தன்வந்திரி
பீடத்தில்
திருவோண ஹோமமும்
தைலாபிஷேகமும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அன்ந்தலைமதுரா கீழ்புதுபேட்டையில் ஸ்ரீ
தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால் பீடத்தின் முன்
நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும்,
பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இவர்கள் இருவரும் ஏக தரிசனத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த
கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன்
தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு
ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப்
பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து
அருள்பாலிக்கின்றனர். இன்று
மாதாந்திர திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு
திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தனர்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம்,
பூஜைகள், ஹோமங்கள் மிகவும் சிறந்த பலன் தரக்கூடியதாகும். இத்தகைய நாளில் நோய்
தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும்
திகழும் விநாயக தன்வந்திரிக்கு திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு, திருவோண நக்ஷத்திரத்தை
முன்னிட்டு திருவோண ஹோமமும், நல்லெண்ணையை கொண்டு தைல திருமஞ்சனமும் நடைபெற்றது. இதில் வலிப்பு நோய், வாத நோய், உடல் நோய்,
மன நோய் நீங்க பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம்
செய்த தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் உடலில் ஏற்படும்
வலிப்பு நோய், சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய்,
புற்று நோய், குறை பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும் நீங்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள். மேலும்
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு உச்சிஷ்ட கணபதி யாகம், அஷ்ட திரவிய அபிஷேகமும் நடைபெற்றது.
இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment