வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
உலக மக்களின் உடல் பிணி மற்றும் உள்ளத்து பிணி நீங்க,
நோய் தீர்க்கும் கடவுளும் காக்கும் கடவுளுமான
ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு
கோடி ஜப தன்வந்திரி ஹோமம்
வருகிற 19.07.2018 முதல் 28.10.2018 வரை நடைபெறுகிறது.
அன்புடையீர்,
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை என்றாலே ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடம் என்றுதான் அனைவரின் நம் அனைவரின் கவனத்தை
ஈர்க்கிறது எனலாம். ஆரோக்ய பீடத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானான
நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கும், ஆரோக்ய லக்ஷ்மி தாயாருக்கும்,
இதர 75 பரிவார மூர்த்திகளுக்கும் பக்தர்களின் தேவைகளுக்காக நிவர்த்திக்காக யாகங்கள்,
ஜபங்கள் வைபவகமாக அனுதினமும் நடந்து
வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு கோடி
ஜப யக்ஞமும், அர்ச்சனையும், மஹாபிஷேகமும் உலக நன்மை கருதியும், மக்கள் வாழ்வாங்கு வாழவும் தன்வந்திரி குடும்பத்தினர்கள் பங்கேற்று
நட்த்தும் விதமாக, மிகச் சிறப்பாக மாபெரும் கோடி ஜப ஹோமம் வருகிற
19.07.2018 முதல் 28.10.2018 வரை வைபவமாக
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி
பீட்த்தில் நடைபெறவுள்ளது.
இக்கோடி ஜப தன்வந்திரி யாகத்தின் மூலம் நற்குழந்தைப் பேறு, பாலாரிஷ்ட தோஷ நிவர்த்தி
(குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் நீங்குதல்), குழந்தைகளின் கல்வி மேம்பாடு,நல்ல ஞாபக சக்தி,
தேர்வுகளின் நன்மதிப்பெண்கள் பெறுவது, கற்ற கல்விக்கேற்ற உத்யோகம்,உத்யோக உயர்வு,
வியாபாரத்தில் பெருலாபம், சுப திருமண யோகம், நல்ல இல்லற வாழ்க்கை, நோயற்ற நீடித்த நல்வாழ்வு, வம்ச
அபிவிருத்தி, ஸகல ஸெளபாக்கியங்கள், பித்ரு தோஷ நிவர்த்தி, முன்னோர்கள்
பூரண ஆசீர்வாதம், நவக்ரஹ ஜாதக தோஷ நிவர்த்தி மற்றும்
வேண்டும் வரங்களை மிக விரைவில் வழங்கிடும் இந்த மஹா மஹா வைபவத்தில் பக்தர்கள்
அனைவரும் பங்கு கொண்டு, “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
ஆசிகளுடன் ஸ்ரீ ஆரோக்ய
லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து
பயன்களையும் பெற வேண்டுகின்றோம்.
பக்தர்கள் அனைவரும் இந்த மாபெரும் காணுதற்கரிய
இந்த மாபெரும் வைபவத்தினை தரிசித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறக்
கோருகின்றோம்.
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள்,
பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன்
கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த
தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment