Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, November 28, 2013

Telugu News (Thanks to Sakshi News Paper)


10ஆம் ஆண்டு தன்வந்திரி மகாமந்திர ப்ரதிஷ்டை விழா…

உலக நலன்கருதி தன்வந்திரி பீடத்தில் 10வது ஆண்டு தன்வந்திரி மகா மந்திர ப்ரதிஷ்டையை முன்னிட்டு இதுவரையில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டி நம்பிக்கையுடன் எழுதி அனுப்பிய மந்திரங்களை வைத்து அவர்களின் ப்ரார்த்தனைகள் நிறைவேற நவம்பர் 28ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

மேற்கண்ட மந்திரங்களை விரைவில் ப்ரதிஷ்டை செய்ய உள்ள சத்தியநாராயணா பெருமாள் மண்டபத்தில் வைத்து தன்வந்திரி மகாமந்திரம் ப்ரதிஷ்டை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 10ஆம் ஆண்டு உலக மக்களின் உளப்பிணி மற்றும் உடல்பிணி நீங்க வேண்டி ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு தைலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்வாமிகள் ஆசி பெற்றனர்.

இந்த வைபவத்தில் தன்வந்திரி குடும்பத்தினர்களான சென்னை ஈ.எஸ்.ஐ. மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் ரங்கராஜ், பாண்டிச்சேரி சீனிவாசன், ஊட்டி இராஜசேகர், தன்வந்திரி குடும்பத்தினர் மற்றும் பக்தர்கள் அனைவரும் பங்குபெற்று கூட்டுப்ரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

இதுவரையில் சுமார் 100கோடி மந்திரங்கள் தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாக ஸ்வாமிகள் தெரிவித்தார்.




Wednesday, November 27, 2013

2014, ஜனவரி 1ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி...

தன்வந்திரி பீடத்தில் அமைந்திருக்கும் சஞ்சீவி ஆஞ்சநேயர்

2014 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடும், கூட்டு ப்ரார்த்தனையும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த ஜெயந்தி விழாவில் அனைவரும் கலந்து கொண்டு அனைத்து வளங்களையும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என ப்ரார்த்தித்துக் கொள்கிறோம்.

டிசம்பர் 16ல் தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா...

மும்மூர்த்திகளின் அம்சமாகப் போற்றப்படுபவர் தத்தாத்ரேயர். தான் கண்ட அனைத்திலுமே குரு உபதேசத்தை உணர்ந்தவர் அவர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, யானை, மான், மீன், நடனமாது, பருந்து, குழந்தை, தாதிப்பெண், பாம்பு, அம்பு எய்வோன், சிலந்தி, குளவி போன்றவை அவருக்கு உண்மையையும் தத்துவத்தையும் உணர்த்தின.

பூமியிலிருந்து பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும் அறிந்தார். தண்ணீரிடமிருந்து தூய்மையையும்; காற்றிடமிருந்து பற்றற்ற தன்மையையும்; தீயிடமிருந்து ஆத்ம ஞானம், தவத்துடன் கூடிய ஒளியுடன் பிரகாசிப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டார். ஆகாயத்திடமிருந்து எங்கும் நிறைந்திருந்தாலும் எதனுடனும் தொடர்பற்று இருப்பதையும்; சந்திரனிடமிருந்து "ஆத்மா பூரணமானது- மாற்றமில்லாதது- குளிர்ந்தது' என்பதையும் அறிந்தார். 

சூரியனிடமிருந்து, மனித சரீரங்கள் மூலம் பிரதிபலிப்பதால் பிரம்மன் பலவாறு தோன்றுவதையும்; புறாவிட மிருந்து பாசமே பந்தத்திற்குக் காரணம் என்பதையும்; மலைப்பாம்பிடமிருந்து கிடைப்பதில் திருப்தியடைய வேண்டும் என்பதையும்; கடலிலிருந்து எந்த நிலையிலும் நிலை குலையாமல் இருப்பதையும்; விட்டில் பூச்சியிடமிருந்து ஆத்மாவில் எப்படி லயிப்பது என்பதையும்; வண்டி டமிருந்து குடும்பத்திற்கு பாரமாக இருக்கக்கூடாது என்பதையும்; தேனீயிடமிருந்து சிறுகச் சிறுக சேமித்து வைத்தாலும் இறுதியில் பயனற்றுப் போவதையும்; யானையிடமிருந்து காமத்தை விட்டுவிட வேண்டும் என்பதையும்; மானிடமிருந்து மயக்கும் இசையைக் கேட்கக் கூடாது  என்பதையும்; மீனிடமிருந்து உணவில் பேராசை கொண்டால் உடல்நலம் கெடும் என்பதையும் அறிந்தார். 

நடனமாதிடமிருந்து ஆசையை விட்டாலே திருப்தி ஏற்படும் என்பதையும்; பருந்திடமிருந்து "உலகப் பொருட்கள்மீதுள்ள பற்றைவிட்டால் ஆனந்தமடைவதையும்; குழந்தையிடமிருந்து எப்பொழுதும் கபடு, சூது இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பதையும்; தாதிப் பெண்ணிடமிருந்து, தனிமையில் இருக்கவேண்டும் என்பதையும்; பாம்பிடமிருந்து தனக்கென  இருப்பிடம் கட்டாமல் கிடைக்கும் இடத்தில் வாழ்வதையும்; அம்பு எய்வோனிடமிருந்து ஆழ்ந்த மனஒருமைப்பாட்டையும்; சிலந்தியிடமிருந்து உலகாயத எண்ணங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் என்பதையும்; குளவியிடமிருந்து  ஆத்மாவில் தியானித்து ஆத்மனாகவே ஆகவேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டார்.

இத்தனை சிறப்பம்சம் கொண்ட ஸ்ரீ தத்தாத்ரேயர் விக்ரஹமானது, உலக மக்கள் அனைவரும் ப்ரார்த்தனை செய்து வாழ்வில் ஆசை துறந்து அன்போடு வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருக்கரங்களினால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் கூட்டுப்ரார்த்தனை செய்து வருகிறார் ஸ்வாமிகள்.

டிசம்பர் 16ம் தேதி திங்கட்கிழமை அன்று ஸ்ரீ தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு : 04172-230033

Gurunanak Jayanthi held at Peedam

November 17, 2013 was Guru Nanak jayanthi held at the Sri Danvantri Arogya Peedam, Walajapet. Yes, the Peedam has installed a granite image of the great saint and observes all important days connected with him.

The Peedam houses several gurus, says Peedam founder, Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal. Starting from Medha Dakshinamurthy, the guru of gurus, to Buddha, Mahavir, Guru Raghavendra, Shirdi Sai Baba, Avatar Baba, Ramanar, Vallalar, Kuzhanthai Ananda Swamigal, Seshadri Swamigal, Kanchi Mahaperiyava and 468 Siddhars, it abounds in gurus.

Important days in the lives of the gurus are also celebrated in the Peedam with special aradhana and poojas. There would be annadhanam for sadhus.

In that tradition, a 1.5-foot-high idol of Guru Nanak, fashioned by Loganatha Sthapathi, has been installed at the Peedam.

November 17, 2013, was celebrated as Guru Nanak jayanthi.

The Swamigal finds his preaching of love for all human beings and equality among them are to be practised by one and all. The Vedanta Lifeology research centre of the Peedam finds his teachings simple and acceptable. Guru Nanak had given important to Vedic and Puranic teachings. He spoke about how human beings should look beyond divisions and distinctions. He proved through his life that love for human beings was as important as religion.

Vedanta Lifeology research centre spreads his teachings and preaching to the people – samathuvam (equality) and manitha neyam (humaneness) – lack of which lead to diseases, said the Swamigal. We have to create a society that looks beyond caste and creed, stresses the Peedam founder.

Guru Nanak laid importance on bhajan and nama japam, which alone would help attain divinity, concurs the Swamigal.


After the special poojas on his jayanthi, done in the traditional format, there was mass prayer for the well-being of the whole world.

Monday, November 25, 2013

காலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்…

உலக நலன் கருதி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக மக்களின் வாழ்வாதாரம் கருதி 25.11.2013 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சொர்ண பைரவருக்கு சிறப்பு ஹோமமும், மாலை 6 மணிக்கு காலத்தை மாற்றும் கால பைரவர் ஹோமமும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் அரளி பூ,  தாமரை பூ, உளுந்து சாதம், உளுந்து வடை நாயுறுவி, வெண்கடுகு போன்ற விசேஷ மூலிகைகள் சேர்க்கப்பட்டது.


Karthaveerya Arjuna Jayanthi held at Danvantri Peedam on 10th November 2013.

Karthaveerya Arjuna Jayanthi of Karthaveerya Utpatthi is celebrated on Kartik Shukla Ashtami, eight day Shukla paksha in the month of Karthik. In 2013, Karthaveerya Jayanthi date is November 10.

Karthaveeraya Arjuna was a great King who ruled Hehaya. Karthaveeryarjuna is worshipped to remove obstacles and to retrieve lost properties. King Karthaveeryarjuna is great devotee of Lord Dattatreya.

Karthaveerya Upasana is one of the auspicious and meritorious sadhanas for Hindus. He gives every power to face challenges in life and to make life happy and prosperous.

A special Karthaveerya Arjuna homam and pooja was held for a large number of devotees  at the  from southern states will take part in the Karthaveerya Arjuna homam to be held at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on Sunday, November 10th, 2013, with a view to overcoming obstacles for their family life. The homam was held in the presence of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

The homam was conducted from 10 a.m. to 1 p.m on Sunday at the end of which abhishekam was performed. This was followed by presentation of prasadam and annadhanam.

Sunday, November 24, 2013

தமிழ்நாடு காவல்துறை பயிற்சியாளர் வருகை...

தமிழ்நாடு காவல்துறை பயிற்சியாளர் திரு. K.P.மகேந்திரன் IPS, ADGP (Training) Chennai, அவர்கள் குடும்பத்தினருடன் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர 67 பரிவார தெய்வங்களையும் கூட்டுப் பிரார்த்தனை செய்தார். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று மகிழ்ந்தார்.




உயர்திரு கே.பி. மகேந்திரன் ADGP அவர்கள் பீடத்தைப்பற்றி கருத்து...


விரைவில் திருமணம் நடைபெற வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது...

திருமணத் தடைகள் உள்ள பெண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் நவம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற்றது. 

இந்த யாகத்தில் தமிழகம், கர்நாடகா, மும்பை, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் இருந்தும் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர்.யாகத்தின் பொழுது ஸ்வாமிகள் அருளுரை வழங்கினார்.

மேலும் யாகத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு ஸ்வாமிகள் கலச அபிஷேகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Saturday, November 23, 2013

அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா? பாகம் 47 - நன்றி பாலஜோதிடம்



அம்மாவின் அம்மா வருகை...

ஸ்ரீ புரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மாவின் அம்மா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் அபிஷேகம் செய்து பீடத்தில் உள்ள 67 பரிவார தெய்வங்களையும், ஸ்ரீ தன்வந்திரி பகவானையும் சேவித்து கூட்டு ப்ரார்த்தனை செய்தார்.


Friday, November 22, 2013

ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் விக்ரம் ப்ரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது...

விவேகானந்தரின் 150வது ஜெயந்தியை முன்னிட்டு குருவின் குருவான ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் விக்ரம் ப்ரதிஷ்டையானது…

உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருவுளப்படி சென்னை, மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தின் ஆசியுடன் நவம்பர் 22ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் விக்ரஹகம் ப்ரதிஷ்டை வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த வைபவத்தில் நாட்ராம்பள்ளி, இராமகிருஷ்ண மடத்தின் மடாதிபதி ஸ்ரீ தியாகராஜானந்த சுவாமிகளும், சென்னை, கொளத்தூர் ராகவாஸ்ரமம் ஸ்ரீ ராஜலட்சுமி அம்மாள் அவர்களும் கலந்து கொண்டு, பீடத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கும், தன்வந்திரி குடும்பத்தினருக்கும் ஆன்மிக அருளுரை வழங்கி ஆசீர் வதித்தார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளும் கலந்து கொண்டனர்.

மேலும் ஆன்மிக திருப்பணிச் செம்மல் மகாலட்சுமி சுப்ரமணியன், லோகநாதன் ஸ்தபதி, டாக்டர் தொப்பகவுண்டர், டாக்டர் ரங்கராஜன், டாக்டர் ஜெகன், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை, சென்னை ஆகியோர்களும், பத்திரிகை நிருபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த வைபவத்தை சிறந்த வேத விற்பன்னர்களான ஸ்ரீலஸ்ரீ ராஜப்பா சிவம், ஸ்ரீலஸ்ரீ பாலாஜி சிவம், ஸ்ரீலஸ்ரீ ராஜீவ்காந்தி சிவம், ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சிவம் ஆகியோர் சிறப்பாக நடத்தி தந்தனர்.

இதனைத் தொடர்ந்து சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளுக்கு வஸ்த்திர தானம் வழங்கப்பட்டது. பின்னர் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.