Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, February 21, 2023

மாசி அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி திருஷ்டி துர்கை யாகம் 20.02.2023

 தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாசி அமாவாசையை முன்னிட்டு சரப சூலினி திருஷ்டி துர்கை யாகம்--     

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் மாசி அமாவாசையை முன்னிட்டு 20.02.2023 திங்கள்கிழமை காலை முதல் மாலை வரை கண் திருஷ்டி நீங்கவும், துஷ்ட சக்திகள் அகலவும், கலைத்துறையில் சிறந்து விளங்கவும், உயர் பதவி கிடைக்கவும், கடன் தொல்லைகள் நீங்கவும், வியாபாரம் மற்றும் தொழிலில் உள்ள தடைகள் நீங்கவும், தடைப்பட்ட திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், கல்வியில் மேன்மை அடையவும், சொந்த வீடு, வாசல், நன்மக்கள் அமையவும் காலத்தை வென்று தீமைகளை அழித்து வெற்றிகளை தரும், சரபசூலினி ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல், பழங்கள், புஷ்பங்கள், பூசணிக்காய் மற்றும் பல்வேறு மூலிகைகளைக்  கொண்டு  திருஷ்டி யாகத்துடன் விஷேச பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் அருள் பெற்று சென்றனர்.



தேய்பிறை பிரதோசம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு பூஜை மேலும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் மற்றும் பஞ்சலிங்க ஜலகண்டேஸ்வரருக்கு விஷேச ஹோமம் மற்றும் அபிஷேகம் மூன்று கால பூஜையாக நடைபெற்றதுஎ

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 18.02.2023 சனிக்கிழமை தேய்பிறை பிரதோசம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு பூஜை மேலும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் மற்றும் பஞ்சலிங்க ஜலகண்டேஸ்வரருக்கு  விஷேச ஹோமம் மற்றும் அபிஷேகம் மூன்று கால பூஜையாக நடைபெற்றது.








 




இறைவனிடம் வைக்கப்பட்ட எப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனைக்கும், வேண்டுகோளுக்கும், கோரிக்கைக்கும் நம் வழிபாட்டு முறையில் நிச்சயம் ஒரு தீர்வு உண்டு. அதன் பலன் நமக்குக் கிடைத்தே தீரும் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும்.
இந்த நம்பிக்கைத் தாரக மந்திரத்தை முன்வைத்துதான் வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் எண்ணற்ற ஹோமங்களும் வழிபாடுகளும் நடந்து வருகின்றன. அதைப் போலவே இந்த நம்பிக்கையைத் தங்கள் மனதில் சுமந்துதான் வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்குத் தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தங்களுக்கு என்ன பிரார்த்தனையோ, அதை முன்வைத்து ஹோமம் செய்கிறார்கள்.
நம் பிரார்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட தேவதையை நாம் குளிர வைக்க வேண்டும். நமக்கு அனுக்ரஹம் செய்ய வைக்க வேண்டும். இதுதான் ஹோமம் செய்வதன் முக்கிய குறிக்கோள் என்பதை உணர வேண்டும்.
மழை வேண்டியும், விவசாயிகளின் நலம் வேண்டியும், பஞ்ச பூதங்களின் ஆசி வேண்டியும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்னைகள், குடும்ப நலன், நோயில்லா வாழ்க்கை, செல்வ வளம், கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, உத்தியோகம் இப்படிப்பட்ட அனைத்துக்கும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு மேற்கண்ட ஹோமமும் பூஜையும் அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.--ண

வைகுண்டம் மஹால் திறப்பு விழா வைபவம் மற்றும் ஸ்ரீநிவாசர் திருக்கல்யாணம் 10.02.2023

 














பஞ்சமியை முன்னிட்டு பஞ்சமுக வாராகிக்கு மாபெரும் யாகம் அபிஷேகம் பூஜைகள் 10.02.2023

                            தன்வந்திரி பீடத்தில் பஞ்சமியை முன்னிட்டு

பஞ்சமுக வாராகிக்கு மாபெரும் யாகம் அபிஷேகம் பூஜைகள்

 

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 10.02.2023 தை வெள்ளிக்கிழமை பஞ்சமியை திதியை முன்னிட்டு காளி, சூலினி, திரிபுர பைரவி, பகுளாமுகி மற்றும் வாராகியென பஞ்சமுகங்களுடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ பஞ்சமுக வராகி அம்மனுக்கு விஷேச ஹோமம் அபிஷேக அர்ச்சனை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை சிறப்பு பூஜைகளும் வராகி தீப வழிபாடும் நடைபெறவுள்ளது.

வராஹி சிறப்பு

வராஹி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். மிகுந்த சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவதை உடனடியாக அருளுபவள். வராஹி தேவிதேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும்வராஹ புராணத்திலும்ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம். வடக்கு திசைக்கு உரியவளான வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையை தருபவள்.

சப்த கன்னியர் ப்ராஹ்மிமாகேஸ்வரிவைஷ்ணவிகௌமாரிவராஹிஇந்த்ராணி மற்றும் சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் வராஹி.

பஞ்சமி தாயாக விளங்கும் ம்பிகை வராஹி ஆவாள். பல்வேறு பஞ்சங்களையும்கஷ்டங்களையும் துரத்தி வாழ்வில் வரலாறு படைக்க வைப்பவள் வராஹி பஞ்சமி திதியில் வராஹிதேவியை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும். அருளும் பொருளும் தருகிற மகாசக்தி கொண்டவள் வாராஹி. வராஹி மனித உடலும்வராஹ முகமும் கொண்டவள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால்இவள் சிவன்,ஹரிசக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள்.

கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலும்ஆதரவிலும் மழைக்கு நிகரானவள் இவள். இவள் லலிதையின் படைத்தலைவியாகசேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர (காட்டு பன்றிகள் இழுக்கும்) ரதமாகும்.

எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள்.

வராகி வழிபாட்டின் பலன்கள்

எதிரிகள் மற்றும் துஷ்ட சக்திகளின் தொல்லைகள் நீங்கி தொழில் வியாபாரத்தில் எதிரிகளின் பாதிப்புகள் குறைந்து வெற்றியடையலாம், தீரா நோய்களிலிருந்து விடுபடலாம், வராகி அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கப் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

மேலும் தொடர்புக்கு

 

“யக்ஞஸ்ரீ  கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை,

வாலாஜாபேட்டை 632513

தொடர்புக்கு 9443330203

தைப்பூசத்தினை (05.02.2023) முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல தேவதா ஹோமமும் சர்வ தேவதா பூஜையும் நடைபெற்றது.

 தைப்பூசத்தினை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

சகல தேவதா ஹோமமும் சர்வ தேவதா பூஜையும் நடைபெற்றது.

 

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தைப்பூசத்தினை முன்னிட்டு    ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு விஷேச ஹோமமும் வள்ளலாருக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து தைப் பௌர்ணமியை முன்னிட்டு பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், தம்பதிகள் குழந்தை பாக்கியம் பெற சந்தான கோபால யாகம் நடைபெற்றது.

மேலும் தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளையும் இதர 89 பரிவார தெய்வங்களையும் வேண்டி சகல தேவதா ஹோமமும் சர்வ தேவதா பூஜைகளும், ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. மாலை இராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வர் பூஜையும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அனைவரும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியுடன் பிரசாதங்களை பெற்று சென்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 





 



 














Friday, February 3, 2023

Prathosam Abishekam , Pooja at sri Danvantri Arogya Peedam

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தைமாத பிரதோஷம் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் 

 வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  தினந்தோறும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களும், மாதாந்திர  அமாவாசை,  பௌர்ணமி, சதுர்த்தி,  பிரதோஷ நாட்களில் பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று  வருகிறது. 

அதன்படி இன்று 3ம்தேதி வெள்ளிக்கிழமை  தை மாத பிரதோஷத்தை முன்னிட்டு ,  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்,  நந்தி பீடத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரர்க்கும்  சிவலிங்க வடிவில் உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகளும்,சித்தர்களின் ஞான குருவான ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

பிரதோஷ பூஜை மற்றும் அபிஷேகங்களில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து, பிரசாதங்களும், பீடாதிபதி டாக்டர். முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். 

 முன்னதாக இன்று பிப்ரவரி 3ம்தேதி  வெள்ளிக்கிழமை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீமகாலட்சுமி ஹோமங்கள், சந்தான கோபால யாகம் மற்றும்  நவநீத கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகளும்  நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.












Thursday, February 2, 2023

Pournami& ThaiPoosam Homams at sri Danvantri Arogya Peedam





வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
தைப்பூசத்தை முன்னிட்டு பௌர்ணமி யாகங்கள் 

 வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  தினந்தோறும் ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்களும், மாதாந்திர  அமாவாசை,  பௌர்ணமி, சதுர்த்தி,  பிரதோஷ நாட்களில் பல்வேறு ஹோமங்களும், பூஜைகளும் நடைபெற்று  வருகிறது. 

 மாதாந்திர  பௌர்ணமி நாட்களில்  ஆண், பெண்,  பித்ரு தோஷம்,  கலத்திர தோஷம்,  நவக்கிரக தோஷம், ஜாதக ரீதியான  தோஷங்கள், பித்ரு சாபம்  நீங்கி விரைவில்  திருமண பாக்கியம் பெற கந்தர்வ ராஜஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமங்களும் ,  தம்பதிகள் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும், ராகு  கேதுவிற்கு அன்னாபிஷேகமும்  நடைபெற்று வருவது வழக்கம்.

அதன்படி வருகிற 5ம்தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு  கந்தர்வ ராஜ ஹோமம்,  சுயம்வர கலா பார்வதி ஹோமம்,  சந்தான கோபால யாகம், சகல தேவதா ஹோமமும், சர்வதேவதா  பூஜையும் , ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. மேலும் அன்று தைப்பூசத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள வள்ளலாருக்கும், சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும்  சிறப்பு அபிஷேக, பூஜைகளும், சிறப்பு அன்னதானமும்  நடைபெறுகிறது.

 முன்னதாக  காலை  கோ பூஜையுடன், காலச்சக்கர பூஜை, கலச பூஜை ஆகியவையும் பின்னர்  லோக ஷேம ஆரத்தியுடன்  ஹோமமும், பூர்ணாஹதி மற்றும் கலசாபிஷேகமும் நடைபெறுகிறது.  
 
 முன்னதாக இன்று பிப்ரவரி 2ம்தேதி  வியாழக்கிழமை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ சுதர்சனர், ஸ்ரீமகாலட்சுமி  ஹோமங்கள் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர். 
---------------------------

Wednesday, February 1, 2023

Ekadasi Special Homam, Abishekam at Sri Danvantri Arogya Peedam


 

வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 
மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு ஏகாதசி சிறப்பு ஹோமம், அபிஷேகம்

 வாலாஜாபேட்டை , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி  நித்ய ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. 

அதன்படி  மாதாந்திர ஏகாதசிகளில்  மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு , தன்வந்திரி ஹோமமும், நெல்லிப்பொடி கொண்டு அபிஷேகமும் நடைபெற்று வருவது வழக்கம்.

இன்று பிப்ரவரி1ம்தேதி  ஏகாதசியை  முன்னிட்டு  மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர்  நெல்லிப்பொடி, பால், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் ,பூஜையும் நடைபெற்றது. 

இந்த ஹோமம் மற்றும் பூஜைகளில்  பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து,  பிரசாதமும்,  
பீடாதிபதி முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர். 

 வருகிற 5ம்தேதி தைப்பூச தினத்தில் பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள், பெண்களுக்கு  தோஷங்கள்,
 திருமணத்தடைகள்  அகல வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம்,  தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற வேண்டி  சந்தான கோபால யாகம் ஆகிய ஹோமங்கள் நடைபெறுகிறது. முன்னதாக 5ம்தேதி அன்று காலை  கோ பூஜையுடன், காலச்சக்கர பூஜையும் பின்னர்  கலச பூஜை, லோக ஷேம ஆரத்தியுடன் ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் கலசாபிஷேகம் ஆகியவை நடைபெறுகிறது. 
 
இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.