Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, August 29, 2013

இந்திய ரூபாயின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் வகையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமம்…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியால் இந்தியப் பொருளாதாரம் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளதை பார்க்கும் பொழுது 1991ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை நினைவுகூற வைத்துள்ளதாக இந்திய மக்கள் கருதுகின்றனர். இதனால் இந்திய மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலூம் இது முதலீட்டாளர்களின் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தப் படுவதாலும் வங்கிகளுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் டாலரின் தேவை அதிகரிப்பதாலும் கீழ்கண்ட காரணங்களாலும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணம் என்று மக்கள் கருதுகிறார்கள்.
  1. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வது.
  2. கூட்டமைப்புத் திட்டங்களில் ஆர்வம் காட்டாமலிருப்பது.
  3. பணக்காரர்கள் தங்கம் மற்றும் வீட்டுமனைகள் வாங்குவது.
இந்திய பொருளாதார வீழ்ச்சியை தடுக்கும் விதத்திலும், இந்தியாவின் நன்மதிப்பிற்கு கலங்கம் ஏற்படாமல் இருக்கவும், இந்திய முதலீட்டாளர்களின் அச்சம் தவிர்த்து தாராளமாக முதலீடு செய்யவும், இந்திய மக்களின் பொருளாதார வீழ்ச்சி பயம் நீங்கவும் வேண்டி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தலைமையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 01.9.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இழந்த பொருளை மீட்டுக்கொடுக்கும் கடவுளான  ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனரை வழிபடும் விதத்திலும், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனையும், கூட்டுபிரார்த்தனையும் நடைபெற உள்ளது.

அன்புடன் அழைக்கிறோம்...


Wednesday, August 28, 2013

நவபைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் பிரார்த்தனை...

ஆகஸ்ட் 28, 2013 புதன்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 6.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள நவ பைரவருக்கு சிறப்பு ஹோமமும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.

அலங்காரத்தில் நவபைரவர்

நவபைரவர் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள்.

ஸ்ரீ கிருஷ்ண அலங்காரத்தில்...


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு
ஸ்ரீ கிருஷ்ண அலங்காரம்.

வனதுர்கா பீடம் ஸ்ரீலஸ்ரீ துர்கா பிரசாத் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்திற்கு வருகை...


ஸ்ரீ தன்வந்ரி ஆரோக்ய பீடத்தில் வேலூர் வனதுர்கா பீடம் பீடாதிபதி துர்கா பிரசாத் ஸ்வாமிகள் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஆகஸ்ட் 28, 2013 புதன்கிழமை மாலை 6.00 மணியளவில் நடைபெற்ற பைரவர் ஹோமத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விரைவில் விநாயகர் சதூர்த்தி திருவிழா...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயகர் 
சதூர்த்தியை முன்னிட்டு கணபதி ஹோமத்துடன் 23 இலைகளைக் கொண்டு சிறப்பு அர்ச்சனை 

செப்டம்பர் 9, 2013 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லாலான ஸ்ரீ விநாயக தன்வந்திரி, தன்வந்திரி விநாயகர் என்ற முறையில் நான்கடி உயரத்தில் சிம்ம பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் அனுஷ்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடு செய்து, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதையும் காணலாம்.

'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன என்பதை நாம் காணலாம்.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விநாயக சதுர்த்தியன்று 23 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்துடன் அர்ச்சிக்கப்பட உள்ளது. அவ்வாறான இலைகளும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

எண் இலைகள் பலன்கள்
1. முல்லை இலை   அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை
இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்
 சேரும்.
3. வில்வம் இலை விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை
பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி பலன் முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி
வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை நுண்னறிவு கிடைக்கும்
14. மாதுளை இலை பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை
எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை
இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை
உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை
சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம 
கிடைக்கப்பெறும்.
19. தாழம் இலை
செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை
கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் இலை
நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
22. தும்பை இலை துயரங்கள் தீரும்.
23. குண்டுமணி இலை குடும்பம் ஷேமம் ஏற்படும்.

Telugu News - Thanks to Sakshi News Paper



யாககுண்டத்தில் திருக்காட்சி தந்த பைரவர்... - நன்றி திருவருள் சக்தி


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது...

கல்லூஞ்சலில் ஸ்ரீ கிருஷ்ணரின் அலங்கார காட்சி




ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமியை முன்னிட்டு பீடத்தின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நீவநீத கிருஷ்ணனிடம் உலக நலனுக்காக பிரார்த்தனை.

Tuesday, August 27, 2013

Thirukalyanam held to help unmarried men and women with happy life on Aug 19

Several unmarried men and women attended the special Thirukalyanam of Utsava murthy of Sri Danvantri and Utsava murthy of Arogya Lakshmi at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on Monday, August 19, with a view to removing obstacles in their marriage plans.

The homam was held as per the wishes of NRI based in US, Mr. Srinivasa Sampath, in the presence of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The special homam was held at 10 a.m., with the help of Vedic experts. A large number of people, in particular, attended the Thirukalyanam.

Sri Muralidhara Swamigal said this would help several unmarried men and women in the world clear obstacles while looking for marriage, including removal of several doshas.

Special Krishna Jayanthi homam on Aug 28

A special Sri Krishna Jayanthi homam will be conducted on August 28, 2013, at Sri Danvantri Arogya Peedam, Walajapet, in the presence of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The special homam and joint prayer will be held at 10 a.m., Sri Muralidhara Swamigal has announced.

Devotees are requested to turn up in large numbers for the homam and joint prayer.

The homam is being conducted in the interest of world peace and good health.

Donations/sponsorship/contributions are invited. For more details, contact

Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.

Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203.

342nd aradhana of Sri Raghavendra held at Peedam

The Sri Danvantri Arogya Peedam, Walajapet, famous for not just its non-stop homams for human welfare but also installing the idols of various gurus that India is famous for, observed the 342nd aradhana of Guru Raghavendra from August 20 to 24, 2013.

Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal, has installed a 4-foot, Guru Raghavendra idol at the peedam. The unique feature of this idol is that never before has the Guru been depicted with Kamadhenu, the celestial cow.

Cow puja, panchamirtha abishekam, alankaram, archanai, homam, Veda parayanam, Vishnu Sahasranama parayanam, Rudra parayanam were held on all the days of the aradhana.

Sri Muralidhara Swamigal had appealed to all devotees to attend the poojas on this auspicious occasion and receive the blessings of Guru Raghavendra.

ஆயுஷ் ஹோமத்தின் சிறப்பு காட்சிகள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் சென்னை திரு. S.பத்ரிநாத்-C.விஜயலட்சுமி தம்பதிகளின் குழந்தை அபூர்வாவின் ஆயுஷ் ஹோமம் மற்றும் காதணி விழாவும் சிறப்பாக நடைபெற்றது.