Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, May 31, 2015

தன்வந்திரி பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமெரிக்க பயணம்…

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், அழைப்பினை ஏற்றும் வருகிற 12.6.2015 வெள்ளிக்கிழமை முதல் 27.6.2015 வெள்ளிக்கிழமை வரை அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்தப் பயணத்தின் போது பல்வேறு பக்தர்களின் இல்லங்களில் நடைபெறும் குடும்ப விழாவிற்கும், ஆலயங்களுக்கும், உறவினர்களின் இல்லங்களிலும் விஜயம் செய்து ஆசி வழங்க உள்ளார். மேலும் பல்வேறு முக்கிய நபர்களையும் சந்திக்க உள்ளார். பாலஜோதிட வாசகர்கள் மற்றும் இணையதள அன்பர்கள், முகநூல் நண்பர்கள், தன்வந்திரி ப்ளாக்ஸ்பாட் வாசகர்கள் தங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தால் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் 73 தெய்வ திருச்சன்னதிகளையும், 468 சித்தர்களையும் ஸ்தாபிதம் செய்து தினசரி யாகங்களையும், பூஜைகளையும், அன்னதானத்துடன் தர்ம காரியங்களையும் செய்து வருகிறார். மேலும் முதியோர் இல்லம், ஆயுர்வேத மருத்துவமனை, யோகா பயிற்சி மையம் போன்றவைகளை அமைத்து மக்களின் நலனுக்காக சேவை செய்து வருகிறார். பல லட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் குடிகொண்டுள்ளார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மேலும் விபரங்களுக்கு

www.danvantritemple.org

தன்வந்திரி பீடத்தில் இன்று (31.05.2015) மாலை 5 மணியளவில் நடைபெற்ற ப்ரதோஷ பூஜையின் காட்சிகள்...

தன்வந்திரி பீடத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு 2.6.2015ல் சிறப்பு ஹோமம்...

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஜூன் மாதம் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிறப்பு சுப்பிரமண்ய ஹோமம் நடைபெற உள்ளது.

வைகாசி விசாகத்தின் சிறப்பு…

அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
- கந்தபுராணம்
ஒவ்வொரு மாதமும் பூரண சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ் மாதத்தின் பெயராக அமைகின்றது. வைகாசி மாதத்தில் உச்சம் பெற்ற சந்திரன் முழுநிலவாக தோற்றமளிக்கும் பௌர்ணமி நாளில்விசாகநட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றார்அதனாலேயே இந்த மாதம் "வைசாக மாதம்என்றிருந்து பின்னாளில் "வைகாசி மாதம்என்றானது.

இந்த வைகாசிமாத பௌர்ணமி நாளை "வைகாசி விசாகம்என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில்தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்" மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்என்றும் அழைக்கின்றனர்.

அவதாரம்என்ற வடமொழி சொல்லுக்கு "கீழே இறங்கி வருதல்என்று பொருள். உலகில் அதர்மச் செயல்கள் தலைதூக்கி தர்மம் நிலை தடுமாறும் போது, மக்கள் துயர் துடைக்க இறைவன் ஏதோ ஓர் உருவில் கீழே இறங்கி உலகில் அவதரிப்பதையே அவதாரம் என்பர். சூரபத்மன் என்ற அசுரனிடமிருந்து மக்களைக் காக்கவே வைகாசி மாத பௌர்ணமி நாளன்று முருகன் அவதரித்தான்.

உலகிலுள்ள ஜீவன்களின் தோற்றம் நான்கு வகைப்படும். அவை பைகளில், முட்டையில், நிலத்தினில், வியர்வையில் என புராணம் கூறுகிறது. இதைக் குறிக்கவே படைக்கும் கடவுளுக்கு நான்கு தலைகள். நாம் எல்லாரும்  பெண் வழித் தோன்றியவர்கள். அதனால் பெண் பிள்ளைகள். முருகன் ஒருவன் மட்டும் ஆண் மூலம்- ஆறு அதாவது சிவனின் ஆறு நெற்றிக் கண்களின் சுடரால் பிறந்தவன். எனவே இவன் மட்டும்தான் ஆண் பிள்ளை.

முருகனுடைய வாகனமான மயிலாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். தன்னை எதிர்த்து போரிட்ட சூரபத்மன் ஆணவத்தை அடக்கி மயிலாகவும், சேவலாகவும் ஆட்கொண்டார் என கந்தபுராணம் கூறுகின்றது. சூரபத்மன் (சூரன்+பதுமன்); ஒருபாதிநான்என்கின்ற அகங்காரமும், மற்றொருபாதிஎனதுஎன்கின்ற மமகாரமாகவும் அமையப் பெற்றவன்.

முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

வள்ளி வலது பக்கம்; தெய்வானை இடது பக்கம். அதாவது முருகனுக்கு. வள்ளி இச்சா சக்தியையும், தெய்வானை கிரியா சக்தியையும், முருகன் ஞான சக்தியையும் குறிப்பவர்கள். வள்ளி இகலோகத்திலும், தெய்வானை பரலோகத்திலும் நம்மை காப்பவர்களாம்.

வள்ளியுடைய கையில் பூலோகத்தில் காணப்படும் தாமரை மலர் இருக்கிறதாம். தெய்வானை கையில் தேவலோகத்தில் காணப்படும் நீலோத்பல மலராம். வடிவேல் முருகனின் வலது கண்ணை சூரியனாகவும், இடது கண்ணை சந்திரனாகவும் சொல்வார்கள். அவனுக்கு தந்தையைப் போன்ற அக்கினிக் கண்ணும் உண்டு.

வலது புறம் இருக்கும் வள்ளியின் கையில் இருக்கும் தாமரை மலர், குமரனின் வலது கண் பார்வை (சூரியன்) பட்டு எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதே போல, இடது புறம் இருக்கும் தெய்வானையின் கையில் இருக்கும் நீலோத்பல மலரும், முருகனின் இடக் கண் பார்வையினால் (சந்திரன்) எப்போதும் மலர்ந்தே இருக்குமாம். அதனால், முருகப் பெருமானை இடைவிடாது அன்புடன் வணங்குபவர்களுக்கு அவன் இருபத்தி நான்கு மணி நேரமும் அகலாத துணையாய் இருப்பான்.

குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சுப்பிரமண்யர் ஹோமத்தில் கலந்து கொண்டு கார்த்திகை குமரனை வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து கார்த்திகைக்குமரனை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர். அன்றைய தினம்  விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானிடத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார்.

முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய, ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்என வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது.

பத்மாசுரன் (சூரன்) என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்.

இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பியிருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.

இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.

முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை.

பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.

இந்நாளில் முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.
 • மாதம் தோறும் விசாக நட்சத்திரம் வந்தாலும், தமிழ் மாதமான வைகாசியில் வரும் இந்த நட்சத்திரம் வைகாசி விசாகம் என்று  சிறப்புடன் அழைக்கப்படுகிறது.
 • வைகாசி விசாகம் தமிழ் கடவுள் முருகனுக்கு  உகந்த நட்சத்திரமாகும். ஏனென்றல், அன்றைய தினம் அவர் அவதரித்தார்.
 • இந்த நாளில் அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக  திருச்செந்தூரில் இந்த விழா இன்னும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
 • வைகாசி என்ற பெயரில் வட இந்திய புண்ணிய ஸ்தலமான காசி பெயரும் வருவதால், அந்த மாதத்தில் காசிக்கு சென்று வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. காசிக்கு சென்று நீராட முடியாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள  புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு.
 • எமதர்மன் அவதரித்த நாளும் வைகாசி விசாகம் தான். இந்த நாளில் எமதர்மனுக்கு தனிபூஜை செய்கிறார்கள். அவ்வாறு  பூஜை  செய்வதால் நோய்கள் நீங்கும், நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்.
 • ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரியில் பிறந்தார். அவர் பிறந்ததும் வைகாசி விசாக நாளில்தான்.
 • குழந்தை பாக்கியத்திற்காக கோயில் கோவிலாக ஏறி இறங்கும் தம்பதியர் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள், வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் அந்த் பாக்கியம் உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த முருகப்பெருமானை தன்வந்திரி பீடத்தில் 468 சித்தர்கள் முன்னிலையில் கார்த்திகை பெண்களுடன் கார்த்திகை குமரனாக பிரதிஷ்டை செய்துள்ளார் ஸ்வாமிகள். கார்த்திகை குமரனின் சிறப்பு தினங்களில் சிறப்பு யாகங்களும், அன்னதானங்களும் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் 2.6.2015 செவ்வாய்க்கிழமை அன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை உலக நலன்கருதி சிறப்பு சுப்பிரமண்ய ஹோமமானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு வாழ்வில் வளம் பெற ப்ரார்த்திக்கின்றோம்…
மேலும் விபரங்களுக்கு.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலைமதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632513.
வேலூர் மாவட்டம்.
Phone : 04172-230033

Saturday, May 9, 2015

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு மருத்துவ மேளா நடைபெற்றது…வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 9.05.2015 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் மருத்துவ மேளா நடைபெற்றது. இந்த ஹோமம் மற்றும் மருத்துவ மேளாவில் டாக்டர் டில்லிபாட்ஷா, டாக்டர் சரத்பாபு, டாக்டர் சிவஞானம் மற்றும் டாக்டர் மீரா சுனில் ஆகியோர் பங்கேற்று மருத்துவ மேளாவை சிறப்பாக நடத்தித் தந்தனர்.


மேலும் இதில் பக்தர்கள் மற்றும் அருகில் உள்ள ஊர் பொது மக்களும் கலந்து கொண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றுச் சென்றனர். மேலும் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. மேலும் தொடர்ந்து நாளை (10.05.2015) நடைபெறக்கூடிய மருத்துவ மேளாவிலும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.

Akarshana Maha Homam

May 29th  2015, Friday 10.00 a.m. Akarshana Maha Homam at Sri Danvantri Arogya Peedam

Achieving Success In Life

Lord Vishnu, the supreme God is known by several names. He is also called as the protector of earth who destroys enemies and evil forces. Akarshana is the other name of Lord Krishna, the incarnation of Maha Vishnu which means attraction. It is said that anyone who is performing Akarshana Maha homam can witness major changes in life. According to Vedic scriptures, people who offer prayers to Krishna can get blessings from him to overcome all types of problems in life.

 Why Akarshana Maha Homam?
 • Akarshana homam is a suitable one for those who want to prevent potential threats from their ill forces.
 • This homam helps for improving artistic skills of a person by addressing exact needs.
 • Moreover, it is possible to remove the obstacles in life with Akarshana homam for achieving goals.
 • One can be able to get relief from the sins, doshas and karmic issues to avoid mental worries.

Benefits of Akarshana Maha Homam
 • People who want to reduce the malefic effects of planets in a horoscope can choose Akarshana homam for experiencing peace of mind.
 • In addition, it makes feasible ways for getting spiritual knowledge and wisdom to live a balanced life.
 • Akarshana homam gives ways for achieving goals in all tasks by minimizing complications in an effective manner.
 • Another advantage is that it shows methods for ensuring prosperity and wealth by reducing complications.

Sunday, May 3, 2015

தன்வந்திரி பீடத்தில் மே 03ம் தேதியில், சித்ரா பௌர்ணமியில் சப்த ரிஷி பூஜையுடன் 468 சித்தர்கள் யாகம் சிறப்பாக நடைபெற்றது…

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல புனித க்ஷேத்திரங்களுக்கும் சென்று சுமார் 300க்கும் மேற்பட்ட சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் அதிஷ்டானங்களையும், அவதார ஸ்தலங்களையும் தரிசித்து, அங்கிருந்து ம்ருத்யு (மண்) எடுத்து வந்து, அதை லிங்கங்களின் அடியில் வைத்து, சக்தியைக் ஒன்று திரட்டி தொடர்ந்து 15 நாட்கள் அதிருத்ர யாகம் செய்து  468 லிங்கங்களும் பிரதிஷ்டை செய்துள்ளார் ஸ்வாமிகள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த 468 சித்தர்களுக்கும் இன்று (3.5.2015) ஞாயிற்றுக்கிழமை சித்ரா பௌர்ணமி நன்நாளில் தன்வந்திரி பீடத்தில் தனித்தனியாக 468 யாக குண்டங்கள் அமைத்து, ஒவ்வொரு குண்டத்திலும் பக்தர்களையும், சாதுக்களையும், மகான்களையும், சந்நியாசிகளையும் அமரவைத்து மாபெரும் சித்தர்கள் ஹோமமும், சப்தரிஷி பூஜையும் நடைபெற்றது. மேலும் யாகத்தின் முடிவில் 468 சித்தர்களுக்கும் பன்னீர் அபிஷேகமும் நடைபெற்றது.


இந்த யாகத்தில் 500க்கும் மேற்பட்ட சந்நியாசிகள், சாதுக்கள், மகான்கள் மற்றும் பிரமுகர்கள், பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தினர். இதனைத் தொடர்ந்து சிறப்பு சாதுக்களுக்கு வஸ்திர தானமும், அன்னதானமும் வழங்கப்பட்டது என்று ஸ்வாமிகள் தெரிவித்தார்.