Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 25, 2018

Koti Japa Kubera Lakshmi Yagam - Navagraha Homam - Swarna Bhairavar Yagam ....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

 தாமரை விதைகள்,

தாமரை புஷ்பங்கள் கொண்டு

ஒரு கோடி குபேர ஜப யக்ஞத்துடன்

நவக்கிரக ஹோமம், 

சொர்ண பைரவர் யாகமும் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி நேற்று 14.11.2018 புதன்கிழமை முதல் இன்று 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெற்றது.

இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகத்தில் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டும் நவதான்யங்கள், நவமூலிகைகள் கொண்டு நவக்கிரக ஹோமமும், நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
















Saturday, November 24, 2018

Bhairavar Jayanti - Laksha Japa Kala Bhairavar Homam with Ashta Bhairavar Yagam ....


தன்வந்திரி பீடத்தில்பைரவர் ஜயந்தியை முன்னிட்டுஒரு லக்ஷம் காலபைரவர் ஜபத்துடன்அஷ்ட பைரவர் யாகம்.


வாழ்க்கை என்பது இனிமையானதுதான். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதில் பிரச்னைகளும் துயரங்களும் அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்பக் கலந்துள்ளன. எப்படிப் பாலில் நீர் கலந்துள்ளது தெரியாதோ, அதுபோல் பிரச்னைகளையும் துயரங்களையும் புறம் தள்ளி விட்டு, இனிமையை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்நாட்களை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும். ஆனால், அது எத்தனை பேருக்கு சாத்தியம் என்பதுதான் கேள்வி. நமது கவலைகள், பிரச்னைகள், ஏக்கங்கள், சோகங்கள் இப்படி அனைத்தையும் போக்குவதற்கு எண்ணற்ற ஹோமங்கள் ஆன்மிக நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஹோமங்கள் என்பவை ஒரு பரிகாரம். ஒருவருக்கு வந்திருக்கும் தீராத தோஷத்தைத் துடைத்து எறிய, தீவினைகள் நீங்கி நல்வினைகள் நம்மை சூழ  இறைவனின் பரிபூரண ஆசி என்றென்றும் நமக்குப் பக்கபலமாக இருக்க இது போன்ற சில வரங்களை எதிர்பார்த்தே பரிகார ஹோமங்களை நடத்துவதற்குப் பலரும் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்துக்கு வருகை புரிந்து ஸ்வாமிகளின் ஆசி பெற்று ஹோமம் செய்து பிரார்த்திக்கிறார்கள். ஸ்ரீ தன்வந்திரியின் அருளுடன் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பலன் பெறுகிறார்கள். உண்மையான பக்தியுடன் வந்து பிரார்த்திக்கும் அனைவருக்கும் நற்பலன்கள்தான் விளைந்து வருகின்றன என்கின்றனர் இங்கு வரும் பக்தர்கள்.

இவற்றை மனதில் கொண்டு மக்கள் நலன் பெற வருகிற 30.11.2018 வெள்ளிக்கிழமை பைரவர் ஜயந்தியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒரு லக்ஷம் கால பைரவர் மூலமந்திர ஜப ஹோமத்துடன் ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் மஹா ஹோமங்கள், சிறப்பு பூஜைகள், கூஷ்மாண்ட தீபம் ஏற்றி செவ்வரளி புஷ்பங்களால் புஷ்பாஞ்சலி செய்து, உளர்ப்பழங்கள், 9 வகையான நிவேதனங்கள் கொண்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற உள்ளது.

இறைவன் நம்மைக் காத்து இரட்சிப்பவன் என்று எண்ணி நாம் அனைவரும் ஆலயங்களுக்குச் சென்று பிரதான கடவுளை வேண்டி வணங்குகிறோம். ஆனால் அந்த ஆலயத்தில் எல்லோரும் பரிவார தெய்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபடுவது இல்லை என்றால் மிகையாகாது.  சிலர் ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், கால பைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பல வகையான மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். தற்பொழுது பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். அதில் காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.

தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன் மஹா காலபைரவர்...

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவருக்கும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்டஅஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் செய்து வருகிறார்.

பைரவர் ஜெயந்தி விழா....

இந்தாண்டு பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 30.11.2018 வெள்ளிக்கிழமை கால பைரவர் அருள் கிடைக்கவும் பிதுர் தோஷம், திருமணத்தடை விலகவும்,  வியாபாரம் செழிக்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க,  தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெற, செல்வச் செழிப்பு ஏற்பட, சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க,பிரம்மஹத்தி தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, பில்லி, சூன்யம், திருஷ்டி அகல, அக்கம் பக்கத்தவர்களின் தொல்லைகள் அகல, யமபயம் நீங்க,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்க நடைபெறும்  மஹா யாகங்களிலும், அபிஷேகங்களிலும், அர்ச்சனைகளிலும் சங்கல்பம் நடைபெறவுள்ளது. சிறப்பு அலங்காரத்துடன் நடைபெறும் பைரவர்  ஜெயந்தி விழாவில் அனைவரும் பங்கேற்று பலன் பெற அழைக்கின்றோம்.

காலபைரவர் ----பைரவரின் சிறப்புகள்...

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. பைரவர், எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள் புரிகிறார். ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு. இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார். சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. சிவபெருமான் வீரச்செயல்களைச் செய்யும் காலங்களில் ஏற்கும் திருவுருவங்களை பைரவர் திருக்கோலம் என்று புராணம் சொல்லும் பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும், வாய்ப் பகுதியில் ரிஷப ராசியும், கைகளில் மிதுனமும், மார்பில் கடகமும், வயிற்றுப் பகுதியில் சிம்மமும், இடையில் கன்னியும், புட்டத்தில் துலாமும், லிங்கத்தில் மகரமும், தொடையில் தனுசும், முழந்தாளில் மகரமும், காலின் கீழ்ப்பகுதியில் கும்பமும், அடித்தளங்களில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன. பைரவர் பாம்பைப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார். பைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது.

தன்வந்திரி பீடத்தின் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் / சொர்ண கால பைரவர்.....

சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் வடிவங்களுள் பைரவர் ஒரு அம்சமாகும் இந்த பைரவர், அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுவார். தன்வந்திரி பீடத்தில் 4 அடி உயரத்தில் பைரவி என்ற திருநாமம் பெற்ற தனது மனைவியைத் தனது மடியில் இருத்திக்கொண்டு மலர்ந்த தாமரை மலர் முகத்துடன் சடைமுடியில் பிறைச்சந்திரன் சூடியும், கரங்களில் தாமரை மணிகள் பொதித்த சங்கம், அபய ஹஸ்தத்தொடு பொன் சொரியும் குடம் ஒரு கரத்தில் தாங்கி, மறுக்கரத்தால் ஆதி சக்தியை ஆலிங்கனம் செய்தபடியும் காட்சி அளிக்கிறார். மறு கரத்தில் சூலமும். கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்து. தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கிறார் இவருக்கு அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தர்கள் இவரை பொன், பொருள், குடும்ப க்ஷேமம் வேண்டியும் சகல சம்பத்துகளும் பெறவும் வழிபட்டு வருகின்றனர். தன்வந்திரி பீடத்தில் தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும். ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு, ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் ஒவ்வொரு பக்தரும் இந்த பைரவரை தரிசித்து, பிரசாதங்கள் பெற்று ஆனந்தமான வாழ்வு வாழலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Monday, November 19, 2018

Koti Japa Kubera Yagam


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி சென்ற 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், 24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.

இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோமங்கள் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம். இன்று வரை 60 லக்ஷம் ஜபங்கள் தாமரை விதைகள், தாமரை புஷ்பங்கள், விசேஷ மூலிகை திரவியங்களுடன் குபேர யாகம் நடந்துள்ளது. இந்த யாகம் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. இன்று வரை இந்த யாகத்தில் முன்னாள் வேலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆர்.நந்தகோபால் IAS அவர்கள், இந்து முன்னணி திருநெல்வேலி மாவட்டசெயலாளர் திரு. எம்.பால்மாரியப்பன் அவர்கள், திரு. சோளிங்கர் பிரகாஷ் அவர்கள், ஸ்ரீராம் பட்டாசாரி, தென் இந்திய புரோகித சங்க தலைவர் வி.ஆர்.சீதாராமன் மற்றும் நிர்வாகிகள், ராணிப்பேட்டை விக்னேஷ் மோட்டார் உரிமையாளர், வாலாஜாபேட்டை W.G.முரளி, முன்னாள் தலைவர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.





Saturday, November 17, 2018

Homam For Gaja Cyclone Affected Peoples ...


தன்வந்திரி பீடத்தில்
இன்று 17.11.2018 சனிக்கிழமை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப
சிறப்பு ஹோமங்கள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 17.11.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

சமீபத்தில் மிக கொடுமையாக சூறையாடிய கஜா புயலால் கடலூர், நாகபட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், மாவட்டங்களிலும் மேலும் சில இடங்களிலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும், அதில் உயிர் இழந்தவர்களின் ஆன்மா நல்ல முறையில் சாந்தி அடையவும், அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் மன அமைதி பெறவும், சூறாவளி புயலினால் குடிசைகளும், கால்நடைகளும், இதர பொருட்களும் இழந்துள்ள மக்கள்  இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும், அதனால் உடல் நிலைகள், மன நிலைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், சிறப்பு தன்வந்திரி ஹோமமும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமமும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Thailabhishekam - 108 Herbal Theertha Thirumanjanam ...


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

மூலவர் தன்வந்திரிக்கு தைலாபைஷேக விழா

உடல் பிணி மற்றும் உள்ளத்துப்பிணி தீர

28.11.2018 முதல் 15.12.2018 வரை

காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

மேலும் 14.12.2018 ல் ஸ்ரீ காயதிரீ ஹோமம், கர்பரக்ஷாம்பிகை

ஹோமம், 108 சுமங்கலி பூஜையும், 15.12.2018 ல் 108

கலசங்களில் 108 மூலிகை தீரத்த திருமஞ்சனமும்

நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உடல் நோய், மன நோய் நீங்க பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி மூலவர் ஸ்ரீ தன்வந்திரிக்கு வருகிற 28.11.2018 முதல் 15.12.2018 வரை தைலாபிஷேகமும் மேலும் 14.12.2018 ல் ஸ்ரீ காயதிரீ ஹோமம், கர்பரக்ஷாம்பிகை ஹோமமும், 108 சுமங்கலி பூஜையும், 15.12.2018 ல் 108 கலசங்களில் 108 மூலிகை தீரத்த திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி தைலாபிஷேக பலன்கள் :

மேற்கண்ட தேதியில் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபத்துடன், நல்லெண்ணெயை கொண்டு அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்லெண்ணெய் என்பது எள் விதையிலிரிந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விசேஷ திரவியமாகும். எள்ளை கொண்டு தான் சனி கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகார பிரீத்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமம், எள்ளு எண்ணெய் கொண்டு தெய்வங்களுக்கு எண்ணெய் காப்பு சாற்றுவது போன்ற வைபவங்கள் சனி பிரீத்தியாக கருதுகின்றோம். இத்தகைய நல்லெண்ணையினால் நோய் தீர்க்கும் க்டவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், ஆயுள் தோஷம் நீங்கவும், மனத்தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவகிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறைவும், ஏழரைசனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி போன்ற சனி கிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்று புண், குடல் சம்மந்தமான நோய்கள், ஆரோக்ய சம்மந்தமான நோய்கள் நீங்குவதற்கு வழிவகை செய்கிறது.

14.12.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீ காயத்ரீ ஹோமத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் 108 சுமங்கலி பூஜை :

தம்பதிகள் நலன் கருதியும், குழந்தை பாக்யம் வேண்டியும், வேதமாதா அருள் கிடைக்கவும், 14.11.2018 காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ காயத்ரீ ஹோமம் மற்றும் கர்பரக்ஷாம்பிகை யாகத்துடன் 108 சுமங்கலிகள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும் நடைபெறுகிறது. இதில் 108 சுமங்கலிகள் கலந்து கொண்டு கணவன் மனைவி ஒற்றுமை வேண்டியும், மாங்கல்ய பலம் கிடைக்கவும், நீண்ட ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம் கிடைக்கவும், பிரிந்திரிக்கும் தம்பதியர் ஒன்று சேர வேண்டியும், குழந்தை பாக்யம் போன்ற பல்வேறு வேண்டுதல்களை முன்வைத்து 108 சுமங்கலி பூஜையும் கூட்டுப்பிரார்த்தனையும் யாகத்துடன் நடைபெற உள்ளது. இந்த பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட சௌபாக்ய பொருட்களான மஞ்சள், குங்குமம், திருமாங்கல்ய சரடு, கண்ணாடி, சீப்பு, வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம், அட்சதை, புடவை, ஜாக்கெட் ஆகியவைகள் சுமங்கலிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளனர்.

ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு 15.12.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை 108 கலசங்களில், 108 மூலிகை தீர்த்த திருமஞ்சனம் நடைபெற்று, சிறப்பு ஆராதனை வைபவமும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் மஹா பிரசாதம் வழம்க்கப்பட உள்ளது. அனைவரும் வருக, இறை அருளுடன் குரு அருள் பெறுக. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் 9443330203

Friday, November 16, 2018

Purohitar Mela - Koti Japa Kubera Yagna ...


தன்வந்திரி பீடத்தில்
அகில உலக  புரோகிதர்கள் நலன் கருதி
சிறப்பு ஹோமமும் கோடி ஜப குபேர யக்ஞமும்.

இன்று 16.11.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் அகில உலக  புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலன் கருதி 9 ஆம் ஆண்டு சிறப்பு  தன்வந்திரி யக்ஞம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன்  நடைபெற்றது.
ஸ்ரீ வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்களுடைய க்ஷேமம், அவர்களின் குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக இன்று 16.11.2018 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜையுடன். மங்கள வாத்தியம், கோ பூஜை, சூரிய நமஸ்காரம்,     விக்னேஸ்வரபூஜை, கணபதியக்ஞம், நவக்ரஹ யக்ஞம், ஸ்ரீமந் நாராயண யக்ஞம்,(ஜனார்தன யக்ஞம்), ஸ்ரீ லக்ஷ்மி யக்ஞம், ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம், ஸ்ரீ காலபைரவர் ஹோமத்துடன் ஒரு கோடி குபேர ஜப ஹோமத்தின் மூன்றாவது நாள் நிகழ்ச்சியும், பூர்ணாஹூதியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் புரோகித சங்க தலைவர் வேலூர் திரு. சீதாராமன் அவர்கள், பொருளாளர் திரு. கோபாலன், உப தலைவர் திரு. கீ. எல். கிருஷ்ண மூர்த்தி அவர்கள், வேலூர் பா. சேகர், பி. ஆர். கணேஷ், சிதம்பரம் குஞ்சிதபாகம் மற்றும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு யாகத்தில் பிராத்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.














Thursday, November 15, 2018

Koti Japa Kubera Yagam ....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பயன் தரும் பத்து யாகங்களுடன்
ஒரு கோடி குபேர ஜப யக்ஞம்.தாமரை விதைகள், தாமரை புஷ்பங்கள் கொண்டு14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி நேற்று 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று 14.11.2018 புதன்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. இன்று காலை 7.00 மணியளவில் கோ பூஜை, வேத பாராயணம், விநாயகர் அனுக்ஞை, யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மஹா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் தாமரை விதைகள், தாமரை பூக்களுடன், விசேஷ திரவியங்களுடன் பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம், திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்கள் திருக்கரங்களால் குத்துவிளக்கு ஏற்றி குலதெய்வ பூஜை செய்து யாகமானது நடைபெற்று வருகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் நாளை 16.11.2018 காலை 10.00 மணி முதல், அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், 17.11.2018 சனிக்கிழமை சனிசாந்தி ஹோமமும், 18.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில் காலபைரவர் ஹோமமும், 19.11.2018 திங்கள்கிழமை ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மஹா தன்வந்திரி ஹோமமும், 20.11.2018 செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ருத்ர ஹோமமும், 21.11.2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மஹா சரஸ்வதி ஹோமமும், 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், 24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு  காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.

இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.

ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் :

குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது.

லட்சுமி குபேரர் திருக்கோவில் :

ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், தமிழகத்தில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது. ஆரோக்யத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மியையும், கல்விக்காக ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரையும், செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது.

திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை – திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும் என்கிறார் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

ஆரோக்ய பீடத்தின் சிறப்பு :

ஷண்மத பீடமாகவும், சமத்துவ பீடமாகவும், ஐஸ்வர்யம் மற்றும் ஆரோக்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் மிகச்சிறப்பான முறையில், அழகான முகத்துடன், காண்போரைக் கவரும் புன்சிரிப்புடன் வெள்ளிக்கவசத்தில் காட்சி தரும் லக்ஷ்மி குபேரர் காட்சி நம்மனதில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதியுடன் கலசத்தை அணைத்துக் கொண்டு லட்சுமி அம்மையாருடனும், துணைவி சித்ரலேகா, பத்ரா எனும் சித்தரிணீயுடனும் இப்பீடத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் தன்வந்திரி பகவான் சன்னதி சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, மரகதலிங்கம், கார்த்திகைகுமரன், அன்னபூரனி, லக்ஷ்மி நரசிம்மர், கார்த்தவீர்யார்ஜுனர், வாஸ்து பக்வான், ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி, சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளிட்ட 75 பரிவார மூர்த்திகளுடன் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக உள்ளன.

குபேரன் வரலாறு :

குபேரர் சிவபெருமானின் மீது அதிக பக்தி கொண்டவர். குபேரரின் தவத்தைக் கண்டு சிவன் காட்சி தந்தார். சிவனுடன் அழகின் மொத்த உருவமாகக் காட்சியளித்த பார்வதியைக் கண்ட குபேரன் அழகில் மயங்கிப் போனார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி குபேரனின் ஒரு கண்ணை வெடிக்கச் செய்தார். பின், அவர் மன்னிப்புக் கேட்க வெடித்த கண்ணுக்கு பதிலாகச் சிறிய கண்ணை வரமாக தந்தார் சிவபெருமான். அத்துடன், குபேரரின்தவத்தை பாராட்டி காவலர்களில் ஒருவராக சிவன் நியமித்தார். குபேரனை தன தானிய அதிபதியாக லட்சுமி தேவி நியமித்தார். அன்று முதல் இன்று வரை தனத்திற்கும், தானியத்திற்கும் காவலராக இருந்து வேண்டுபவர்களுக்கு செல்வ வளம் தரும் கடவுளாக குபேரன் உள்ளார்.

சிறப்பு யாகங்கள் :

தன்வந்திரி பீடத்தில் 365 நாட்களும் வைபவங்கள் யாகங்களுடன் நடைபெறுகின்றன. தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதனைத் தவிர்த்து வைகுண்ட ஏகாதசி, அட்சய திருதியை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பஞ்சமி, திருவோணம், ஸ்வாதி, ஷஷ்டி உள்ளிட்ட தினங்களில் ஸ்ரீ தன்வந்திரி பகவானுடன் இங்குள்ள குபேரருக்கு சிறப்பு வழிபாடும், பிரார்த்தனையும் செய்யப்படுகிறது.

வழிபாடு :

இத்தலத்தில் உள்ள லட்சுமி குபேரரையும், சொர்ணாகர்ஷண பைரவரையும் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்து புத்தாடைகள் சாற்றி பிரார்த்தனை செய்யுகின்றனர். மேலும் புது வீடு, நிலம், வாகனம் வாங்குவோர், அல்லது வாங்க திட்டமிடுவோர் முன்னதாக இப்பீடத்தில் உள்ள வாஸ்து பகவானுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரரிடம் கோரிக்கை வைத்து வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

எப்போது, எப்படிச் செல்வது ?

இத்திரு நாட்டில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுடன் லட்சுமி குபேரர், விநாயக தன்வந்திரி, பட்டாபிஷேக ராமர் என 75 பரிவார மூர்த்திகளுக்கு ஷண்மதங்களுக்கும் உள்ள தனிக் கோவில் என்றால் அது வேலூர், வாலாஜாபேட்டை உட்பட்ட கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தான். இப்பீடம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை  திறக்கப்பட்டிருக்கும். வேலூர் மாநகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும், வாலாஜா ரோடு ரயில் நிலயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பீட்த்திற்கு வரலாம். சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை அடைய பேருந்து வசதிகள் உள்ளது.

வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று இத்தல இறைவனையும், குபேரரையும் வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்து, குபேரருக்கு மலர் சூட்டி நிவாரணம் பெறுகின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம்.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.