ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை…
வாலாஜாபேட்டை, மே 13, 2013.
இராமானுஜர்,
1017ம் ஆண்டு பிறந்து 1137 வரை
120 ஆண்டுகள் வாழ்ந்த மிகப்பெரிய மகான். ஜாதி, பேதமற்ற
சமுதாயத்தை படைக்க அவர் வழிகாட்டினார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த திருக்கச்சி நம்பியை
தனது குருவாக ஏற்றுக்கொண்டவர். உறங்காவில்லிதாசர்
என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவரை தனது
சீடராக ஏற்றுக் கொண்டவர். இவரது
தந்தை ஆருலகேசவ சோமயாகி. தாய் காந்திமதி அம்மையார்.
இவர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இப்படி மனித இனம்
என்றென்றும் உயர்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்றில்லாமல் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்
என்று அரும்பாடுபட்டார். எனவேதான் அவருடைய ஜெயந்தி நாளான 14.05.2013 செவ்வாய்க்கிழமை
அன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி பகவானிடமும் இதர 65 பரிவார தெய்வங்களிடமும்
உலக நலன் கருதி சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனையும், வழிபாடுகளும் நடைபெற உள்ளது. இதில்
பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு பகவானின் அருளை பெறவேணுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment