஷேக திரவியங்களைக்காண்டு சிறப்பு அபிஷேகமும் 27 நட்சத்திரங்கள்,9 நவக்கிரகங்கள்,12ராசிகளுக்குரியவிருட்சங்களுக்கு கலச பூஜையும்சிறப்பு  ப்ரார்த்தனையும்  நடைபெற்றது.


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்தனர்.


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 64 நாட்கள் பரத நாட்டிய திருவிழா 16,10,2023 முதல் 18,12,2023 வரை நடைபெறுகிறது