Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, May 31, 2017

Santhana Gopala Yagam

தன்வந்திரி பீடத்தில்
சஷ்டி சந்தான கோபால யாகம்.

வேலூர் மாவட்டம வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி குழந்தை வேண்டி இன்று 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் வளர்பிறை சஷ்டியை  முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகத்துடன் சந்தான கோபால யாகம் நடைபெற்றது

இதனை தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய்  காப்பு நடைபெற்று தம்பதிகளுக்கு வெண்ணைய் பிரசாதத்துடன் தைல பிரசாதமும் வழங்கப்ட்ட்து
 
தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை குமரனுக்கும் நவநீத கிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளதால் தம்பதிகளுக்கு மேற்கண்ட தெய்வங்களின் அருள் கிடைத்து குழந்தைபாக்கயம் விரைவில் ஏற்பட சஷ்டி விரதத்துடன் இந்த ஹோமம் நடைபெற்றது


சஷ்டி விரதம் இருந்து சந்தான கோபால யாகத்தில் கலந்து கொண்டு பிரசாதமாக வழங்கும் தைலத்தை தம்பதிகள் உண்டு, வயிற்றில் தடவி வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும் என்கின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்.





Tuesday, May 30, 2017

Vasthu Santhi Homam

தன்வந்திரி பீடத்தில்
வாஸ்து தோஷம் நீக்கும்
வாஸ்து ஹோமம்  நடைபெறுகிறது.


கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்ற வகையில் வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைத்துள்ளார்.

இப்பீடத்தில் பிரதி செவ்வாய் கிழமை மற்றும் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் மற்றும்  பஞ்சபூத வழிபாடும் அஷ்டதிக் பாலகர் பூஜையும் நடைபெறுகிறது. ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர். என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். வருகிற 04.06.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில்  வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம்  நடைபெறுகிறது. .

வாஸ்து பகவான் அமைப்பு

வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள்

கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்க வழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும் வழிவகை செய்யும் என்பதை மனதில் கொண்டு மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்



Sani Santhi Homam

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில்
 03.06.2017 சனிக்கழமை காலை
சனி தோஷம் நீக்கும் சனிசாந்தி ஹோமம்

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தினால் ஏற்படும் தடைகள் பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 03.06.2017  சனிக்கிழமை சனி ப்ரீத்தியுடன் சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்தி , ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெறும் இந்த யாகத்தில்  கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, ல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையுடன், பைரவர் பூஜையும் நடைபெறயுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Santhana Gopala Yagam

தன்வந்திரி பீடத்தில் நாளை
குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாகம்.

சஷ்டி விரத மகிமை.

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி. இது தவறா னது. சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது தான் உண்மையான பழமொழி. அதாவது, சஷ்டி விரதம் இருந்தால் திருமணம் முடிந்து குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் பெண்ணின் அகப்கையாகிய கருப்பையில் குழந்தை வளரும் என்பது அதன் பொருள்.

சஷ்டி விரதத்திற்கு அத்தகைய வலிமை உண்டு. சஷ்டி விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.ஐஸ்வரியத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. ஜோதிடத்தில் 6-ம் எண்ணூக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார்.

திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடிய வரும் சுக்கிரன் தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒள்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாகம்.

வேலூர் மாவட்டம வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி குழந்தை வேண்டி நாளை 31.05.2017 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் வளர்பிறை சஷ்டியை  முன்னிட்டு கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகத்துடன் சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது.
இதனை தொடர்ந்து நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய்  காப்பு நடைபெற்று தம்பதிகளுக்கு வெண்ணைய் பிரசாதத்துடன் தைல பிரசாதமும்  ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்க உள்ளார்.

தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை குமரனுக்கும் நவநீத கிருஷ்ணருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளதால் தம்பதிகளுக்கு மேற்கண்ட தெய்வங்களின்
அருள் கிடைத்து குழந்தைபாக்கயம் விரைவில் ஏற்பட சஷ்டி விரதத்துடன்
இந்த ஹோமம் நடைபெற உள்ளது.

சஷ்டி விரதம் இருந்து சந்தான கோபால யாகத்தில் கலந்து கொண்டு பிரசாதமாக வழங்கும் தைலத்தை தம்பதிகள் உண்டு, வயிற்றில் தடவி வந்தால் விரைவில் குழந்தை பேறு கிடைக்கும் என்கின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்.

Sunday, May 28, 2017

Swayamvarakala Parvathi Homam

தன்வந்திரி பீடத்தில்
சுயம்வரகலா பார்வதி ஹோமம்
நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 28.05.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் சிறந்த வேத விற்பன்னர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம்  நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம், முனீஸ்வர ஹோமம் ராகு கேது  ஹோமம், சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.


ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளாலும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடனும் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் பெண்களின் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழவும், மனைவிக்கு ஏற்ற நல்ல கணவர் அமையவும். அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கவும் பிரார்த்தனை நடைபெற்று பங்கேற் பெண்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்பட்டது.. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 




Saturday, May 27, 2017

Amavasai Special Sarabha Soolini Prathankira Sathru Samhara Yagam at Sri Danvantri Peedam. Thanks to " SAKSHI " Daily News Paper 27.05.2017


Punarvivaha Homam/புனர்விவாஹ ஹோமம்

 வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை
 ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புதுவாழ்வுதரும் புனர்விவாஹ ஹோமம்.

(ஆண், பெண், சுபமான மறு திருமணத்திற்கு ஒரு சிறப்பு ஹோமம்)
நாள்; 26.06.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்

கலியுகத்தில் இன்றைக்குப் பல குடும்பங்களில் இருக்கிற பிரச்சனையே ஒற்றுமையான தாம்பத்தியம் இல்லாததும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததும் தான். திருமணமான ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து விவகாரம், கோர்ட்,வரை போய் விடுகிறது. ஒரு சிலருக்கு வழக்குகளை சந்திப்பதற்குள் வயதாகிவிடுகிறது.

இது எதனால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது, எதனால் இந்த கஷ்டம் பெற்றோர்கள் சொல்லும் ஒரு வார்த்தை என் மகன், என் மகள் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை என்று இரண்டு மூன்று ஜோதிடர்களிடம் ஆலோசனைப் பெற்றதில் நல்ல அருமையான பொருத்தம்  என்றுதானே சொன்னார்கள். குலதெய்வம், இஷ்ட தெய்வம் பெரியோர்களின் ஆசியுடன் தான் எங்கள் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தோம். 4,5,7,8, என்ற தேதிகளில் திருமணம் செய்யக்கூடாது என்று ஒருசிலர் கூறியதின் பேரில் அந்த தேதிகள் இல்லாமல் தான் திருமணம் செய்து வைத்தோம். ஒரு சிலர் பையன் நல்ல பையன் மாதிரி தெரிகிறான். ஒரு சிலர் பெண் மகாலட்சுமி போல் உள்ளாள். இருவருக்கும் நல்ல பொருத்தம் என்றெல்லாம் கூறி ஆசீர்வதித்து சென்றார்களே, ஆனால் அவை அனைத்தும் கேள்விக் குறியாகி விட்டதே. இது ஏன் என்று என்னிடம் நேரில் வந்து அவர்கள் சொல்லும் பொழுது மிகவும் வேதனை அடைந்தேன்.

சென்ற தலைமுறையில் கணவனுக்கும் மனைவிக்கும்  ஒரு கருத்து வேறுபாடு சிறிய மனஸ்தாபம் என்றால் அது திருமணமாகி இருபது முப்பது வருடங்களுக்குப் பின் லேசாக எட்டிப் பார்க்கும். ஆனால் இன்றைய தலைமுறையில் கேட்கவே வேண்டாம், பிரசவத்திற்காக டாக்டர் மனைவியை அவர் வீட்டில் கொண்டு விட்டார். ஒரு இன்ஜினியர் மாப்பிள்ளை ஆனால் குழந்தை பிறந்த பின் மனைவியை அழைத்துப் போக வரவே இல்லை, காரணம் என்ன என்று இன்றுவரை மனைவி குடும்பத்துக்குப் புரியவில்லை. தன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி தன்வீட்டிற்கு வரவில்லை, ஏன் என்ற காரணம் புரியவில்லை, என்று கூறும் கணவரும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமை, முளைவிடும் சந்தேக புத்தி, கற்பில் நேர்மையின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, தேவையற்ற காம இச்சைகள், தீய நண்பர்கள், தீய பழக்கவழக்கங்கள், பெற்றோர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுக்காமை, ஒருசில பெற்றோர்களின் சுயநலம், இப்படி பல அம்சங்கள், விவாகரத்துக்கு காரணம் ஆகின்றன. சில நேரங்களில் மறுவிவாகம் என்று ஆகி அதுவும் விவாகரத்து ஆகி விடுவது உச்சகட்ட சோகம், இப்படி இரண்டாவது திருமணமும் விவாகரத்தாகி மூன்றாவது திருமணத்திற்க்கு வரன் தேடும் குழப்பங்களைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது.

போதிய பக்குவமும் சரியான வழிகாட்டுதல், உணவு  பழக்க வழக்கமும் ஆன்மீக பலமும் இல்லாமல் தவிப்பவர்களின் மறுமணம் கேள்விக்குறி ஆகிறது. மறுமணம் என்பது பெண்களின் பாதுகாப்பு கருதியும்  குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டும் சிலரைப் பொறுத்தவரை காலத்தின் கட்டாயம் ஆகிறது. என்றாலும் அதாவது நல்லவிதமாக நடந்து அந்தத் திருமண வாழ்க்கை ருசிக்கிற வகையில் அமைய வேண்டும்.

எனவே வில்லங்கம் இல்லாத, சிக்கல், இல்லாத, மனநிம்மதி தருகின்ற மறுமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண், பெண்களுக்கு பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஸ்ரீ தன்வந்திரி மற்றும் ஆரோக்ய லஷ்மியினுடைய பரிபூரண அருளுடன் உடல் நோய் மனநோய் நீங்கி ஆரோக்யமான மண வாழ்க்கை அமைய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 26.06.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை அரசு விடுமுறை தினத்தை முன்னிட்டு வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற இருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் மறுமணம் தேவைப்படும் ஆண்களும், பெண்களும், இந்த ஹோமத்தில் பக்தி உணர்வுடன் கலந்து கொண்டு பலன் பெற்று வாழ்க்கையில் பிறரைப் போல் தலை நிமிர்ந்து வாழ பிரார்த்தனை செய்யும் விதத்தில் மனித நேயத்துடன் நடைபெறும்  இந்த மஹா ஹோமத்தில் 23.06.2017க்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு,

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலைமதுரா,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Ph : 04172-230033 / 230274
Cell : 9443330203
Web: www.danvantritemple.org

eMail : danvantripeedam@gmail.com