Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, December 14, 2016

108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜை

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில்
அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 14.12.2016ல்  108 சுமங்கலிகள் பங்கேற்கும்  சுமங்கலி பூஜை நடைபெற்றது.





Tuesday, December 13, 2016

Sri Danvantri Peedam, Walajapet, conduting 108 Sumangali Pooja on 14.12.2016 and 108 Herbals Moolikai Theertha Abhishekam for Lord Danvanvantri. Ct:9443330203.


Sri Maha Kaali Yagam Conducted from 11th to 13th December 2016 at Sri Danvantri Peedam, Walajapet


தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப மஹா காளி யாகம் மற்றும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஹோமமும் அபிஷேகமும் நிறைவுற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகன் ஆசிகளுடன் 11.12.2016 முதல்  நடைபெற்று வருகிற. லட்ச ஜப மஹாகாளி யாகமும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஹோமமும் அபிஷேகமும் ஸ்ரீ அஷ்டபைரவர் மற்றும்  ஸ்ரீ காலபைரவருக்கும் அபிஷேகம்  13.12.2016 ல் பூர்த்தி பெற்றது
இதனை தொடர்ந்து 14.12.2016 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் 15.12.2016 அன்று தன்வந்திரி பீடத்தின் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மூலவர் தன்வந்திரிக்கு 108 மூலிகை தீர்த்தங்களை கொண்டு

மஹா அபிஷேகமும் 108 கலசம் வைத்து சிறப்பு தன்வந்திரி  ஹோமமும் நடைபெற உள்ளது.. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.












Sunday, December 11, 2016

Homams and Events Conducted at Sri Danvantri Peedam, Walajapet










தன்வந்திரி பீடத்தில் லட்ச ஜப மஹா காளி யாகம்.இன்று தொடங்கியது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று காலை 8.00 மணிக்கு கோபூஜை, விநாயகர் பூஜை, கலச பூஜையுடன் லட்ச ஜப மஹாகாளி யாகம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகன் ஆசிகளுடன் நடைபெற்றது. இந்த யாகத்தில் மழை வேண்டியும் உலக மக்களின் நலன் கருதியும் இயற்கை வளம் வேண்டியும் கிராம தேவதைகளின் அருள் வேண்டியும் பஞ்சபூதங்களின் அருள் வேண்டியும் மஹா காளி யாகத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.அதற்கு முன்பாக மஹா ப்ரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த யாகத்திறகு 6*10 அடி அகலத்தில் 4 அடி ஆழத்தில் பிரத்தியேகமாக மஹா குண்டம் அமைக்கப்பட்டது. 27 கலசங்கள் அமைத்து பூஜையானது துவங்கப்பட்டது. இந்த யாகம் 13.12.2016 செவ்வாய் கிழமை பௌர்ணமியன்று மாலை 6.00 மணியளவில் முடிவடையும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



Saturday, December 10, 2016

Moksha Deepam for Sri. J.Jayalalitha conducted at Sri Danvantri Peedam, Walajapet.



Sri Dattatreya Jayanthi Festival at Sri Danvantri Peedam, Walajapet on 13th December 2016.


வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் வருடாந்திர தைலாபிஷேகம் பூர்த்தியுடன் டிசம்பர் 14ம் தேதி 108 சுமங்கலி பூஜையும் டிசம்பர் 15ம் தேதி 108 மூலிகை தீர்த்தத்தினால் தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகம் நடைபெற உள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அனந்தலை மதுரா கீழ்பதுப்பேட்டை யில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் உடல் பிணி தீர 8 அடி உயரமுள்ள ஸ்ரீ தன்வந்திரி முலவருக்கு 13 ம் ஆண்டு நடைபெற உள்ளது, இந்த வைபவம் நவம்பர் 28 வெள்ளிக் கிழமை முதல் டிசம்பர் 14 ம் தேதி ஞாயிற்று கிழமை வரை தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 6,00 மணி வரை நடைபெற உள்ளது.

தன்வந்திரி பகவான் யார்

தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

108 மூலிகை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்வதால் நோய்

உற்றவர்கள் விரைவில் குணமடையவும் ஆயுள் தோஷம் நீங்கவும் மனத் தடைகள் மன நோய்கள் நீங்கவும், பித்ரு சாபம் அகலவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும் ஏழறை சனி அஷ்டம சனி அர்த்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும் வாய் புண் வயிற்று புண் குடல் சம்மந்தமான நோய்கள் கண் சம்மந்தமான நோய்கள் ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்கு வழி வகை செய்யும். வருடாந்திர தைலாபிஷேகம் பூர்த்தியுடன் டிசம்பர் 14ம் தேதி 108 சுமங்கலி பூஜையும், டிசம்பர் 15 ம் தேதி 108 மூலிகை தீர்த்தத்தினால் தன்வந்திரி பகவானுக்கு மஹா அபிஷேகம் செய்து, சிறப்பு நோய் நிவாரண ஹோமத்துடன்விசேஷ வழிபாடுகள் செய்து இந்த விஷேசமான வைபவத்தில் அனைத்து பக்தர்களும் பங்கேற்று பயன் பெற பிராத்திக்கின்றோம். இந்தத் தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தன்வந்திரி பீடத்தில் 13.12.2016 தத்த ஜெயந்தி விழா

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞை படி வருகிற 13.12.2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் தத்தாத்ரேயர் ஜெயந்தி விழா தத்தாத்ரேயர் ஹோமத்துடன் சிறப்பாக நடைபெற உள்ளது.

தத்தாத்ரேயர் வரலாறு
இறையருளால், மும்மூர்த்தியர் அம்சமாக அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் அவதரித்தவர்தான் ஸ்ரீதத்தாத்ரேயர். மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். இடபமும், அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.
உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.

அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும்; விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீதத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

வருகிற 13.12.2016 செவ்வாய்க்கிழமை அன்று தத்த ஜெயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் தத்தாத்ரேயர் ஹோமத்துடன் மகா அபிஷேகமும், நாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பு பெற்றுள்ளது என்று கூறுகிறார் கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேற்கண்ட யாகத்தில் பங்கேற்று பலன் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ஸ்ரீதத்தாத்ரேய காயத்ரி மந்திரம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
திகம்பராய தீமஹி
தந்நோ தத்த பிரசோதயாத்.'

மேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது உண்மை.

மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா, வாலாஜாபேட்டை-632513
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172-230033 / 9443330203