Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Friday, July 31, 2015

நன்றி மாநில முரசு 29.07.2015


THANKS TO DECCAN CHRONICLE 31.07.2015


31.07.2015 வெள்ளிக்கிழமை. 10ஆம் ஆண்டு ‘கூழ் வார்க்கும் திருவிழா’ ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது..

31.07.2015 வெள்ளிக்கிழமை. 10ஆம் ஆண்டுகூழ் வார்க்கும் திருவிழா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது..




ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம்.
உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர். அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர்-இவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி ஆடி மாதம்  3 வது வெள்ளிக்கிழமை31.07.2015) இன்று   10 ஆம் ஆண்டுகூழ் வார்க்கும் திருவிழா நடைபெற்றது..
பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள மகிசாசுரமர்த்தினி அம்மனின் அருளையும், தன்வந்திரி பகவான் மற்றும் இதர பரிவார தெய்வங்களின் அருளையும், ஸ்வாமிகளின் அருளாசியையும்  பெற்றனர்.

நன்றி தினமணி 31.07.2015



நன்றி நமதுமலர் 31.07.2015


Thursday, July 30, 2015

ஆடிப்பெருக்கு – பதினெட்டாம் பெருக்கு 03.08.2015

ஆடிப்பெருக்கு – பதினெட்டாம் பெருக்கு
சிறப்பை தெரிந்துகொள்ளும் விதத்திலும், போற்றிடும் விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்தும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆகஸ்ட் 3, 2015ல் சிறப்பு பிரார்த்தனைகள்…
வேலூர் மாவட்டம் வாலஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாரம்பரியங்களின் சிறப்பை மக்கள் அறிந்திடும் விதத்திலும், சமய பூஜைகளைப்பற்றி தெரிந்திடும் விதத்திலும், இயற்கையை துதித்திடும் விதத்திலும், மாங்கல்யத்தின் மகிமையை உணர்ந்து போற்றிடும் வகையிலும், வருண பகவானின் கருணை உலக மக்களுக்கு தொடர்ந்து கிடைத்திடும் விதத்திலும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளார்.
ஆடிப்பெருக்கின் சிறப்பு
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் ஆகும். இந்நாளில், இம்மாதத்தில்  தமிழக நீர்நிலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடிப்பு இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு சோளம் போன்ற தானியங்களை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். மேலும் உழவர் திருநாளை ஒவ்வொரு உழவரும் றிப்பாக நடத்த முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது எனலாம்.
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் மற்றும் உழவர்கள் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, ஊதுபத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். இது கங்கா வழிபாடு எனலாம். அது மட்டும் அல்லாமல் அன்று தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் – சித்ரா அன்னங்களான (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
மேலும் கணவர்கள் ஆரோக்யத்துடன் வாழ திருமாங்கல்யத்தை வைத்து சுமங்கலி பூஜை செய்து, மஞ்சள் சரடு அணிந்து கொள்வர். நாட்டில் சுபிட்சமாக மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும் சிறப்பு பூஜைகளையும் நடத்துவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடிபெருக்கன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அன்று நடைபெரும் விசேஷ பிரார்த்தனையில் மக்கள் ஆரோக்யமாகவும், இயற்கை வளத்துடனும், தீர்க்க சௌபாக்யங்களுடனும், தீர்கக ஆயுளுடனும் வாழசிறப்பு பிரசாதம் வழங்கபட உள்ளது. மேலும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை உலக வாழ்வியல் மையமாக அமைத்து உலக மக்களின் நலனுக்காக பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து வருகிற கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பாரம்பரியங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில் இந்த பிரார்த்தனை நடத்த உள்ளார்.
இந்த இனிய வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.



ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மக்களின் ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவித்தல் 30.07.2015

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மக்களின் ஜனாதிபதிக்கு இரங்கல் தெரிவித்தல்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் இன்று 30.07.2015, வியாழக் கிழமை டாக்டர் அப்துல் கலாம் மறைவிற்கு மோட்ச தீபம் ஏற்றி  பிரார்த்தனை செய்யப்பட்டது.

மக்கள் ஜனாதிபதியாக அனைத்து மக்களின் இதயங்களில் குடி கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி Dr.A.P.J.அப்துல் கலாம் அவர்கள் யாருடைய மனதையும் துன்புறுத்தாமல் வாழ்ந்தவர்.அனைத்து மதத்தினரும் மதிக்கத்தக்கவர்,விருப்பு வெறுப்பின்றி வாழ்ந்தவர். மதம்,இனம்,மொழி,நிறம்,என்று வேறுபாடின்றி பழகியவர். தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தவர். புனித பூமியான இராமேஸ்வரத்திற்கு மேலும் புனிதம் சேர்த்தவர். மக்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.இன்று குரு பூர்ணிமா நாளில்  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மௌன அஞ்சலியும்,மோட்ச தீபமும் ஏற்றி அன்னாருடைய ஆத்மா சாந்தியடையவும் அவரை பிரிந்து வாழும் சொந்தங்கள் மன அமைதி பெறவும் பல்வேறு மக்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.இந்த தகவலை டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார். 






THANKS TO DECCAN CHRONICLE CHENNAI EDITION 30.07.2015


Wednesday, July 29, 2015

Guru Poornima 30.07.2015

Guru Poornima at Sri Danvantri Arogya Peedam on July 30th ,2015. Thursday
Guru Poornima will be celebrated at Sri Danvantri Arogya Peedam, Walajapet, on 30.07.2015, Peedam founder Kayilai Gnanaguru Dr Sri Muralidhara Swamigal has informed.

The world has been graced and blessed by the lives of several gurus who have inspired people and tried to lead them on the path of good and world peace.  The Peedam on Guru Poornima day will pay obeisance to all the gurus who have provided guidance to the people.

Students can gain knowledge if they worshipped before Saraswathi, Karthaveeryajunar, Dakshinamurthy, Dattatreyar and Lakshmi Hayagrivar. The Peedam also has deities of gurus like Buddhar, Ramanar, Guru Nanak, Raghavendrar, Vallalar, Kanchi Mahaperiyavar, Seshadri swamigal, Mahavir, Baba, Veerabramangaru, Sri Ramakrishanar, Akasthiyar and so on, to provide inspiration and blessings to the people.
A special joint prayer and homam would be organised for 468 Siddhars whose idols were at the Peedam.
Meaning Of Guru Purnima
Guru Purnima or Vyasa Purnima is celebrated every year. In 2014, we will again witness the celebration. Since the beginning of the universe, a Guru is considered to be one of the most important part of one’s life. The day of Guru Purnima or Vyasa Purnima is dedicated to all the academic teachers and the spiritual teachers in one’s life.
The word Guru is divided into two parts: “Gu” & “Ru”. Both originating from the Sanskrit language. The Word “Gu” signifies darkness and “Ru” signifies the one who removes the darkness. Thus, the complete word Guru means one who is the remover of the darkness. The second word Purnima means the Full Moon day. As per the Hindu Calendar,Guru Purnima falls in the month of Ashadh (i.e June or July).
This Guru Purnima or Vyasa Purnima will be celebrated in the month of July. Guru is the one who holds a very significant role throughout one’s life. We all, throughout our lifetime, learn about new things and get a new understanding of the things and this is all because of a Guru.
Since ages, Guru has been worshiped next to God. This Guru Purnima in 2015 is the time to remember all those Gurus who helped you attain what you desired for.
Contact Address:-
Sri Danvantri Arogya Peedam,

Ananthalai Madura, Kilpudupet,

Chittore Yagam 31.07.2015 To 01.08.2015



Tuesday, July 14, 2015

வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் ஜூலை 14.07.2015ல் குருப்பெயர்ச்சி யாகம் நடைபெற்ற காட்சி...





வேலூர்மாவட்டம், வாலாஜாபேட்டை,அனந்தலை மதுரா,கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  வரும் ஜூலை 14ம் தேதி குருப்பெயர்ச்சியாகம்நடைபெற்றது. 
ஆண்டுக்கு ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி இந்த ஆண்டு வரும் ஜூலை 14ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்ததை முன்னிட்டு வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சி யாகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது...

Saturday, July 11, 2015

11.07.2015 NEWS TODAY


நன்றி மாலைசுடர் 11.07.2015


வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் ஜூலை 14.07.2015ல் குருப்பெயர்ச்சி யாகம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்  வரும் ஜூலை 14ம் தேதி குருப்பெயர்ச்சி யாகம் நடைபெற உள்ளது.

ஆண்டுக்கு ஒரு முறை குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பிரவேசிப்பார். அதன்படி இந்த ஆண்டு வரும் ஜூலை 14ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனை முன்னிட்டு வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சி யாகமானது வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது.

மேலும் 14.07.2015 இரண்டாவது முறையாக காலை 5.30 மணிமுதல் 7.30 மணி வரை மகா குருப்பெயர்ச்சி யாகமும் நடைபெற உள்ளது. ஒருவரது ஜென்ம ராசியிலிருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் போது நற்பலன்களை அளிப்பார். இதன்படி கடகம், மேஷம், கும்பம், தனுசு, துலாம் ராசிக்கு நற்பலன் கிடைக்கும். ஜென்ம ராசியான 1, 3, 4, 6, 8, 10, 12 ஆகிய ராசிகளில் குருபகவான் சஞ்சாரம் செய்யும்போது நற்பலன் அளிக்காது என்பது பொதுவிதி, இதன்படி சிம்மம், மிதுனம், ரிஷபம், மீனம், மகரம், விருச்சிகம், கன்னி ராசிகளில் பிறந்தவர்கள் மற்றும் இதர ராசிக்காரர்கள் மேலும் பல நற்பலன்களை பெற வேண்டி பரிகாரம் செய்து கொள்ளலாம்.

இந்த குருப்பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 06.07.2015 முதல் 13.07.2015 வரை லட்சார்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குருப்பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்க ரூ.500 ஆகும். லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி முதற்கொண்டு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்களில் நேரடியாக பங்கேற்கலாம் அப்படி நேரடியாக பங்கேற்க இயலாதவர்கள் உரிய கட்டணத் தொகையை  S.MURALIDHARAN என்ற பெயருக்கு டிடி எடுத்து, அத்துடன் உங்கள் பெயர், ராசி, நட்சத்திரம், உங்கள் முகவரி ஆகியவற்றை தெளிவாக எழுதி கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல்9443330203

Email : danvantripeedam@gmail.com
www.danvantritemple.org
www.danvantripeedam.blogspot.in

தன்வந்திரி பீடத்தில் ஜூலை 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா


வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஜூலை 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை இந்துக்களின் புனித மாதமான ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாக வேண்டி ஏகோபித்த பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் காரியசித்தி ஹோமங்களாக மேற்கண்ட தேதிகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கீழ்கண்ட 21 ஹோமங்களை தினசரி நடத்த உள்ளார்.

பக்தர்கள் அனைவரும் குருபெர்ச்சியின் பலன் பெறவும், குலதெய்வங்களின் அருள்பெறவும், குரு மகான்களின் ஆசி பெறவும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான தடைகளும் நீங்க கீழ்கண்ட 21 யாகங்கள் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.

யாகம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் : ஒரு மனிதன் தன் வாழ்வில் நிறைந்த ஆசியோடு வாழ்வதற்கு இறை பக்தி தேவை. இதற்கு உதவுபவையே ஹோமங்கள் எனப்படும் சாந்திகள். இறைவனை பக்தியோடு வணங்கிய பின் நாம் எதைக் கேட்டாலும் (நியாயமான கோரிக்கைகள்) அவற்றை நமக்குத் தந்தருளத் தயங்க மாட்டார். மேலும் தேக ஆரோக்கியம், செல்வ வளம், மன நிம்மதி, பரிபூரண ஆயுள், நிரந்தர வேலை, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், எதிரிகளின் தொல்லை தீர்த்தல், வியாபார அபிவிருத்தி என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தேவைப்படுவதைப் பெறுவதற்கு ஹோமங்கள் பேருதவி புரிகின்றன.

யோகம் தரும் யாகங்கள்…

யாகங்களின் பெயர்கள் - பலன்கள் : 1.மகா கணபதி ஹோமம் – காரியத்தடை நீங்க. 2.ஆயுஷ்ய ஹோமம் – ஆயுள் பலம்பெற. 3.சரஸ்வதி 4.லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் – கல்வி கேள்வி ஞானம்பெற்று அதிக மதிப்பெண்கள் பெற. 5.சூலினிதுர்கா ஹோமம் – ராகு தசை, ராகு புக்தி மற்றும் நாக தோஷங்கள் நீங்க. 6.த்ருஷ்டி துர்கா ஹோமம் – மாங்கல்ய தோஷங்கள் நீங்கவும் த்ருஷ்டிகள் அகலவும். 7.சுயம்வரகலாபார்வதி யாகம் – பெண்களின் திருமணத்தடை நீங்க. 8.கந்தர்வராஜ ஹோமம் – ஆண்களின் திருமணத்தடை நீங்க. 9.ஆகர்ஷ்ண பைரவர் யாகம் – தொழில், உத்தியோகம் பெற. 10.தன்வந்திரி ஹோமம் – நோய்கள் நீங்கி ஆரோக்யம் பெற. 11.அஷ்ட லட்சுமி ஹோமம் 12.குபேர லட்சுமி யாகம் – ஐஸ்வர்யம் பெற்று குடும்பம் ஷேமம் பெறவும். 13.நவக்கிரஹ சாந்தி ஹோமம் – நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்கள் அகல. 14.சனிசாந்தி ஹோமம் – சனிக்கிரஹத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய. 15.கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம் – இழந்ததை மீண்டும் பெற. 16.வாஸ்து சாந்தி ஹோமம் – வாஸ்து தோஷங்கள் நீங்கி வளமான வாழ்வு பெற. 17.நட்சத்திர சாந்தி ஹோமம் – நட்சத்திர தோஷங்கள் நீங்கி நன்மைகள் பல பெற. 18.சந்தான கோபால யாகம் – குழந்தைபாக்யம் பெற. 19.மஹா காலபைரவர் ஹோமம் – அனைத்து கவலைகளும், தடைகளும் நீங்க. 20.ம்ருத்ஞ்யம் ஹோமம் – மரணபயம் நீங்க. 21.ருத்ர ஹோமம் – விவசாயம் வளம்பெறவும், முக்தி பெறவும் மேற்கண்ட 21 வகையான ஹோமங்கள் சிறந்த வேத விற்ப்பன்னர்களைக் கொண்டு ஆகம முறைப்படி முறையாக செய்யப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை பால ஜோதிட வாசகர்கள், ஜோதிடர்கள் மற்றும் பலரும் பயன்படுத்தி பலன்பெற ப்ரார்த்திக்கின்றோம்.

குறிப்பு : நாள் ஒன்றுக்கு தாங்கள் விரும்பிய மூன்று ஹோமங்களில் பங்கேற்க ரூ.5000/-. வீதமும், அனைத்து ஹோமங்களிலும் பங்கேற்க ரூ.27,000/- மட்டுமே செலுத்தி பங்கு பெற விரும்பும் ஹோமத்தின் பெயர், தங்கள் பெயர், கோத்திரம், நட்சத்திரம் மற்றும் முகவரியுடன், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பெயருக்கு MO அல்லது DD (வாலாஜாபேட்டையில் மாற்றத்தக்க வகையில்) அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

S. Muralidaran (A) Sri Muralidhara Swamigal Srinivasan
State Bank of India
Walajapet Branch
A/C No. 10917462439
IFSC : SBIN0000775

மேலும் விபரங்களுக்கு…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.

Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203
www.danvantritemple.org

eMail : danvantripeedam@gmail.com