Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, July 14, 2018

Sri Lakshmi Narayana Yagam...


ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 28.07.2018 சனிக்கிழமை
திருப்பம் தரும் திருவோண ஹோமத்துடன்
லக்ஷ்மி கடாக்ஷம் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகம்

லக்ஷ்மி நாராயண மந்திரம்
ஓம் ஷ்ரீம் க்லீம் லக்ஷ்மி நாராயண நமஹ

ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் செல்வத்தை பாதுக்காப்பராகவும் செல்வ செழிப்பை தரும் கடவுளாக விளங்குபவர். இத்தம்பதிகளை யாகம், திருமஞ்சனம், அர்ச்சனை, பாராயணம் போன்ற பல்வேறு வழிகளில் வேண்டுவது மிகவும் சிறந்த பலன் தரக்கூடிய செயலாகும். மேலும் யாகங்கள் செய்வதும், யாகங்களில் பங்கேற்பதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது மட்டுமல்ல, அது கடவுளின் அனுக்கிரகத்தையும் செல்வ செழிப்பையும் பல மடங்கு பெருக்கி நமக்கு வரத்தை அளிக்கக் கூடியது. இந்த வாய்ப்பை பக்தர்கள் பெற வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அவ்வப்பொழுது ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமமும் திருவோண யாகமும் நடைபெறுகிறது. இந்த யாகங்களில் பக்தர்கள் பங்கு கொண்டு பலனடைந்து வருகிறார்கள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 28.07.2018 சனிக்கிழமை திருவோண நக்ஷத்திரத்தில் காலை 10.30 மணிக்கு மேல் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஹோமம் மற்றும் திருவோண யாகம் நடைபெறுகிறது. மேற்கண்ட யாகங்களில் கலந்து கொண்டு உங்கள் முன்னேற்றத்தில் காணப்படும் தடைகளை விலக்கி ஸ்திரமான நிதிநிலை பெற்று உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்திக் கொண்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற அன்புடன் அழைக்கின்றோம்.

திருவோண யாகமும் லக்ஷ்மி நாராயண ஹோமமும்:
ஸ்ரீ லக்ஷ்மி மற்றும் ஸ்ரீமன் நாராயணனுக்காக நடத்தப்படும் இந்த ஹோமங்கள் ஒரு பிரத்யேக யாகங்களாகும். இதன் மூலம் இருவரின் அனுக்கிரகமும் கிடைக்கப் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை நடத்தலாம். செல்வத்தின் அதிபதியான ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாட்சத்தால் உங்கள் வாழ்வில் செழிப்பும், பொருட்செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும், நல்லிணக்கமும், ஆன்மீக ஞானமும் கிடைக்கப் பெறுவீர்கள். ஸ்ரீமன் நாராயணனின் கடாட்சத்தால் எதிர்பாராத நிதி நெருக்கடி சமயங்களில் உங்கள் ஆஸ்திகளுக்கான பாதுகாப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு நிறைந்த செல்வம் மற்றும் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து மன நிறைவைப் பெற்று வாழுங்கள்.

ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் பக்தி சிரத்தையுடனும், வேதாகம முறையுடனும் செய்யப்படுகின்றது. இதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மனதில் நேர்மறை அதிர்வலைகள் தோன்றுவதை நீங்கள் அனுபவித்து உணரலாம். இதன் மூலம் அதிகபட்ச நன்மை பெற இந்த ஹோமத்தை வருடத்திற்கு ஒருமுறை நடத்துவது நல்லது. கடன்களை சமாளிக்க, நிதி பாதுகாப்பு பெற, உறவுப் பிரச்சினைகளை தீர்க்க, புதிய மனிதர்களுடன் தொடர்பு கொண்டு நல்லுறவு கொள்ள இந்த ஹோமம் மேற்கொள்வது நல்லது.

ஹோமத்தின் நன்மைகள்:

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாசர் போன்ற தம்பதி சமேதராக உள்ள தெய்வங்களை யாகங்கள் செய்து வழிபடுவது மூலம் உங்கள் நிதிநிலைமையில் வெற்றி காண இயலும். வேத நூல்களின் படி இந்த தெய்வத் தம்பதிகளை வணங்கும் போது. நிதிநிலை சார்ந்த துன்பங்களைக் குறைக்கிறது, செல்வச் செழிப்பை ஏற்படுத்துகிறது, நிதி அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடவைக்கின்றது, உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கின்றது, சுதந்திரமான நிதிநிலைமை ஏற்படுத்தி தருகின்றது, உறவுப் பிரச்சினைகளை தீர்க்கின்றது, பல-பணி திறன்களைப் பெற இயலும், நிதி சிக்கல்களில் இருந்து மீள இயலும்.

இந்த யாகத்திற்கு  இந்த யாகத்திற்கு தாமரை புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment