ஸ்ரீ தன்வந்திரி
பீடத்தில் ஆனி அமாவாசையில்
ப்ரத்யங்கிரா ஹோமத்துடன்
21 ஹோமங்கள் நடைபெற்றது.
உலகில் சகல
ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்தி வருகிறார் இறைவன். தன்பாலும் தான்
படைத்த உயிர்கள் பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுய நலன்களுக்காகச்
செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் சிறப்பாக இறைவனுக்காக நாம்
செய்வதில்லை. நம்முடைய குறைகளை தீர்ப்பதற்காகவே செய்யப்படுவது
ஹோமங்கள் என்கிற யாகங்கள் எனலாம்.
உலக நலன் கருதி வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும்
பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ
முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 11.07.2018
புதன்கிழமை, 12.07.2018 வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஆனி
அமாவாசையை முன்னிட்டு ப்ரத்யங்கிரா ஹோமத்துடன், ஸ்ரீ தரணி ஹோமம்,
ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ கணபதி ஹோமம்,
ஸ்ரீ க்ருட பஞ்சாக்ஷரி ஹோமம், ஸ்ரீ தக்ஷண காளி
ஹோமம், ஸ்ரீ ஆஞ்சனேய ஹோமம், ஸ்ரஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஹோமம், ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம், பாசுபதாஸ்தர ஹோமம், வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் , ஸ்ரீ காயத்ரீ ஹோமம்,
ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமம், பூர்ண புஷ்கலா ஹோமம்,
ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ குபேர ஹோமம்,
ஸ்ரீ சக்தி ஹோமம், ஸ்ரீ வடுக பைரவ ஹோமம் ஸ்ரீ
காமாக்யா மஹா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அஸ்வாரூட ஹோமம், ஸ்ரீ பாலமுருகன் ஹோமம் ஆகிய 21 ஹோமங்கள் நேற்று 11.07.2018 புதன்கிழமை துவங்கி, இன்று 12.07.2018 வியாழக்கிழமை
பூர்த்தி பெற்றது.
இந்த யாகத்தில் பல்வேறு மூலிகைகள்,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்,
சித்ரான்னங்கள் சேர்க்கப்பட்டது. இதில்
மோரீஷியஸ் (ரீயூனியன்) நாட்டில் இருந்து ஸ்வாமி அமேயான்ந்த அவர்கள் மற்றும் பலர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த யாகத்தில் ஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன் சுமை நீங்க, வெளியே கொடுத்த
பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு,
ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள்,
மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல
விதமான பிரச்சனைகள் அகலவும்
பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து
பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதமும், சிறப்பு
அன்னதானமும் வழங்கபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment