Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 15, 2013

கோடைக்கால இலவச யோகா பயிற்சி நிறைவு விழா…


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
கோடைக்கால இலவச யோகா பயிற்சி நிறைவு விழா…
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக நலன் கருதியும், வருங்கால மாணவ, மாணவியர்களின் நலன் கருதியும், இளையோர் முதல் முதியோர் வரை நற்பலன்களை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்திலும், இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்றும் வகையில் இலவச யோகா பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த இலவச யோகா பயிற்சி 5.5.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி 15.5.2013 புதன்கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. காண்டீபன் அவர்களும், உலக சமாதான அறக்கட்டளையின் நிகழ்ச்சி தொகுப்பாளரான மெய்ஞானச் செல்வர் திரு.எஸ்.வி. கிரி அவர்களும், யோகா பயிற்சியாளர் மெய்ஞான ஆசிரியர் திரு.எஸ்.வெங்கட்ராமன் அவர்களும், சிறப்பு விருந்தினரான திரு.தேவராஜ் சுவாமிகள் அவர்களும் மற்றும் பீடத்தின் யோகா ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களும் மேலும ‘நோயற்று வாழட்டும் உலகு’ என்று உயர்ந்த உள்ளம் கொண்ட, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மற்றும் அனைவரும் கலந்து கொண்டனர்.

யோகா மாஸ்டர் அவர்களுக்கு ஸ்வாமிகள்
ஸ்ரீ தன்வந்திரி படம் வழங்கிய போது.

திரு. மெய்ஞானச் செல்வர் எஸ்.வி. கிரி அவர்களுக்கு
ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி படம் வழங்கிய போது.
வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை காவல்துறை ஆய்வாளர் 
திரு. காண்டீபன் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ் 
வழங்கியபோது எடுத்த படங்கள்




























யோகா  குருஜியும் மாணவ, மாணவியர்களும்.


இதில் பயிற்சி கொடுத்த யோகா மாஸ்டர் கூறினார், “இந்த சிறுபிள்ளைகள் நான் கற்றுக்கொடுத்ததை நன்றாக நினைவில் வைத்து மிகத் திறமையாகச் செய்ததைப் பார்க்கும் போது எனது மனது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எவரும் சிறிதும் சோர்வில்லாமல் காணப்பட்டதைப் பார்க்கும்போது பீடத்திற்கு வரும் அனைவருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருள் நிறைந்திருப்பதை இவர்கள் மூலமாக உணரமுடிகிறது” என்று கூறினார்.

பின்னர் காவல் துறை ஆய்வாளர் திரு. காண்டீபன் அவர்கள் பேசியபோது, “குழந்தைப் பருவத்திலேயே யோகா பயிற்சி கிடைப்பதற்கு உங்கள் எல்லோருக்கும் பகவான் கொடுத்த வரம் என்றே சொல்லலாம். ஏனென்றால் எங்களுக்கெல்லாம் உங்களைப் போன்ற பருவத்தில் இப்படியொரு வாய்ப்பே கிடைக்க வில்லை. சமீபத்தில்தான் நாங்கள் யோகா பயின்றோம். ஆகவே நீங்கள் இங்கு பயின்றதை மறந்துவிடாமல் உங்களது இல்லங்களிலும் சென்று குரு கற்றுக்கொடுத்தைதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்து உங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

மேலும் பயிற்சிளார்களின் அனுபவங்களைப் பற்றி அவர்களிடமே ஸ்வாமிகள் கேட்டபோது, +2 படிக்கும் ஒரு மாணவன் கூறினான், “இந்தப்பயிற்சியினால் எனது மனநிலை ஒருநிலைப்படுகிறது, உடலும், உள்ளமும் ஆரோக்யமாக இருக்கிறது, இன்னும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்று சொன்னான். அடுத்ததாக ஒரு சிறுவன் தனக்கே உரிய பாணியில் கூறினான் “இப்பொழுதுதான் என் மனசு நிலையாக உள்ளது” என்றான், இதனைத் தொடர்ந்து 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் நன்றி உணர்ச்சி மிகுதியில் அழுதேவிட்டார். “இப்படி 10 நாட்களுக்கு இருக்க இடம், உண்ண உணவு ளா வேளைக்கு டீ, பிஸ்கட் என்று சிறப்பாக கவனித்துப் இலவசப் பயிற்சியும் கொடுத்துள்ளார்கள் ஸ்வாமிகள், அவருக்கு எனது கோடான கோடி நன்றிகளை சொல்லிக்கிறேன்” என்றார்.

இப்போது இன்னும் சற்று மேலே சொல்லப்போனால் 72 வயதுடைய திரு.எஸ் பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம், நாகலூரைச் சேர்ந்தவர், இவர் கூறினார், நான் எனது இரண்டு பசங்களோட வந்திருக்கிறேன், 10 நாட்கள் அங்கேயே தங்கினால் நம்ம வேலை என்னாவரது, அந்த பத்து நாட்களுக்கு நம்மள எப்படி கவனிச்சிப்பாங்களோ என்றெல்லாம் யோசிச்சேன். பிறகு பசங்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு இங்கு வந்துவிட்டேன், இங்கே வந்த பிறகுதான் தெரிந்தது ஸ்வாமிகளின் உபசரிப்பைப்பற்றி… அந்த அளவிற்கு வீட்டில் கவனிப்பது போல் கவனித்துக் கொண்டார்கள்.

“மேலும் இந்தப் பயிற்சியில நானும் என் வயதைப் பாராது கலந்து கொண்டேன் இதனால் எனது முட்டிகளில் இருந்து வலி காணாமல் போனது, மார்சளி குறைந்துள்ளது, சுவாசம் ஈசியாக உள்ளது இப்படி பல வழிகளில் எனது உடல் ஆரோக்யம் அடைந்துள்ளது” என்றார். இப்படி இன்னும் பலர் தாங்கள் பெற்ற பலன்களைக் கூறினார்கள்.
பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தேர்வு நடத்தப்பெற்று, காவல்துறை ஆய்வாளர் திரு. காண்டீபன் அவர்களால் யோகா பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளுரையின் போது அவர் கூறியதாவது இந்த சான்றிதழைப் பெறுவது பெரும் பாக்கியமே, ஏனென்றால் இங்குதான் அம்மாவும், பிள்ளையும், அப்பாவும், பிள்ளையும் சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். இந்த வாய்ப்பானது நிச்சயமாக வேறு எங்கும் கிடைத்திருக்காது. எனவே குரு கற்றுக்கொடுத்த எல்லா பயிற்சிகளையும் மேன்மேலும் பயிற்சி செய்து வாழ்வில் வசந்தத்தைத் தேடிக்கொள்ளுங்கள் என்று மாணவ, மாணவியர்கள் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

மேலும் பீடத்தின் யோகா ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர்.வெங்கட்ராமன் அனைவருக்கும் நன்றியுரை கூறினார். அப்போது சொன்னார் “நீங்கள் இங்கு யோகா மட்டுமல்லாமல் யாகங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள் இது உங்கள் வாழ்வை மேலும் செம்மைப்படுத்தும்” என்றார்.

பின்னர் பயிற்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஸ்வாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்று மதியவேளை உணவருந்தி மிகுந்த மனநிறைவுடன், அடுத்த பயிற்சிக்கு எப்போது கூப்பிடுவீர்கள் என்ற ஏக்கப் பார்வையோடு பிரியாவிடை பெற்று மன நலத்தோடும், உடல் நலத்தோடும் சென்றனர்.

2 comments:

  1. அருமை. .. எலோருக்கும் இனியவை செய்யும் சுவாமிஜிக்கு நமஸ்காரங்கள். தங்கள் தொண்டு வளர / உங்களுக்கு நீண்ட ஆயுள் தர இறைவனை பிரார்த்தனை செய்கிரேன் .

    ReplyDelete
  2. ‘நோயற்று வாழட்டும் உலகு’ தங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி, ஆசீர்வாதங்கள்

    ReplyDelete