சிறப்பு ப்ரார்த்தனைகளும், ஆராதனைகளும்
பௌர்ணமி தினம் மற்றும் புத்த பூர்ணிமாவை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் காலை முதல் மாலை வரை சிறப்பு பிரார்த்தனைகளும், ஆராதனைகளும் மற்றும் யாகங்களும் நடைபெற்றன.
- காலை 6.00 மணிளவில் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு ஆராதனை
- காலை 10 மணியளவில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. பூஜையின்போது 108 சுமங்கலிகளுக்கு இலவச புடவை மற்றும் சௌபாக்ய பொருட்கள் வழங்கப்பட்டன.
- காலை 11.00 மணியளவில் புத்த பிரானுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது.
- மாலை 4.00 மணியளவில் மஹாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
- மாலை 5.00 மணியளவில் 468 சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- மாலை 6.00 மணியளவில் மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது
- இரவு 7.00 மணியளவில் சத்தியநாராயண பூஜை நடைபெற்றது.
இந்த வைபவங்கள் அனைத்திலும் பக்தர்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து ப்ரார்த்தனை செய்தனர். மேலும் இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு அன்னதான நிகழ்வுகளிலும் பங்கேற்று ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், பீடத்தில் அமைந்துள்ள 65 பரிவார தெய்வங்களின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாசியையும் பெற்று மகிழ்ந்தனர்.
|
பௌர்ணமி தீபம் ஏற்றியபோது. |
|
468 சித்தர்களுக்கு பூஜை செய்தபோது. |
|
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள். |
|
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள். |
|
ராகு-கேதுவுக்கு அன்ன அபிஷேகம் செய்தபோது. |
|
ஸ்ரீ மகாலட்சுமி ஹோமத்தில் பக்தர்கள். |
|
ராகு-கேது அன்ன அபிஷேகத்தில் பக்தர்கள். |
|
சத்தியநாராயண பூஜையின்போது. |
No comments:
Post a Comment