Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, May 4, 2013

ஹோமங்கள் தொடர் கட்டுரை பாகம் 4



நலம் தரும் ஹோமங்கள்!     பாகம் - 4

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்


இன்றைய தேதியில் பல குடும்பங்களிலும் இருக்கிற ஒரு பெரும் குறை & தங்கள் வீட்டில் தடைபட்டுக் கொண்டே போகும் திருமணம் எப்போது நிறைவேறுமோ என்கிற ஏக்கம்தான். அந்த அளவுக்கு ஏற்ற ஜோடி கிடைக்காமல் இளம் பெண்களும், இளம் ஆண்களும் தடுமாறுகிறார்கள்.

ஒரு காலத்தில் திருமணத்துக்குப் பெண்ணோ, பையனோ பார்க்க ஆரம்பித்தால், அதிகபட்சம் ஆறு மாதத்துக்குள் பொருத்தம் பார்த்து திருமணத்தையே முடித்து விடுவார்கள். ஆனால் இன்றைய தினத்தில் அப்படி இல்லை. ஒன்று இருந்தால், இன்னொன்று அமைவதில்லை. பொருத்தம் இருந்தால், இதர விஷயங்கள் படிவதில்லை. இதர விஷயங்கள் படிந்தால் பொருத்தம் அமைவதில்லை. இப்படி ஒரு திருமணம் அமைவதற்குள் சம்பந்தப்பட்ட பெற்றோர் படும் அவஸ்தைகள் சொல்லி மாள்வதில்லை.


இதற்கெல்லாம் முக்கியமான காரணம் & திருமணத்துக்குக் காத்து நிற்கும் ஆண் & பெண் இருவருமே பல வித தோஷங்களால் பாதிக்கப் பட்டிருப்பதுதான். திருமணம் தடைபடுவதற்கு செவ்வாய் தோஷம், ராகு தோஷம், மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் என்று ஏதோ ஒரு தோஷமே காரணம் என்பதாக ஜோதிடர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அந்த தோஷங்களை விரட்டுவதற்கு ஒரு சில பரிகாரங்களையும் செய்யச் சொல்கிறார்கள். 

ஆனால், பரிகாரங்கள் செய்தும் சிலருக்கு திருமணம் கைகூடாமல் இருக்கும் சோகத்தை என்னவென்று சொல்வது?!

வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஒவ்வொரு மாதமும் சுயம்வரகலா பார்வதி யாகம் (பெண்களின் திருமணத் தடை விலக), கந்தர்வராஜ ஹோமம் (ஆண்கள் திருமணத் தடை விலக) போன்றவை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து திருமணம் ஆக வேண்டிய ஆண்களும் பெண்களும் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொள்கின்றனர்.

நீண்ட நாட்களாகத் திருமணத் தடை இருந்து, அதன் பின் இந்த பீடத்துக்கு வந்து சுயம்வரகலா பார்வதி யாகம் செய்து சென்ற தூத்துக்குடி இளம் பெண் ஒருவருக்கு, அடுத்த ஒரு சில நாட்களிலேயே நல்ல மாப்பிள்ளை அமைந்தது. அரசு உத்தியோகத்தில் இருக்கின்ற அந்த மாப்பிள்ளையைப் பார்த்து குடும்பத்தில் உள்ள அனைத்தையும் பேசி முடித்தனர். சரியாக ஒரே மாதத்துக்குள் தூத்துக்குடி இளம் பெண்ணின் திருமணம் சுபமாக நடந்தது.

இது ஒரு உதாரணம்தான். இதுபோல் இங்கு வரும் அனைவருக்குமே நல்ல விதத்தில் திருமணம் நடந்தேறி வருகிறது. 

ஒரு சில மாதங்களுக்கு முன் சோளிங்கரில் இருந்து ஒரு இளம் பெண் இங்கு வந்தார். தனக்குத் திருமணம் விரைவில் நடைபெற வேண்டி, சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்து கொண்டு போனார். 

இதற்கு அடுத்த வாரம் பெங்களூருவில் இருந்து ஒரு வாலிபர் வந்து தனக்கு விரைவில் திருமணம் ஆக வேண்டி, கந்தர்வராஜ ஹோமம் செய்து, ஸ்ரீதன்வந்திரி பகவானைப் பிரார்த்தித்துக் கொண்டு போனார்.

‘மாப்பிள்ளை எங்கே... பெண் எங்கே?’ என்றெல்லாம் நாம் கண்களில் விளக்கெண்ணெய் விட்டுத் தேடிக் கொண்டிருக்கும்போது இறைவனின் தீர்மானம் எப்படி இருக்கிறது என்பதுதான் படு ஆச்சரியம்!

அடுத்த ஒரு சில தினங்களில் சோளிங்கர் பெண்ணையும், பெங்களூரு வாலிபரையும் ஸ்ரீதன்வந்திரி பகவான் சேர்த்து வைத்து விட்டார். ‘முன்பின் அறிமுகமே இல்லாத இந்த இருவரும் எப்படி இணைந்தார்கள்?’ என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

ஆம்! இந்த இருவரும் யதேச்சையாக ஒரு பொது இடத்தில் சந்தித்துக் கொண்டனர். தற்செயலாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

பொதுவாக இது போன்ற ஹோமங்களில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கும் சரி... பெண்களுக்கும் சரி... ஸ்ரீதன்வந்திரியிடம் வைத்து பூஜித்த ரக்ஷை (கயிறு) கட்டி விடுவோம். அந்த பெங்களூரு இளைஞரின் கையில் கட்டப்பட்டிருந்த ரக்ஷையை யதேச்சையாகப் பார்த்த சோளிங்கர் பெண்ணும், சோளிங்கர் பெண்ணின் கையில் கட்டப்பட்டிருந்த ரக்ஷையை யதேச்சையாகப் பார்த்த பெங்களூரு இளைஞரும் பிரமித்துப் போனார்கள்.

பிறகு, இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் புன்னகைத்தனர். ‘வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் போய் ஹோமம் செஞ்சீங்களா?’ என்று ஒருவரை ஒருவர் கேட்டு உறுதி செய்து கொண்டனர். பெங்களூரு இளைஞர் தனக்கு மணப்பெண் வேண்டி வந்ததாகவும், சோளிங்கர் இளம் பெண் தனக்கு நல்ல மணமகன் அமைய வேண்டி ஹோமத்தில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.

ஒரு குறிப்பிட்ட ஆணும் குறிப்பிட்ட பெண்ணும் திருமணம் என்கிற நல்லறத்தில் இணைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தால் எப்படியாவது அவர்கள் சேர்ந்து விடுவார்கள்... இறைவனே அதற்கு உண்டான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து விடுவான் என்பதற்கு இந்த சோளிங்கர் பெண்ணும், பெங்களூரு பையனும் கண்களுக்குத் தெரிந்த உதாரணம்.

இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் பிடித்து விட்டது. தங்களது உத்தியோகம், ஒவ்வொருவரது குண நலன் போன்ற பல விஷயங்களையும் அங்கே பேசினார்கள். 

அதன் பின் இந்த இருவரும் தங்களது குடும்பத்தினரிடம் மனதில் உள்ளதை அப்படியே சொன்னார்கள். ‘வாலாஜா போய் பிரார்த்தித்து வந்த பின் தேடி வந்த சம்பந்தம் ஆயிற்றே’ என்று இரு குடும்பத்தினரும் மகிழ்ந்து, ஒரு சுபயோ சுப தினத்தில் சந்தித்துப் பேசினர். எல்லாம் சுபம். 

திருமணம் நிச்சயம் ஆனது. பிறகென்ன, கெட்டிமேளம்தான்! 

(இன்னும் வரும்)


No comments:

Post a Comment