ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தேய்பிறை
அஷ்டமியை முன்னிட்டு
நிகும்பல யாகம்…
நிகும்பல யாகம்…
தேய்பிறை அஷ்டமியை
முன்னிட்டு உலக நலன் கருதி 01.06.2013 சனிக்கிழமை காலை 08.30 மணியளவில் நிகும்பல யாகம்
நடைபெற உள்ளது.
உலக மக்களின் தீய
எண்ணங்கள், தேவையற்ற மனக்குழப்பங்கள், மரண பயங்கள், பொருளாதாரத் தடைகள், கடன் பிரச்சனை,
உறவு முறையில் சங்கடங்கள், செய்வினை, பில்லி சூன்யம் போன்ற பிற பாதிப்புகள் மற்றும்
நீதிமன்ற வழக்கு பிரச்சனைகள், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, ஜென்மச் சனி, சனி தசை போன்றவைகளால்
ஏற்படும் தோஷங்கள் அகல, ராகு திசையில், ராகு புக்தி - அதனால் ஏற்படும் தடைகள் அகல,
வீடு, மனை, மக்கள் அமையவும், மழைபெய்து விவசாய பெருமக்கள் நல்ல விளைச்சல் பெறவும் இந்த
மாபெரும் யாகத்தை சுமார் 500 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு, வேப்பெண்ணெய், கடுகு, நாயுறுவி,
நெய், தேன் போன்ற எண்ணற்ற மூலிகைகள் கொண்டும், 100க்கும் மேற்பட்ட பழங்கள், புஷ்பங்கள்,
பட்டு வஸ்திரங்கள், நவ ரத்தினங்கள் மற்றும் செவ்வரளிப் பூக்கள் கொண்டும் நிகும்பல யாகம்
நடைபெற உள்ளது.
எனவே பக்தர்கள்
அனைவரும் நிகும்பல ஹோமத்திலும், அதன்பிறகு நடைபெறும் அபிஷேகத்திலும், அன்னதானத்திலும்,
கூட்டுப் பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர்
ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment