Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, March 14, 2018

நெல்லிபொடி அபிஷேகம் – தைலாபிஷேகம்….


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
மூலவர் தன்வந்திரி - விநாயக தன்வந்திரிக்கு
நெல்லிபொடி அபிஷேகத்துடன் தைலாபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஏகாதசி திதி மற்றும் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு 13.03.2018 செவ்வாய்கிழமை, 14.03.2018 புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை விநாயக தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் நெல்லிபொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெற்றது.

உலக மக்களின் நலன் கருதி நடைபெற்ற இந்த வைபவங்களில் உடல் நோய் மன நோய் நீங்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகுவதிற்கும் பிரார்த்தனை செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்களை, ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிர்வதித்து ஔஷத பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Saturday, March 10, 2018

சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.......


‘நோயற்று வாழட்டும் உலகு’
ஸ்ரீ குருப்யோ நம: | ஸ்ரீ தன்வந்த்ரயே நம:
ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திரம்
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மகா விஷ்ணவே நம:
ஸ்ரீ ஆரோக்யலஷ்மி ஸமேத ஸ்ரீ தன்வந்திரி மஹாவிஷ்ணு பரப்ரமஹனே நம:
  

அழைப்பிதழ்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்

சகல தேவதா ஹோமத்துடன் ஸஹஸ்ர கலசாபிஷேகம்.

14-ஆம் ஆண்டு ஸம்வத்ஸர விழா.

மார்ச் 23 முதல் 26 வரை நடைபெறுகிறது.


எம்பெருமாள், ஸ்ரீய:பதியாய் அவாப்தஸமஸ்தகாமனாய், அனந்த கல்யாண குணநிதியாய் பல திவ்ய தேசங்களிலும் மற்றும் பல க்ஷேத்திரங்களிலும் விஷ்ணுவின் பல திருநாமங்களில் எழுந்தருளி உள்ள நிலைகளில் ஸத்ய வ்ரத க்ஷேத்ர ஸமீபத்தில் கோயில் கொண்டு மஹாவிஷ்ணு அம்சமாக எழுந்தருளி பக்தர்களின் அபிமான க்ஷேத்திரமாகவும், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், ஆகிய ஷண்மதங்களை கொண்டு ஆதிசங்கரர் வழியில் ஷண்மத பீடமாக திகழும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரகத்துடன், ஸ்ரீவத்ஸ வம்சத்தில், ஸ்ரீ.உ.வே கம்பராஜபுரம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமிகள் - ஸ்ரீமதி.கோமளவல்லி தம்பதிகளுக்கு குமாரராக அவதரித்த கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 9-ஆம் நாள் 23.03.2018 வெள்ளிக் கிழமை ஷஷ்டி திதி, ரோஹிணி நக்ஷத்திரத்தில் கோபூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா பூஜைகளும் ஹோமங்களும் துவங்கபெற்று பங்குனி மாதம்  12-ஆம் தேதி, 26.03.2018 திங்கட் கிழமை தசமி திதி, புனர்பூசம் நக்ஷத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள்ளாக ரிஷப லக்னத்தில் சகல தேவதா ஹோமத்துடன் பாஞ்சராத்ர ஆகமப்படியும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருவுளப்படியும் அருள்மிகு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு (1008) ஸஹஸ்ர கலசாபிஷேகமும் இதர பரிவார மூர்த்திகளுக்கு நவகலச திருமஞ்ஜன விழா வைபவமாக நடைபெற பகவத் க்ருபை கூட்டியுள்ளது.

அது சமயம் கிராம பொது மக்களும், ஆன்மிக அன்பர்களும், பக்த மஹா ஜனங்களும், பரம பாகவதர்களும் கலந்து கொண்டு மேற்கண்ட தெய்வங்களின் அருள் பெற்று நோயற்ற வாழ்வுடன், குறைவற்ற செல்வத்துடன் கல்வி மேன்மை, வியாபார லாபம், உத்யோக உயர்வு, தொழில் வளர்ச்சி, மழை வளம், விவசாய வளர்ச்சி மற்றும் பதினாறு வகையான ஐஸ்வர்யங்களுடன் சுகானந்த பெருவாழ்வு பெற்று இகபர இன்பம் அடைய எம்பெருமான் ஆலயம் நோக்கி வர வேண்டுமாய் அகங்குளிர அனைவரையும் வருக… வருக… என்று அன்புடன் அழைக்கின்றோம்.

இப்படிக்கு,
தன்வந்திரி குடும்பத்தினர்.


தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள் பாவித்து வரும் கீழ்கண்ட தெய்வங்களுக்கு சகலதேவதா ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

வைணவம் : வைணவம் சார்ந்த ஸ்ரீ அஷ்டநாக கருடன், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர், ஸ்ரீ சுதர்சனாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசர், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், ஸ்ரீ கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாச ஐயங்கார் (ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவும்).

சௌரம் : சௌரம் சார்ந்த ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்.

சைவம் : சைவம் சார்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரர், ஸ்ரீ தத்தாத்ரேயர் ஸ்ரீ பால்முனீஸ்வரர், ஸ்ரீ சொர்ணாகர்ஷ்ண பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர். காலபைரவர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ ராகு-கேது மற்றும் 468 சித்தர்கள் (சிவலிங்க சொரூபம்), ஸ்ரீ புத்த பிரான், ஸ்ரீ குருநானக், ஸ்ரீ ரமணர், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சூரிய பாபா, ஸ்ரீ சீரடி தங்க பாபா, ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீ அத்ரிமகரிஷி பாதம், ஸ்ரீ மகாவீரர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ மஹா அவதார் பாபா, ஸ்ரீ அகஸ்த்தியர், ஸ்ரீ வீரபிரம்மங்காரு, ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ சூரிய சந்திரன்.

ஸ்ரீ சாக்தம் : சாக்தம் சார்ந்த ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிராதேவி, ஸ்ரீ லட்சுமிகுபேரர், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ பாரதமாதா,  ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ மாமேரு, ஸ்ரீ வாணிசரஸ்வதி, ஸ்ரீ காயத்ரிதேவி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ அனுசுயாதேவி, நவகன்னிகைகள், வனதுர்கா.

காணாபத்யம் : காணாபத்யம் சார்ந்த ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ விநாயக தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்.

கௌமாரம் : கௌமாரம் சார்ந்த ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ பாலமுருகன். போன்ற ஷண்மத தெய்வங்களுக்கும் விருட்ச பிரதிஷ்டை செய்துள்ள காலசக்கரத்தில் 27 நக்ஷத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ அஷ்டதிக்பாலகர்கள், ஸ்ரீ வாஸ்து பகவான் போன்றவர்களுக்கும் மேற்கண்ட தேதிகளில் சகல தேவதா ஹோமங்கள் நடைபெற்று 26.03.2018 திங்கட் கிழமை காலை நவகலச திருமஞ்சனத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203

பிரச்சனைகள் தீர்க்கும் பிரதோஷ ஹோமம்


தன்வந்திரி பீடத்தில்

பிரச்சனைகள் தீர்க்கும் பிரதோஷ ஹோமம்

வருகிற 14.03.2018 மற்றும் 29.03.2018 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.


பிரச்சனையான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் 

சிறப்பு. ஒருவரது ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் இருக்கும் 

என்பது நிதர்சனம். அத்தகைய தோஷங்கள் நீங்க பிரதோஷ தினத்தில் 

தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ 

மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரை வழிபடுவதன் மூலம் 

தோஷங்கள் நீங்கி நற்பயன் பெறலாம்.


பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள்

பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன

இத்தகைய சிறப்புவாய்ந்த நாளில், பிரதோஷ தினத்தில் பிரதோஷ 

நேரத்தில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான வரம் அருளும் 

ஈஸ்வரனை உடல் நலம் மன நலம் வேண்டி இயற்கை வளத்திற்காக 

நாமும் பிரார்த்தனை செய்வோம் பிரதோஷ காலத்தில் ஈசனை 

வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும்.

தன்வந்திரி பீடத்தில் அறிவு வளரவும், நினைவாற்றல் பெருகவும்

தோஷங்கள் நீங்கி நன்மை பெறவும், ஆரோக்யம் வேண்டியும் பூர்வ 

ஜென்ம வினைகள் அகலவும், பிராமண சாபம் நீங்கவும், பெண் சாபம் 

மறையவும் மேலும் சிறப்பான பலன்கள் பெற வருகிற 14.03.2018 மற்றும் 

29.03.2018 ஆகிய நாட்களில் பிரதோஷ ஹோமமும்,  பிரதோஷ 

பூஜையும், சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு நடைபெற 

உள்ளது. இதில் பசும்பால் கொண்டு மரகதேஸ்வரருக்கு அபிஷேகமும், 

வில்வ இலை, சங்குப்பூ கொண்டு சிறப்பு சிவநாம அர்ச்சனையும் 

நடைபெற உள்ளது.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Friday, March 9, 2018

யுகாதி 2018...


தன்வந்திரி பீடத்தில் தெலுங்கு வருடப்பிறப்பு
(யுகாதி) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தன்வந்திரி ஹோமம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் யுகாதி எனும் தெலுங்கு வருடப்பிறப்பு முன்னிட்டு 18.03.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பு தன்வந்திரி ஹோமமும் மூலவருக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற உள்ளது. ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழு‌ம் மக்க‌ள் த‌ங்களது புத்தாண்டு ‌பிற‌ப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகி‌ன்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள்.

தமிழர்கள் தமி‌ழ் புத்தாண்டை கொண்டாடுவது போலவே ஆந்திரம், கர்நாடகம் வாழ் மக்கள் தங்களது புத்தாண்டை யுகாதியாக கொண்டாடுகின்றனர். அன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு எண்ணை தேய்த்துக்குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள்.

இதில் ஒரு ‌சிறப்பம்சம் என்னவென்றால் வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் ‌விதமாக யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள். மாலையில் வாசலில் விளக்கேற்றிய பின்னர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் யுகாதி நாளில் அனைத்து மக்களும் ஆரோக்யமாக வாழ சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் விசேஷ திரவியங்களுடன் பல வகையான புஷ்பங்கள், பழங்கள் சேர்க்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203

Wednesday, March 7, 2018

சூலினி துர்கா ஹோமம்......


தன்வந்திரி பீடத்தில் அமாவாசையில்
சூலினி துர்கா ஹோமம்

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2018 சனிக்கிழமை  அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சூலினி துர்கா ஹோமம்  நடைபெற உள்ளது.

ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதேஅமாவாசைஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள்திருஷ்டிஎனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அமாவாசையில், தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம், சரப ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம் போன்ற ஹோமங்களில் கலந்துகொண்டு ஏற்படும் திருஷ்டிகளை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தேவியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று  ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார். 
மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203


Tuesday, March 6, 2018

தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தி ஹோமத்துடன் வாஸ்து ஹோமம் சுவாதி ஹோமம் நடைபெற்றது.


தன்வந்திரி பீடத்தில்
சங்கடஹர சதுர்த்தி ஹோமத்துடன் வாஸ்து ஹோமம்
சுவாதி ஹோமம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர 

ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி நேன்று 05.03.2018 திங்கட் 

கிழமை மாலை சங்கடஹர சதுர்த்தி ஹோமத்துடன் தொடங்கி இன்று 

06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை

மாசி சுவாதி நக்ஷத்திரம், வாஸ்து நாள் மற்றும் பஞ்சமி திதியை 

முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமமும், 

ஸ்ரீ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் நடைபெற்று இங்கு பிரதிஷ்டை 

செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும் 

சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. நாளை சஷ்டியை முன்னிட்டு 

காலை 10.00 மணிக்கு மஹா சுதர்சன ஹோமமும் சத்ரு சம்ஹார 

ஹோமமும் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி 

குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Sunday, March 4, 2018

பத்து பைரவர் யாகம்...


தன்வந்திரி பீடத்தில்
பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும்
பத்து பைரவர் யாகம்

தந்தையுடன் பிரச்சினையா ? தசாபுக்தி பிரச்சனையா ? அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினையா ? நிலம், வீடு சொத்து பிரச்சினையா ?  தாய் தந்தை உடல்நிலைப் பாதிப்பா ? மன அமைதி இல்லையா ? கல்வியில் பாதிப்பு உள்ளவர்களா ? , புத்திர வகையில் பாதிப்பா ? வாகனங் களில் பிரச்சினையா ? எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்களா ? பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்களா ? ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிப்பு உள்ளவர்களா ? அஷ்டலட்சுமி கடாட்சம் இல்லையா ?...... உங்களுக்காக தன்வந்திரி பீடத்தில்  பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம்......வருகிற 9ஆம் தேதி மாலை நடைபெறுகிறது...

இறைவன் நம்மைக் காத்து இரட்சிப்பவன் என்று எண்ணி நாம் அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று பிரதான கடவுளை வேண்டி வணங்குகிறோம். ஆனால் அந்த ஆலயத்தில் எல்லோரும் பரிவார தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இல்லை என்றால் மிகையாகாது. சிலர் ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், கால பைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பல வகையான மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.

தன்வந்திரி பீடத்தில் பல்வேறு தோஷங்கள் நீங்கி
 தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவருக்கும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்டஅஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம்  பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், நவ பைரவர் ஹோமம், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் செய்து வருகிறார்.

வருகிற 09.03.2018 வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை, பல்வேறு தடைகள் நீங்க பத்து பைரவர் யாகம் நடைபெறுகிறது. இந்த யாகம் பத்து பைரவர்களுக்கு பத்து குண்டங்கள் அமைத்து பத்து சிவாசாரியர்களால் நடைபெற உள்ளது. பத்து பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், ஸ்ரீ பத்து பைரவருக்கு செய்யும் யாகங்கள் மற்றும் பூஜைகள் ஸ்ரீ நவகோள்களுக்கு சென்றடையும்.

பல்வேறு தோஷங்கள் நீங்கி தடைகள் தீர்க்கும் பத்து பைரவர் யாகம் நடைபெறுகிறது.

பத்து பைரவர் யாகத்தின் பலன்கள்:

 1. ஸ்ரீ கபாலபைரவர் (ஞாயிறு): சூரிய தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சூரியன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷமுள்ளவர்கள், தந்தையுடன் பிரச்சினை உள்ளவர்கள், அரசு சம்மந்தப்பட்ட பணியில் பிரச்சினை உள்ளவர்கள் இந்த கபால பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

2. ஸ்ரீ உருபைரவர் (திங்கள்): சந்திர தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சந்திரன் நீச்சம், வக்ரம், அஸ்தமனதோஷமுள்ளவர்கள், தாயின் உடல்நிலைப் பாதிப்பு, மன அமைதியின்மை போன்றவையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்ரீ உரு பைரவரை வணங்க பிரச்சினைகள் தீரும்.

3. ஸ்ரீ சண்ட பைரவர் (செவ்வாய்): செவ்வாய் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், செவ்வாய் நீச்சம், அஸ்தமன தோஷமுள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், சகோதரர்களிடம் பிரச்சினை உள்ளவர்கள், நிலம், வீடு சொத்து பிரச்சினை உள்ளவர்கள் இந்த சண்ட பைரவரை வழிப்பட்டால் பிரச்சினைகள் தீரும்.

4. ஸ்ரீ அசிதாங்க பைரவர் (புதன்): புதன் தசை, புதன் புத்தி நடப்பில் உள்ளவர்கள், புதன் நீச்சம், வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள் தாய் மாமன் வகையில் பிரச்சினை உள்ளவர்கள், கல்வியில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த அசிதாங்க பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

5. ஸ்ரீ உன் மத்த பைரவர் (வியாழன்): குரு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு நீச்சம், வக்ரம் ஆஸ்தமன தோஷமுள்ளவர்கள், புத்திர வகையில் பாதிப்பு உள்ளவர்கள் இந்த உன் மத்த பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

6. ஸ்ரீ குரோதன பைரவர் (சுக்கிரன்) : சுக்கிரன் தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சுக்கிரன், நீச்சம், வக்ரம், அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், திருமண தடை உள்ளவர்கள், வண்டி வாகனங் களில் பிரச்சினை உள்ளவர்கள், கணவன், மனைவியிடையே கோளாறு உள்ளவர்கள் இந்த ஸ்ரீ குரோதன பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

7. ஸ்ரீ சம்ஹார பைரவர் (சனி): சனி தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், சனி, நீச்சம் வக்ரம் அஸ்தமன தோஷம் உள்ளவர்கள், மாங்கல்ய தோஷம், அடிக்கடி ஆயுளுக்கு உரிய கண்டங்களை அனுபவிப்பவர்கள், கை, கால், பாதிப்பு உள்ளவர்கள், உடலில் அங்கஹீனம் உள்ளவர்கள், வண்டி வாகனங்களில் விபத்தை சந்திப்பவர்கள், எதிரிகளால் தொல்லை அனுபவிப்பவர்கள் இந்த சம்ஹார பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

8. ஸ்ரீ பீஷண பைரவர் (ராகு): ராகு தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், ராகு நீச்சம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றில் பாதிப்பு உள்ளவர்கள், விஷத்தால் பாதித்தவர்கள் இந்த பீஷண பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும்.

9. ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் (கேது): கேது தசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள், 12-ல் கேது அமையப் பெற்றவர்கள், நாக தோஷம், காலசர்ப்ப தோஷம், கேது நீச்சம் ஆனவர்கள், எதிரிகளால் தொல்லையை அனுபவிப்பவர்கள், பூர்வீக சொத்தில் பிரச்சினை உள்ளவர்கள், ஏவல், பில்லி, சூனியம் இவற்றால் பாதிப்பு அனுபவிப்பவர்கள், இந்த ஸ்ரீ சொர்ணாகர்ஷனை பைரவரை வழிபட பிரச்சினைகள் தீரும். ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு ஸ்ரீ கேது பகவானின் ஆதிக்கத்தில் மறைபொருளாக உள்ளன.

10. மஹாகால பைரவர் : மகத்தான பலன் தரும் மஹா பைரவர்

மேற்கண்ட பத்து பைரவ மூர்த்திகளை வழிபடுவதால் சூரியன் முதலான நவக்கோள்களின் கிரக தோஷங்கள், தடைகள் நீங்கும், பைரவர்களுக்கு செய்யும் யாகங்கள், நவக்கிரகங்களுக்கும், அஷ்ட லக்ஷ்மிகளுக்கும் சென்றடையும்.

தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும் . ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு, ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் ஒவ்வொரு பக்தரும் தன்வந்திரி பீடத்தில் உள்ள பத்து பைரவர்களை தரிசித்து, பத்து பைரவர் ஹோமங்களில் கலந்துகொண்டு மேற்கண்ட பிரசாதங்கள் பெற்று ஆனந்தமான. வாழ வாருங்கள் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்திற்கு. அவன் அருளால் அவன்தாள்  வணங்குவோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை-632513
தொலைபேசி : 04172-230033 / 09443330203