Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, July 31, 2013

கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகம்…

ஆடி கிருத்திகையை முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகம் நடைபெற்றது.
கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்ட காட்சி.

கார்த்திகை குமரனுக்கு விபூதி அபிஷேகத்துடன் அலங்கார காட்சி.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கார்த்திகை பெண்களுடன் கூடிய கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஹோமமும், விபூதி அபிஷேகமும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டுபிரார்த்தனை செய்தனர்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தன்வந்திரி குடும்பத்தினர் நடத்தும் கூழ்வார்க்கும் திருவிழா...

ஆடி வெள்ளிக்கிழமையின் சிறப்பு!


ஆடி மாத வெள்ளிக்கிழமைகளுக்கு சிறப்பு மகத்துவம் உள்ளது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக்காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தைசக்தி மாதம்என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே. வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.
ஆடி மாதம்அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும். ஔவை நோன்பு: ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பானது சிறப்புவாய்ந்ததாகும்.
ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம், இது ஏன் தெரியுமா? ..  தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார். அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார்.
அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார். அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி ஆடி மாதம் 3வது வெள்ளிக்கிழமை (2.8.2013) அன்று 8ஆம் ஆண்டு ‘கூழ் வார்க்கும் திருவிழா’தன்வந்திரி குடும்பத்தினரால் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனின் அருளையும், தன்வந்திரி பகவான் மற்றும் இதர பரிவார தெய்வங்களின் அருளையும், ஸ்வாமிகளின் அருளாசியையும் பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

Sani Shanthi / Vancha Kalpa Ganapthy Homam / Soolini Durga Homam

special homam



Tuesday, July 30, 2013

பைரவர் ஹோமம் சிறப்பாக நடைபெற்றது...

ஜூலை 30, 2013 செவ்வாய்க்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் சொர்ணாகர்ஷன பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.

மேலும் அதே நாளில் மாலை 6.00 மணியளவில் கால பைரவர், நவ பைரவருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஸ்வாமிகள் பக்தர்களுக்கு பைரவரை பற்றி அருளுரை வழங்கினார்.

சொர்ணாகர்ஷ பைரவருக்கு பாலபிஷேகம் நடந்த காட்சி
சொர்ணாகர்ஷன பைரவர் அலங்கார காட்சியில்

பைரவர் ஹோமம் நடைபெற்ற பொழுது
ஸ்வாமிகள் அருளுரை வழங்கிய காட்சி

கூட்டுபிரார்த்தனையில் பக்தர்கள்
கூட்டுபிரார்த்தனையில் பக்தர்கள்

சண்டி யாகத்தின் சிறப்பு காட்சிகள், ஜூலை 30, 2013


கலச புறப்பாடு
மகிசாசுரமர்த்தினிக்கு கலசாபிஷேகம்

மகிசாசுரமர்த்தினிக்கு
கலசாபிஷேகம்
மகிசாசுரமர்த்தினிக்கு
கலசாபிஷேகம்

அம்பாளுக்கு ஸ்வாமிகள்
அபிஷேகம் செய்த காட்சி
அம்பாளுக்கு ஸ்வாமிகள்
அபிஷேகம் செய்த காட்சி

அம்பாளுக்கு ஸ்வாமிகள்
அபிஷேகம் செய்த காட்சி
அம்பாளுக்கு ஸ்வாமிகள்
ஆரத்தி எடுத்த காட்சி

பக்தர்களுக்கு ஸ்வாமிகள் தீர்த்தம் தெளித்த காட்சி
கூட்டுபிரார்த்தனையில் பக்தர்கள்

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தி வைத்த சண்டி யாகத்தின் காட்சிகள், ஜூலை 30, 2013


சண்டி யாகத்தில்
பட்டுப்புடவை சமர்பித்த காட்சி
சண்டி யாகத்தின்போது அக்னி வடிவில்
அம்பாள் வெளிப்பட்ட காட்சி

சண்டி யாகத்தின்போது அக்னி
வடிவில் அம்பாள் வெளிப்பட்ட காட்சி
சண்டி யாகத்தின்போது அக்னி
வடிவில் அம்பாள் வெளிப்பட்ட காட்சி

சண்டி யாகத்தின்போது அக்னி
வடிவில் அம்பாள் வெளிப்பட்ட
காட்சி
சண்டி யாகத்தின்போது அக்னி
வடிவில் அம்பாள் வெளிப்பட்ட
காட்சி

கும்ப புறப்பாடு நடந்த காட்சி
கும்ப புறப்பாடு நடந்த காட்சி

கும்ப புறப்பாட்டில் பக்தர்கள்
கும்ப புறப்பாடு நடந்த காட்சி

சண்டி ஹோமத்தின் சிறப்பு காட்சிகள், ஜூலை 30, 2013


சுமங்கலி பூஜையின் பொழுது
சுமங்கலி பூஜையில் ஸ்வாமிகள்

யாக குண்டத்தில் பக்தர்களின் கைகளினால் யாகப்பொருட்கள் போடப்படும் காட்சி
யாக குண்டத்தில் பக்தர்களின் கைகளினால் யாகப்பொருட்கள் போடப்படும் காட்சி

சண்டி யாக காட்சி
சுமங்கலி பூஜையின் பொழுது

சுமங்கலிகளிடம் பக்தர்கள் ஆசி பெற்ற காட்சி
சுமங்கலிகளுக்கு பக்தர்கள் மலர் தூவிய காட்சி

சுமங்கலிகளுக்கு ஸ்வாமிகள் ஆசி வழங்கிய காட்சி
சுமங்கலிகளுக்கு ஆரத்தி எடுத்த காட்சி

சுமங்கலிகளிடம் பக்தர்கள் ஆசி பெற்ற காட்சி
சுமங்கலிகளிடம் பக்தர்கள் ஆசி பெற்ற காட்சி

சுமங்கலிகளிடம் பக்தர்கள் ஆசி பெற்ற காட்சி
சுமங்கலிகளிடம் பக்தர்கள் ஆசி பெற்ற காட்சி