வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சகல சௌபக்யங்கள் தரும்ஷோடச மஹாலக்ஷ்மி யாகத்துடன்நாராயண ஹோமம்.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு”
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி
நவராத்ரியை முன்னிட்டு வருகிற 17.10.2018 புதன்கிழமை காலை
10.00 மணி முதல் 12.00 மணி
வரை வளர்பிறை அஷ்டமியில் ஷோடச மகாலக்ஷ்மி யாகத்துடன் நாராயண ஹோமம் நடைபெறுகிறது.
1. தனலட்சுமி யாகம்:
ஸகல ஜீவராசிகளிலும் நிறைவாக இருப்பவள் ஸ்ரீ
தனலெட்சுமி. எல்லா உயிர்களிடத்தும் அன்பு வேண்டியும், நிறைந்த மனதுடன் நேர்மையாக வாழ்ந்து ஸ்ரீதனலெட்சுமியின் அருளை பரிபூர்ணமாக பெற ஸ்ரீ தனலக்ஷ்மி யாகம் நடைபெறுகிறது.
யாதேவீ ஸர்வபூதேஷு புஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் சகலப் பிராணிகளிடமும் புஷ்டி (நிறைவு)
உருவத்தில் இருக்கின்றாளோ அந்த ஐஸ்வர்ய லட்சுமியை நான் வணங்குகிறேன்.
2. வித்யாலட்சுமி யாகம்:
எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி
உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்தவேண்டியும், அன்பாகவும், இனிமையாகவும்
பேச வேண்டியும், யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொள்ளவும் நடைபெறும் இந்த யாகத்தில்
பங்கேற்று ஸ்ரீவித்யா லெட்சுமியின் அனுகிரகத்தைப் பெறலாம்.
யாதேவீ ஸர்வபூதேஷு புத்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் புத்தி
உருவில் இருக்கின்றாளோ அந்த வித்யாலெட்சுமியை வணங்குகிறேன்.
3. தான்யலட்சுமி யாகம்:
ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் பசி நீக்கும் தான்ய
உருவில் இருப்பதால் நாம், நம் பசியைத்
தீர்த்துக் கொள்வதோடு நில்லாமல் பசியோடு, நம் வீட்டிற்கு
வருபவர்களுக்கு உணவளித்து உபசரிக்கும் மனது வேண்டியும், தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான்ய லட்சுமியின் அருளை பெறவும் நடைபெறுகிறது ஸ்ரீ தான்யலக்ஷ்மி யாகம்.
யாதேவீ ஸர்வபூதேஷு க்ஷீதாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பசி
உருவில் இருக்கின்றாளோ அந்த தான்யலட்சுமியை வணங்குகின்றேன்.
4. வீரலட்சுமி யாகம்:
மனதில் உறுதியுடன் பலம் பெற்று நாம் செய்த
தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ளும் மனநிலை வேண்டியும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தியும், இனி தவறு செய்யாமல் இருக்க மன உறுதி பெற நடைபெறும் யாகம் ஸ்ரீவீரலட்சுமி
யாகம் ஆகும்.
நம்பிக்கையுடன் வேண்டினால்
நன்மை உண்டாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு த்ரூதிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தைரிய
உருவில் இருக்கின்றாளோ அந்த வீரலட்சுமியை வணங்குகிறேன்.
5. சௌபாக்யலட்சுமி
யாகம்:
ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில்
இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின்
மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டி பிறர் மனது நோகாமல் நடந்து கொள்ள வேண்டியும்
நடைபெறும் யாகமே ஸ்ரீஸெளபாக்கிய லட்சுமியின் யாகமாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு துஷ்டிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும்
மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாளோ அந்த ஸெளபாக்கிய லட்சுமியை வணங்குகிறேன்.
6. சந்தானலட்சுமி யாகம்:
எல்லா உயிர்களிடத்தும் தாய் உருக்
கொண்டிருக்கும் ஸ்ரீ ஸந்தான லட்சுமியின் அருளைப் பெற எல்லாக் குழந்தைகளையும் தன்
குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வர வேண்டும் என்பதிற்காக
தாயன்போடு நடைபெறும் யாகமே ஸ்ரீஸந்தான லட்சுமி யாகம்.
யாதேவீ ஸர்வபூதேஷு மாத்ருரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தாய்
உருவில் இருக்கின்றாளோ அந்த ஸந்தான லட்சுமியை வணங்குகிறேன்.
7. காருண்யலட்சுமி யாகம்:
சகல ஜீவன்களிடத்தும் கருணையோடு பழகவேண்டும்.
உயிர்வதை கூடாது. மற்ற உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை. ஜீவ காருண்யத்தோடு வாழ
நடைபெறும் யாகமே ஸ்ரீகாருண்ய லட்சுமி யாகம்.
யாதேவீ ஸர்வபூதேஷு தயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் தயை
உருவில் இருக்கின்றாளோ அந்த காருண்ய லட்சுமியை வணங்குகிறேன்.
8. மகாலட்சுமி யாகம்:
நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்குக்
கொடுக்க வேண்டும். என்ற எண்ணம் நம் உள்ளத்தில் ஸ்திரமாக வர வேண்டும் என்பதிற்காகவும்
மேலும் பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை ஸ்ரீமகாலட்சுமி நமக்கு
வழங்க வெண்டியும் நடைபெறும் யாகமே ஸ்ரீ மஹாலக்ஷ்மி யாகமாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு மஹாலட்சுமிரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் செல்வ
உருவில் இருக்கின்றாளோ அந்த வைபவ லட்சுமியை வணங்குகிறேன்.
9. சக்திலட்சுமி யாகம்:
ஸ்ரீ தேவியானவள் எல்லா உயிர்களுக்கும் தானே
சக்தி வடிவமாக இருக்கிறாள். சர்வ சக்தியின் அருள் பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற நடைபெறும் யாகமே ஸ்ரீசக்தி
லட்சுமி யாகமாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
எல்லா உயிரினங்களிடத்தும் எந்த தேவீ சக்தி
வடிவில் இருக்கின்றாளோ, அந்த சக்தி
லட்சுமியை வணங்குகிறேன்.
10. சாந்திலட்சுமி யாகம்:
நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப
துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும் என்பதற்காகவும், மன நிம்மதி வேண்டியும் நடைபெறும் யாகம் ஸ்ரீசாந்தி லெக்ஷ்மி யாகமாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் சாந்தி
உருவில் இருக்கின்றாளோ அந்த சாந்தி லட்சுமியை வணங்குகிறேன்.
11. சாயாலட்சுமி யாகம்:
நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை
தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் கொண்டு சென்று
ஸ்ரீ சாயா லட்சுமியின் அருளைப் பெற வேண்டி நடைபெறும் யாகமே ஸ்ரீ சாய லக்ஷ்மி யாகம்.
யாதேவீ ஸர்வபூதேஷு ச்சாயாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம:
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பிரதி
பிம்ப வடிவில் இருக்கின்றாளோ அந்த சாயா லட்சுமியை வணங்குகிறேன்.
12. த்ருஷ்ணாலட்சுமி
யாகம்:
ஸ்ரீ த்ருஷ்ணா லட்சுமி யாகத்தில் கலந்து கொண்டால்
எப்போதும் நம் மனதில் பக்தியும், பிறருக்கு உதவ
வேண்டும் என்ற ஞானமும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையும் கிடைக்கும்.
யாதேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆசை
உருவில் இருக்கின்றாளோ அந்த த்ருஷ்ணா லட்சுமியை வணங்குகிறேன்.
13. சாந்தலட்சுமி யாகம்:
எல்லா உயிர்களிடத்தும் பொறுமை உருவில் இருக்கும்
ஸ்ரீ சாந்த லட்சுமியை தியானித்து சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கவும், தனக்கு வரும் தடைகளை நீக்கவும், பொருத்து கொள்ளும் மன
பக்குவம் வேண்டியும் நடைபெறும் யாகமே ஸ்ரீ சாந்த லக்ஷ்மி யாகம்.
யாதேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் பொறுமை
வடிவில் இருக்கின்றாளோ அந்த சாந்த லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.
14. கீர்த்திலட்சுமி யாகம்:
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், ஒரு மனதுடன் செய்து, புகழ், கீர்த்தி, மகிழ்ச்சி பெறவும், கீர்த்தி
லக்ஷ்மியின் அருள் பெறவும் நடைபெறும் யாகமே ஸ்ரீ கீர்த்தி லட்சுமி யாகம் ஆகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு கீர்த்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் கீர்த்தி
வடிவில் இருக்கின்றாளோ அந்த கீர்த்தி லட்சுமியை வணங்குகிறேன்.
15. விஜயலட்சுமி யாகம்:
விடாத முயற்சியும், உழைப்பும், நம்பிக்கையும்
இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யும்
யாகமே ஸ்ரீவிஜய லட்சுமி யாகமாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு விஜயரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் வெற்றி
வடிவில் இருக்கின்றாளோ அந்த விஜய லட்சுமியை வணங்குகிறேன்.
16. ஆரோக்கியலட்சுமி யாகம்:
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும்
போதாது. உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கோபம், பொறாமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க வேண்டி
செய்யும் யாகமே ஸ்ரீஆரோக்கிய லக்ஷ்மி யாகமாகும்.
யாதேவீ ஸர்வபூதேஷு காந்திரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம
எந்த தேவியானவள் எல்லா உயிரினங்களிலும் ஆரோக்கிய
உருவில் உறைகின்றாளோ அந்த ஆரோக்கிய லட்சுமியை நமஸ்க்கரிக்கின்றேன்.
அன்னையே.. உனது திருவடிகள்தான் என் போன்ற
பக்தர்களை காப்பாற்றுவதோடு, மனதில்
இருக்கும் பயத்தையும் அகற்றுகின்றன. உன்னைத் தவிர வேறு யார்தான் எங்களை காக்க
முடியும்.? கேட்பதற்கு மேலாகவே வரங்களை அருளும் தாயாக
அல்லவா நீ இருக்கிறாய்..? அதனால் உனது
திருவடிகளை வணங்குகிறோம். மேற்கண்ட ஷோடச மஹாலக்ஷ்மி யாகத்தின் மூலமாக எங்களுக்கு சகல
சௌபாக்யங்களும் அளித்து, காத்து ஆரோக்யமாகவும், ஆனந்தமாகவும்
வாழ ஆசீர்வதிப்பாயாக.!’
இந்த
யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள்,
மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment