Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, October 29, 2013

12 அடி ஆழமும், 16 அடி விட்டமும் கொண்ட மாபெரும் யாகசாலை...

உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்திற்காக 12 அடி ஆழமும், 16 அடி விட்டமும் கொண்ட மாபெரும் யாகசாலை அமைப்பதற்கான ஆயத்த திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணிகளை சிவாச்சாரியார்கள் பார்வையிட்டனர்.

மேலும் அன்றைய தினங்களில் வரும் பக்தர்கள் எந்தவித சிரமும் இல்லாமல் ஹோமத்தில் கலந்துகொள்வதற்காக  வசதிகளை செய்து வருகிறார் ஸ்வாமிகள்.



Monday, October 28, 2013

5000 kg Red Chilly yagam at Peedam

5000 kg of Red Chilly yagam would be held as part of the Maha Pratyangira homam at Sri Danvantri Arogya peedam, Walajapet, from December 20 to 25, 2013, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.

The Maha Pratyangira homam would be held along with Vanja Kalpalatha, Soolini, Thirsty Durga, Deepa Chandi, Nigumbala and Maha Bhairavar homam from December 20 to 25 in the mornings and evenings.

Along with 5000 kg of Red Chilly, 2000 litres of neem oil, 1008 pumpkins, 108 silk sarees, salt, pepper, turmeric, kungumam etc would be offered.

Those who wish to take part in the yagam have to contribute Rs 10,000 and perform sankalpam (maximum four persons allowed per family).

For more details regarding payments, contact:

Sri Muralidhara Swamigal
Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Kilpudupet, Walajapet 632513, Vellore District.
Phones: 91-4172-230033, 292133, 292433, 0-94433 30203
E-mail: danvantripeedam@gmail.com
Web: www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in

Tree planting programme held at Peedam


The Chennai Trekking Club (CTC), working with Sri Danvantri Arogya Peedam, Walajapet, on October 26, 2013, planted trees and helped improve soil fertility and promote greenery with a view to create a better environment in the campus in tune with nature. The campaign was undertaken at the Peedam with the assistance of Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.   

Over 100 volunteers and leaders of CTC worked at the Peedam on Saturday from 10 a.m., to plant saplings and help in improving greenery and to make the campus environment-friendly.

They also helped in organising a garden where vegetables, flowers and fruits can be grown. Later, they cooked food and stayed overnight at the Peedam. They would leave on October 27 morning for another programme at Kanchipuram.

Sri Yogi Sankarar visits Peedam


The founder of Sri Bhagwan Pathanjali Yoga Peedam, Sri Yogi Sankarar Guruji, visited Sri Danvantri Arogya Peedam, Walajapet, on October 26, 2013. He was received with traditional honours by DAP founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal.

Sri Yogi Sankarar Guruji went around the Peedam and worshipped before Lord Danvantri and the 65 other idols installed at the Peedam.  

He also worshipped before the idols for 468 Siddhars.

He also received the blessings of Sri Muralidhara Swamigal.

Danvantri Jayanthi festival on Nov 1 and 2

The Danvantri Jayanthi Festival will be held at the Sri Danvantri Arogya Peedam, Walajapet, on November 1 and 2 for the 9th year, Peedam founder kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has announced.

Lord Mahavishnu took the Danvantri avatar two days before Deepavali on Aipasi trayodasi day. This day is traditionally celebrated as Danvantri Jayanthi. Some celebrate Danvantri Jayanthi as Aipasi hastha star or Aipasi swathi star. 

He is regarded as the one who introduced Ayurveda medicine to the world. This Danvantri avatar showed to the people that God came to them as a doctor and as medicine to heal them. It was to demonstrate this that Srei Muralidhara Swamigal set up the Peedam here to provide a healing touch to 
the problems of the people and invoke the blessings of Lord Danvantri to get good health, wealth and longevity, and seek solution to all problems. 

On Friday, November 1, 2013, Danvantri Jayanthi will be celebrated at the Peedam. Sri Muralidhara Swamigal will present to the devotees Lehiyam specially prepared at the Peedam on November 1.

On November 2, Lord Danvantri will appear before the people in traditional dress of a doctor with coat and stethescope and so on. Devotees are urged to visit the Peedam and take part in the Danvantri Jayanthi celebrations and receive the blessings of Lord Danvantri.

For more details : 04172-230033

கந்தசஷ்டியை முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு விசேஷ ஹோமம்…

சத்ரு தொல்லை நீங்க 
சத்ரு சம்ஹார ஹோமம்…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 8.11.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் மாபெரும் சத்ரு சம்ஹார ஹோமமும், த்ரிசதி அர்ச்சனையும் நடைபெற உள்ளது.

தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனை ப்ரதிஷ்டை செய்து அவ்வப்பொழுது சுப்ரமணிய ஹோமமும், சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெற்று வருகிறது.

கார்த்திகை பெண்கள்
இந்த ஆண்டு கந்த சஷ்டியை முன்னிட்டு உலக மக்கள் சத்ரு பயமின்றி செவ்வாய் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், இரத்த புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வராமல் தடுக்கவும், தொழிலில் ஏற்படும் தடைகள் நீங்கவும், பூமியினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், உடலில் ஏற்படும் பலவிதமான நோய்கள் நீங்கவும், திருமணத் தடைகள், உத்யோக தடைகள், குழந்தையின்மை போன்றவைகள் நீங்கவும், பெற்றோர்கள் இல்லாமல் தவிப்பவர்களுக்கு நல்ல ஆரோக்யம் கிடைக்க தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட யாகம் விசேஷமாக நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து கார்த்திகை குமரனுக்கு மஹா அபிஷேகமும், த்ரிசதி அர்ச்சனையும், விசேஷ ப்ரார்த்தனையும் நடைபெற உள்ளது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் தொடர்புக்கு : 04172-230033

Sunday, October 27, 2013

தன்வந்திரி பீடத்தில் நவம்பர் 1ம் தேதி மற்றும் 2ம் தேதி 9ஆம் ஆண்டு தன்வந்திரி ஜெயந்தி விழா…

தீபாவளி மருந்தும் தன்வந்திரி சிறப்பும்…

மகாவிஷ்ணு தன்வந்திரியாக அவதரித்த நாள் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளாகும். இந்த தினத்தை தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.  சிலர் ஐப்பசி ஹஸ்த நட்சத்திரத்தையும், சிலர் ஐப்பசி சுவாதி நட்சத்திரத்தையும் தன்வந்திரி ஜெயந்தியாக கொண்டாடி வருகின்றனர்.

இவரே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக ஐதீகம். இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்ற அரிய தத்துவத்தை இந்த அவதாரம் சுட்டிக்காட்டுகி றது.

ஸ்ரீ தன்வந்திரி விஷ்ணுவின் அம்சமாக, பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்; முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும் ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். அக்கால மருத்துவ முறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப் பூச்சிகள் பயன்பட்டனவாம். இப்போதும் இந்த முறையின் பயனை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவேதான் தன்வந்திரி விக்ரஹத்தில் அட்டை பூச்சியும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை அம்சங்களுடன் கூடிய தன்வந்திரி பகவானை உலக நலன் கருதி, நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்துடன் வேலூர் மோவட்டம் வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைத்து அங்கு மூலவராக ப்ரதிஷ்டை செய்து தினம் தோறும் ஹோமங்கள், ஜபங்கள் மற்றும் கூட்டுப்ரார்த்தனைகள் செய்து வருகிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

இந்த அவதார திருநாளான 1.11.2013 வெள்ளிக்கிழமை அன்று பீடத்தில் 9வது ஆண்டாக தன்வந்திரி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் பீடத்திற்கு வரும் பக்தர்களின் கைகளினால் ஆ, மிளகு, சுக்கு, திப்பிலி, வெல்லம், பொருள்களைக் கொண்டு, தன்வந்திரி மந்திரங்களை உச்சரித்து, தன்வந்திரி பகவான் சன்னதி முன்பு இந்த லேகியம் சுவாமிகளே தயாரித்து நிவேதனம் செய்து தீபாவளியன்று பீடத்திற்கு வருகைதரும் பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும், தீபாவளி லேகியமாகவும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் 2.11.2013 அன்று ஸ்ரீ தன்வந்திரி பகவான்  விசேஷமான மருத்துவர் கோலத்தில் ஸ்டெதஸ்கோப், டாக்டர் கோட் போன்ற உபகர்ணங்களுடன் மருத்துவ உடையில் காட்சி தருவார்.


இந்த வைபவங்களில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் ப்ரார்த்திக்கின்றோம்.

சுயம்வரகலா பார்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், திருமணம் ஆகாத பெண்களுக்கான ஹோமம் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிறப்பு கந்தர்வராஜ ஹோமமானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் திருமணமாகத பெண்கள் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் வருகிற டிசம்பர் மாதம் 20த் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற இருக்கிற 5000 கிலோ சிகப்பு மிளகாய் ஹோமத்திறகாக தற்போது பீடத்தில் அமைந்துள்ள உக்ர ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் அபிஷேம் நடைபெற்று வருகிறது. இதில் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பெண்கள், தேவிக்கு மிளகாய் அபிஷேம் செய்து ப்ரார்த்தனை செய்து கொண்டனர்.

பின்னர் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.


Saturday, October 26, 2013

4 ஆம் ஆண்டு அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி சிறப்பு ஹோமம்…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் அகில உலக புரோகிதர்கள், வியாச வம்சத்தினர், ஜோதிடர், டாக்டர், குருமார்கள், கலைஞர்கள் என இது போன்று மக்களுக்காக பணியாற்றக்கூடி அனைத்துதரப்பினரும் அவர்களின் குடும்பத்தாரும் வாழ்வில் எந்த நோயுமின்றி ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்வாமிகள் சிறப்பு தன்வந்ரி ஹோமம் நடத்த உள்ளார்.

இந்த ஹோமத்தில் அனைவரும் பங்குபெற்று பயன்பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றோம்.




ஸ்ரீ யோகி சங்கரர் குருஜி வருகை…

ஸ்ரீ பகவான் பதஞ்சலி யோக பீடத்தின் நிறுவனர், தவயோகஞானி தவத்திரு ஸ்ரீ யோகி சங்கரர் குருஜி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து தன்வந்திரி பகவான் மற்றும் தன்வந்திரி பீடத்தின் இதர 66 பரிவார தெய்வங்களையும், 468 சித்தர்களையும் தரிசித்தார். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்.

தன்வந்திரி பீடத்தில் மரம் நடும் விழா மற்றும் பசுமை பாதுகாப்பு விழா நடைபெற்றது…

26.10.2013 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் சுற்றுபுற சூழல் பாதுகாப்புக்காகவும், பசுமை பாதுகாப்புக்காகவும், மரங்களை பாதுகாக்கவும், மரங்களை வளர்க்கவும், மண்வளம், மழைவளம் செழிக்கவும் சென்னை ட்ரெக்கிங் கிளப் (Chennai Trekking Club) மற்றும் வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு மரம் நடுதல், மரம் வளர்த்தல், மரங்களின் பெயர்களை அனைவருக்கும் தெரியும் படி எழுதி வைத்தல், காய்கறி தோட்டம், பூந்தோட்டம், மூலிகைத் தோட்டம் போன்றவைகளை சீர் செய்தனர்.



அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா? பாகம் 43 - நன்றி பாலஜோதிடம்




Monday, October 21, 2013

அக்னி ஹோமங்கள் அல்லலைத் தீர்க்குமா? பாகம் 42 - நன்றி பாலஜோதிடம்



சிகப்பு மிளகாய் அபிஷேகம்…

22.10.2013 செவ்வாய்கிழமை முதல் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு 
சிகப்பு மிளகாய் அபிஷேகம்…


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பத்தாம் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டும் உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மாபெரும் ப்ரித்யிங்கிரா தேவி ஹோமம் நடத்த உள்ளார். இந்த ஹோமத்தில் 5000 கிலோ காய்ந்த மிளகாய் வற்றல், 1008 பூசணிக்காய், 108 வகையான மூலிகைகள், 108 வகையான பட்டு வஸ்த்திரங்கள், சௌபாக்ய பொருட்கள், 108 முறம், உப்பு, கடுகு, மிளகு, உளுந்து வடை, நவரத்தினங்கள், மாங்கல்ய பொருட்கள் மற்றும் அனைத்துவிதமான பட்சணங்களும் இந்த ஹோமத்தில் சேர்க்கப்பட உள்ளது.

இந்த ஹோமத்தில் மிளகாய் வற்றல் அதிகம் இடம்பெறுவதற்கான காரணம் உலக மக்களின் செய்வினை, பில்லி, சூன்யம், சுமங்கலி சாபம், கன்னி சாபம், குரு சாபம், பிராமன சாபம், ஊழ்வினை, மாந்த்ரிகம், தாந்த்ரிகம், காத்து, கருப்பு, சமராகு, ராகுதசை, ராகுபுக்தி, சனிதசை, சனிபுக்தி, அஷ்டம சனி, ஏழரை சனி, ஜென்ம சனி போன்றவைகளால் ஏற்படும் இன்னல்கள் அகலவும், மேலும் பல தோஷங்கள் நீங்கவும், திருமணம், குழந்தை, தொழில், உத்யோகம், வியாபாரம், வழக்கு, கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் இராஜாங்க பதவி கிடைக்க நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நிரல்
20.12.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் வாஞ்சாகல்பலதா கணபதி ஹோமம். மாலை 6.00 மணியளவில் தீபசண்டி பாராயணம்.

21.12.2013 முதல் 25.12.2013 வரை 
நடத்தப்படும் ஹோமங்கள்

  1. ஐஸ்வர்ய ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் சூலினி துர்கா ஹோமம்– 21.12.2013
  2. சூலினி ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் திருஷ்டி துர்கா ஹோமம் – 22.12.2013
  3. ராஜ ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் வாராகி ஹோமம் – 23.12.2013
  4. மங்கள ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் நிகும்பல ஹோமம் – 24.12.2013
  5. மஹா ப்ரத்தியங்கிரா ஹோமத்துடன் மஹா பைரவர் ஹோமம் – 25.12.2013

இந்த ஹோமத்தில் 16க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். சுமார் 5000 கிலோ மிளகாயுடன், 2000 லிட்டர் வேப்ப எண்ணெய் கொண்டு நடைபெறும் இந்த ஹோமங்களை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவிக்கு 22.10.2013 செவ்வாய்கிழமை முதல் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை முன்வைத்து, தங்களின் கரங்களினாலேயே சிகப்பு மிளகாய் வற்றல் அபிஷேகம் நடைபெற உள்ளது. இப்படி பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறும் வகையில் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறக்கூடிய இந்த ஹோமங்களில் பக்தர்கள் கைகளினால் அபிஷேகம் செய்யப்பட்ட மிளகாய் வற்றலை சமர்பிக்கப்பட உள்ளது.

மேலும் இந்த ஐந்து நாட்களும் சிறப்பு அன்னதானங்களும் நடைபெற உள்ளது. இந்த ஐந்து நாள் வைபவங்களிலும் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் பிரார்த்திக்கின்றோம்.

குறிப்பு : 5000 கிலோ மிளகாய் வற்றல் ஹோமத்திற்கு கைங்கர்யமாக மிளகாய்வற்றல் வாங்கிக்கொடுக்க விரும்புபவர்களும், இந்த ஹோமத்தில் குடும்பத்தினருடுன் பங்குபெற விரும்புபவர்களும் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.

(குடும்பத்துடன் பங்குபெற ரூ.2000/-. (4 நபர்கள் மட்டும்))
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203
www.dhanvantripeedam.com / www.danvantripeedam.blogspot.in
Email : danvantripeedam@gmail.com

Sunday, October 20, 2013

கந்தர்வராஜ ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…

திருமணம் ஆகாத ஆண்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், பித்ரு சாபங்களும், கிரக தோஷங்களும், குலதெய்வ தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை கந்தர்வராஜ ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தின் பொழுது ஸ்வாமிகள் ஹோமத்தின் சிறப்புகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் பக்தர்களுக்கு அருளுரை வழங்கி ஆசீர்வதித்தார்.

இந்த ஹோமத்தில் 100க்கும் மேற்பட்ட திருமணமாகாத ஆண்கள் தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வந்திருந்து கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் அவர்களுக்கு ஹோம கலச தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் அன்றையதினம் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமிலும், சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.



13 10 2013 Nigumbala Yagam at Danvantri Peedam SVBC News

இலவச மருத்துவ முகாமின் காட்சிகள்...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இன்று காலை 11.00 மணியளவில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்று கொண்டிருக்கிற காட்சிகள்