Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 8, 2015

அன்புடன் வரவேற்கிறோம்

தன்வந்திரி பீடத்தில் நவம்பர், 2015 9ம் தேதி 11ஆம் ஆண்டு தன்வந்திரி ஜெயந்தி விழா… தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்…

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறதுசிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.
இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மோவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த அவதார திருநாளான 9.11.2015 திங்கட்கிழமை அன்று பீடத்தில் 11வது ஆண்டாக தன்வந்திரி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பீடத்திற்கு வரும் பக்தர்களின் கைகளினால் , மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்களைக் கொண்டு, தன்வந்திரி மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு இந்த லேகியம் சுவாமிகளே தயாரித்து நிவேதனம் செய்து தீபாவளியன்று பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பிடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை – 632513., வேலூர் மாவட்டம்
அலைபேசி : 9443330203
Website : www.danvantritemple.org
e-Mail : danvantripeedam@gmail.com


Thursday, November 5, 2015

Sri Danvantri Jayanthi festival on Nov 09.11.2015 At Danvantri Peedam

Sri Danvantri Jayanthi festival on Nov 09.11.2015 At Danvantri Peedam
The Danvantri Jayanthi Festival will be held at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on November 9th and 10th  for the 11th year, Peedam founder kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.
Lord Mahavishnu took the Danvantri avatar two days before Deepavali on Aipasi trayodasi day. This day is traditionally celebrated as Danvantri Jayanthi. Some celebrate Danvantri Jayanthi as Aipasi hastha star or Aipasi swathi star.
He is regarded as the one who introduced Ayurveda medicine to the world. This Danvantri avatar showed to the people that God came to them as a doctor and as medicine to heal them. It was to demonstrate this that Sri Muralidhara Swamigal set up the Peedam here to provide a healing touch to the problems of the people and invoke the blessings of Lord Danvantri to get good health, wealth and longevity, and seek solution to all problems.
On Monday, November 9th2015, Danvantri Jayanthi will be celebrated at the Peedam. Sri Muralidhara Swamigal will present to the devotees Lehiyam specially prepared at the Peedam on November 9th.
On 10 thLord Danvantri will appear before the people in traditional dress of a doctor with coat and stethescope and so on. Devotees are urged to visit the Peedam and take part in the Danvantri Jayanthi celebrations and receive the blessings of Lord Danvantri and Sri Muralidhara Swamigal.
wwwdanvantripeedam@gmail.com
danvantritemple.org
danvantriblogspot

phone:04172-230033.230274