Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, July 4, 2018

Mangala Chandi Yagam......


20.07.2018 ஆடி முதல் வெள்ளியில்
வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
சகலமும் தரும் சண்டி யாகம்

நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருடம் ஆடி மாதம் 4ஆம் நாள், வெள்ளிக்கிழமை அஷ்டமி திதி, சித்திரை நட்சத்திரம், [20.07.2018] கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை, உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகி, மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அம்பாளுக்கு உகந்த ஆடி வெள்ளிக்கிழமை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சௌபாக்யம் தரும் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

ஆஸ்திக அன்பர்கள் யாவரும் இந்த வைபத்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற திரவிய சகாயம் செய்து எல்லாம் வல்ல ஆதிபராசக்தியாய் விளங்கும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி அம்பாளின் அருளை பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

மகா சண்டி ஹோமத்தில் பங்கு பெற்றால் கிடைக்கும் நன்மைகள் :

குழந்தை பாக்கியத்தில் உள்ள தடைகள் விலகும்.
திருமணத் தடைகள் விலகும்.
உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நன்மைகள் பெருகும்.
பண கஷ்டங்கள் விலகி அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.
எல்லா நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.
வேண்டும் வரங்கள்  யாவும் அம்பிகையின் அருளால் சித்தியாகும்.

நிகழ்ச்சி நிரல் நாள்:

காலை 8.00 மணிக்கு கோ பூஜை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷா பந்தனம்.

காலை 8.30 மணிக்கு கலச பிரதிஷ்டை , ஸ்ரீ சக்ர மகா மேரு பூஜை.

காலை 9.00 மணிக்கு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஹோமம், ஸ்ரீ சத்ரு ஸம்ஹர சுப்பிரமணியர் ஜபம் / ஹோமம்.

காலை 10.00 மணிக்கு ஸ்ரீ துர்காசப்தசதி பாராயண, ஜப, ஸ்ரீ சண்டி ஹோமம்.

பகல் 2.00  மணிக்கு மகா பூர்ணாஹுதி.

பகல் 3.00  மணிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை, மஹாப்ரசாத விநியோகம்.

பொதுவாக ஸ்ரீ மகா சண்டி ஹோமம்  பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

ஒன்றே ஒன்றுஎல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும்  மேற்கொள்வது அவசியம்.

சண்டி ஹோமம்: சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகிறது. அவர்கள் உருவாக்கும் அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகழும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

கடவுள் சக்திகளின் அனைத்து தெய்வீக சக்தியாக சண்டி தேவியை வழிபடுகின்றனர். தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. இது அனுபவம் வாய்ந்த  வேத விற்பன்னர்களை கொண்டு செய்ய படுகின்ற ஒரு ஹோமம்.  இந்த மந்திரம் 13 அத்தியாயங்களை கொண்டதாக இருக்கும்.13 அத்தியாயத்தில் வழிபாடு நிறைவு செய்யபடும்.

கோ பூஜை,  சுஹாசினி பூஜை, தம்பதி பூஜை, பிரம்மச்சாரி பூஜை, வடுக பூஜை, செய்து சண்டி ஹோம மஹா பூர்ணாஹூதி நடைபெற உள்ளது.
யாகத்தின் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. விளாம்பழம் நினைத்த காரியம் ஜெயம், 2. கொப்பரைத் தேங்காய் சகலகாரிய சித்தி, 3. இலுப்பைப்பூ சர்வ வஸ்யம், 4. பாக்குப்பழம் ரோக நிவர்த்தி, 5. மாதுளம்பழம் வாக்குப் பலிதம், 6. நாரத்தம்பழம் திருஷ்டிதோஷ நிவர்த்தி, 7. பூசணிக்காய் சத்ருநாசம், 8. கரும்புத் துண்டு நேத்ர ரோக நிவர்த்தி, 9. பூசணி, கரும்புத் துண்டு சத்ருநாசம், எதிலும் வெற்றி, 10. துரிஞ்சி நாரத்தை சகல சம்பத் விருத்தி, 11. எலுமிச்சம்பழம் சோகநாசம் (கவலை தீர்த்தல்), 12. நெல் பொரி பயம் நீக்குதல், 13. சந்தனம் ஞானானந்தகரம், 14. மஞ்சள் வசீகரணம், 15. பசும்பால் ஆயுள் விருத்தி, 16. பசுந்தயிர் புத்ர விருத்தி, 17. தேன் வித்தை, சங்கீத விருத்தி, 18. நெய் தனலாபம், 19. தேங்காய் பதவி உயர்வு, 20. பட்டு வஸ்திரம் மங்களப் பிராப்தி, 21. அன்னம், பசஷணம் சஞ்சலமின்மை, சந்தோஷம், 22. சமித்துக்கள் அஷ்ட ஐஸ்வர்யம், 23. சௌபாக்ய திரவியங்கள், பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் அருள் புரிகிறது.

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக, புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்கிறார் தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேற்கண்ட யாகத்தில் பக்தர்கள் புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment