வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்"மகா சங்கடஹர சதுர்த்தி" முன்னிட்டு
சௌபாக்கியம் தரும் சங்கடஹர கணபதி யாகம்.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 31.07.2018 செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வினை தீர்க்கும் விநாயகர் பிணி தீர்க்கும் தன்வந்திரி அருள் வேண்டி சங்கடஹர கணபதி ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது.
சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம்
(வளர்பிறை) சதுர்த்தியை "வர சதுர்த்தி" என்றும், கிருஷ்ண பட்சம் (தேய் பிறை) சதுர்த்தியை
"சங்கடஹர சதுர்த்தி" என்றும் கூறுவார்கள். நமக்கு வரும் சங்கடம்
அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதமாகும்.
மேலும் செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு
வாய்ந்ததாகும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும். யாகங்களில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால் பல்வேறு சங்கடங்கள்
தீரும் எனலாம்.
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்
பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. சங்கடம் என்றால் இக்கட்டான சூழ்நிலைகள், தொல்லைகள், கஷ்டங்கள், தடைகள் என்று அர்த்தம். ஹர என்றால் நீக்குவது
என்று பொருள். அதுவும் செவ்வாய்
கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா
சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
மேற்கண்ட மஹா சங்கடஹர சதுர்த்தி நாளில் நடைபெறும் சங்கடஹர கணபதி யாகத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து
பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச்
சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை,
நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு. செல்வம், செல்வாக்கு கிடைக்கும். மேலும் பலவிதமான நன்மைகளை அடைய அருள் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
இதில் பங்கேற்க விரும்பவர்கள்
நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம்,
சுக்கு, மிளகு, நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்
கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள்
பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment