Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, July 17, 2018

Sri Hayagreevar Jayanthi 2018..


வருகிற 24.08.2018 வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஹயக்ரீவர் ஜயந்தியில்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்

அழியா செல்வம் தரும் ஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம்.


ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய திமஹி
தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்

ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி விழா :

மஹா விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக பிரசித்தி பெற்றவர் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர். ‘கல்வி கடவுள்என்ற சிறப்பை பெற்றவரான ஸ்ரீ ஹயக்ரீவருக்கு வருகிற 24.08.2018 வெள்ளிக்கிழமை ஆவணி திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி விழா தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரும் தேசிகரும் :

பக்தர்கள் கைப்படை எழுதிய பல லட்சம் தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களுடன் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லக்ஷ்மி தேவியோடு கரிகோலமாக பவனி வந்து பிரதிஷ்டையாகி, வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். இவருடன் தேசிகரையும் தரிசிப்பது காணக்கிடைக்காத காட்சியாகும்.

ஸ்ரீ ஹயக்ரீவரின் சிறப்புகள் :

பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும்  காட்சி கொடுத்தவர் புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள். குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு.

கல்விச் செல்வம் ஒன்றே நிரந்தரமானது :

இன்றைக்கு சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங்கள், செல்வம் எல்லாம் நிலையற்றவை. இவை இடம் விட்டு இடம் செல்லும். ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத்துக்கு அழிவே கிடையாது. காசு, பணம், நகை, நிலம் போன்ற அனைத்து செல்வங்களும் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. ஆனால் கல்விச் செல்வம் ஒன்றே நிரந்தரமானது எனலாம். யார் ஒருவருக்கு கல்விச் செல்வத்தை நாம் வழங்குகிறோமோ, அவருக்கு ஞானமும் கல்வியும் அதிகரிக்கும். நம்முடன் கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும்.

சரஸ்வதி தேவியின் குரு ஸ்ரீஹயக்ரீவர் :

கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். சரஸ்வதி தேவிக்கும் ஒரு குரு உண்டு. அவர்தான் ஸ்ரீஹயக்ரீவமூர்த்தி. அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞானகுருவாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார். கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிவதால் இவரை ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கின்றோம்.

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் / நவகலச திருமஞ்சனம் :

வருகிற 24.08.2018 ஆவணி திருவோணம் நக்ஷத்திரம் ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமமும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கு நவகலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோம பலன்கள்:

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இவருக்கு புதன்கிழமை மற்றும் திருவோண நட்சத்திரத்திரம் சேர்ந்து வரும் நாளில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் பங்கேற்று இவரை வழிபட ஞானமும், அறிவும், வாக்கு வன்மையும், ஞாபக சக்தியும் கூடுகிறது. செல்வமும் சேர்கிறது. கல்வி, இயல், இசை, நடனம் போன்ற கலைகளிலும் ஞானத்தின் இருப்பிடமாகவும் விளங்குகின்ற ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை தரிசிப்பவர்களுக்கும், யாகங்களில் கலந்து கொள்பவர்களுக்கும் படிப்பில் முன்னேற்றம், ஞாபக சக்தி குறைபாடுகள் நீங்குதல், நல்ல பேச்சு ஆற்றல், வாக்கு உண்மை ஏற்படும். சகல தோஷங்களும் நீங்கி கேள்வி ஞானம் பெற்று பெயர், புகழ், செல்வாக்குடன் சொல்வாக்கு ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

யார், யார் வழிபடலாம் ஸ்ரீ ஹயக்ரீவரை :

ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9-ம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபடலாம். மேலும் மாணவ, மாணவியர்கள் மட்டுமின்றி வார்த்தை ஜாலத்தில் தொழில்புரிபவர்கள் வழக்கறிஞர்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், தரகர்கள் போன்றவர்கள் அவரவர் செயல்களில் மேன்மை அடைய வருகிற 24.08.2018 ல் நடைபெறும்  யாகத்திலும், பூஜையிலும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோம பிரசாதம் :

இந்நன்னாளில் அவரை வழிபட்டு அருள் பெறுவோம். ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரை வணங்கி வந்தால் அனைத்து தடைகளும் நீங்கி தொழில் முன்னேற்றம் ஏற்படும். கலந்து கொள்ளும் நபர்களுக்கு ஹோம பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள், ஹோம ரட்சை, மற்றும் தீர்த்த பிரசாதம் ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203No comments:

Post a Comment