Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, February 28, 2019

Maha Shivaratri - Siva Panchakshara Homam


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மஹா சிவராத்திரி
468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜை.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 04.03.2019 திங்கள்கிழமை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும் சிவ பஞ்சாக்ஷர ஹோமத்துடன் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 320 ஜீவ சமாதிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சித்தர்களை தரிசித்து அப்புண்ணிய பூமியின் புனித ம்ருத்தியை கொண்டு 15 நாட்கள் ருத்ர ஹோமம் செய்து சிவ யந்திரத்துடன் 468 சித்தர்களை சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்து பிரதி அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் யாகங்கள், பூஜைகளை சிறப்பாக செய்து வருகிறார்.

மேலும் மரகதலிங்கம், வள்ளலார், மகா அவதார பாபா, சீரடி பாபா, ஸ்ரீ ராகவேந்திரர், ரமணர், ராமகிருஷ்ண பரமஹம்சர், புத்தர், குருநானக், குழந்தையானந்தா சுவாமிகள், ஸ்ரீ வீரபிரம்மேந்திரர், சேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்களையும் பிரதிஷ்டை செய்து சித்தர் முறையில் பூஜித்து வருகிறார்.வருகிற மஹா சிவராத்திரி 04.03.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல், தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும் அகலும். இது மோட்சம் கிடைக்க வழிவகை செய்யும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


Monday, February 25, 2019

Dasa Bhairvar Yagam


தடைகள் நீங்க தச பைரவர் யாகம்தன்வந்திரி பீடத்தில்தேய்பிறை அஷ்டமியில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் பலயிடங்களில் பைரவருக்கென்று பல்வேறு பெயர்களில் திருச்சன்னதிகள் உண்டு. குறிப்பாக சிலயிடங்களில் பைரவருக்கென்று தனி ஆலயமும் உள்ளது. கால பைரவர் என்றால் நமக்கு நினைவிற்கு வரும் கோவில் காசியில் அமைந்துள்ள தக்ஷிண கால பைரவர் கோவில் பைரவர் தான் அனைவரின் மனதிலும் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக தச பைரவர் என்றால் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம்தான் பக்தர்கள் அனைவரும் மனதிலும் மிகக்குருகிய காலத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறலாம். அந்த அளவு ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகளின் கடுமையான முயர்ச்சிகளாலும், உழைப்பினாலும், ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளை பெற்றதினாலும் இப்பீடத்தில் 75 சன்னதிகளுடன் தச பைரவர் சன்னதியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தசபைரவர்களை தரிசிக்கவும், இங்கு நடைபெறும் யாகங்களில் பங்கேற்கவும் உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இப்பீடத்தில் சென்ற ஆண்டு 74 பைரவருக்காக 74 யாககுண்டங்கள் அமைத்து, 74 சிவாச்சார்யர்கள் அமர்ந்து நடைபெற்ற யாகத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர் என்று அனைவரும் அறிந்ததே. மேலும் அவ்வப்பொழுது 64 பைரவர் யாகம், அஷ்ட பைரவர் யாகம், தச பைரவர் யாகம், என்ற வரிசையில் யாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஆதியும் அந்தமுமான இவரை பல்வேறு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்த  64 பைரவர்களில் அஷ்ட பைரவர்கள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றனர். இப்பீடத்தில் அஷ்டகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று 64 விதமான அபிஷேகங்களும், 64 விதமான யாகங்களும், அஷ்ட பைரவர் யாகங்களும் அவ்வப்பொழுது  மிக விமர்சையாகவும் விழாவாகவே  காலை சொர்ண கால பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர்களுக்கும், மஹா காலபைரவருக்கும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற 26.02.2019 செவ்வாய்கிழமை மாலை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட கால பைரவருக்கு அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 1008 அர்ச்சனையும், சதுர் வேதபாராயணமும், உபசார பூஜைகளுடன் மஹா மங்கள ஆரத்தியும், தடைகள் நீங்க நடைபெற உள்ளது.

12 ராசிகாரர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க நடைபெறும் அஷ்ட காலபைரவர் யாகத்தில் கலந்துகொண்டு நினைத்த காரியங்கள் விரைவில் தடையில்லாமல் நிறைவேறவும், தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வாழும் பக்தர்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், நவக்கிரகங்களால் ஏற்படும் சோதனைகள் அகலவும், பல்வேறு தடைகளுக்காக தச பைரவர்களுக்கு யாகம் நடைபெற உள்ளது. மேலும் பைரவர்களுக்கு 8 வெண் பூசணிக்காய் கொண்டு கூஷ்மாண்ட தீபம் ஏற்றி, செவ்வரளி மலர் மாலை, உளர் பழங்களை பூஜைக்கு அளித்து, பைரவரை 8 சுற்றுகள் சுற்றி வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுராகீழ்புதுப்பேட்டைவாலாஜாபேட்டை – 632 513.
 வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033செல்  9443330203

Saraswathi Homam

Saraswathi Homam at Sri Danvantri Arogya Peedam, Walajapet. Thanks to "DINAMANI, SAKSHI, ANDHRA JYOTHI" Daily News Papers.




Sunday, February 24, 2019

Saraswathi Homam


தன்வந்திரி பீடத்தில்தேர்வுபயம் நீங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க இன்று 24.02.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்வாதி நக்ஷத்திரம் பஞ்சமி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வருகின்ற பொது தேர்வில் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் தேர்வுபயம் நீங்கவும், ஞாபக மறதியை போக்கவும், ஜாதக ரீதியாகவும், சீதோஷ்ண நிலையினாலும் ஏற்படும் தோஷங்கள் அகலவும், படிப்பில் கவனம் செலுத்தவும், விளயாட்டில் ஏற்படும் ஆர்வம் தேர்வு முடியும் வரை தள்ளி வைக்கவும், நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை வேண்டி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், சரஸ்வதி ஹோமமும் நடைபெற்றது.
சரஸ்வதி ஹோமம் புத்தி கூர்மை மற்றும் ஞாபக சக்தி பெற்று வருகின்ற பொது மற்றும் ஆண்டு தேர்வில் பங்கு பெற்று, அதிக மதிபெண்கள் பெற்று, கலை, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி தேவியை வேண்டி சரஸ்வதி ஹோமமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு தேன் அபிஷேகமும், தாமரை பூக்களால் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. ஆயுள் ஆரோக்யம் வேண்டியும், தேர்வு பயம் நீங்கவும், தேர்வுகால ஜுரம் அகலவும், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் ஹோமரக்ஷை, குங்குமம், அபிஷேக தேன், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் ஏலக்காய் போன்ற விசேஷ பிரசாதங்கள் வழங்கபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Saturday, February 23, 2019

Nadha Sangamam - Advisory Meeting


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 

நாதஸ்வர கலைஞர்களின் 

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை முதல் 17.03.2019 பங்குனி மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், என ஷண்மத கடவுள்களை பிரதிஷ்டை செய்து ஷண்மத பீடமாக திகழ்ந்து வரும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஷண்மத தெய்வங்களை போற்றி ஆராதிக்கும் விதத்தில் ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்சவமும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சஹஸ்ர கலசாபிஷேகமும், ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்துடன் 1000க்கு மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பஙேற்கும் நாதசங்கமம் நிகழ்ச்சியுடன் பல்வேறு வைபவங்கள் ஸ்வாமிகளின் அருளானைப்படி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (23.02.2019) காலை 11.00 மணியளவில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தவில், நாதஸ்வர கலைஞர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வருகிற மார்ச் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை தன்வந்திரி பீடத்தின் 15 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மஹா தன்வந்திரி ஹோமமும் ஆயிரம் கலசங்கள் கொண்டு தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதில் ஆந்திரா, கர்னாடக, புதுச்சேரி, மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுற்று புறம் உள்ள 30 க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்தும் சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர் என்று இதில் பங்கு பெற்ற தவில், நாதஸ்வர கலஞர்களின் பிரதிநிதிகளானா சோளிங்கர் R.V. சித்திரகுமார், சோளிங்கர் K.M. நாராயண மூர்த்தி, சோளிங்கர் R.P. செல்வராஜ், அனந்தலை S. ரமேஷ், வாலாஜா R. வேல்முருகன், வாலாஜா V. ஜெகன்நாதன், வாலாஜா V. கார்த்திகேயன், காவேரிபாக்கம் S. பிரகாஷ், ஓச்சேரி M. மோகன், அல்லிகுளம் E. பாபு, அல்லிகுளம் B. ராமகிருஷ்ணன் தெரிவித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Panthakkal Muhurtham

Panthakkal Muhurtham

for Shodasa Thirukalyana Mahotsavam

at Sri Danvantri Arogya Peedam.

Thanks to

"DINAMANI, ANDHRA JYOTHI, SAKSHI"

Daily News Paper.




Shodasa Thirukalyana Mahotsavam

Shodasa Thirukalyana Mahotsavam

at Sri Danvantri Arogya Peedam, Walajapet.

Thanks to "Kalaikathir" Daily News Paper.


ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
ஏற்றம் தரும் ஏழு ஹோமங்கள்
மார்ச் மாதம் 13 முதல் 15 வரை
கோமாதா திருக்கல்யாணம் - 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம்
துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் - 108 கன்யா பூஜை
வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் - 108 தம்பதி பூஜை
தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுருடாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி வருகிற 13.03.2019 புதன்கிழமை முதல் 15.03.2019 வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம், துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம், 108 கன்யா பூஜை, வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம், 108 தம்பதி பூஜை நடைபெறுகிறது.

கோமாதா திருக்கல்யாணம் - 108 சுமங்கலி பூஜை - சமஷ்டி உபநயனம்

முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி கோமாதா திருக்கல்யாணமும், கணவனுடைய ஆயுள் தீர்க்கம் வேண்டியும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், சௌபாக்யங்கள் கிடைக்க வேண்டியும், தீர்க்க சுமங்கலி பாக்யம் கிடைக்க வேண்டியும் 108 பெண்கள் பங்கேற்கும் சுமங்கலி பூஜையும், வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் சமஷ்டி உபநயனமும் 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

துளசி செடி நெல்லி செடி திருக்கல்யாணம் – 108 கன்யா பூஜை

ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவிநெல்லிராஜா ( துளசி செடிநெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட்சங்கள், சுப காரியங்கள் ஏற்படவும், 108 கன்னிபெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜையும் 14.03.2019 மாசி மாதம் 30ம் தேதி வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

வேம்பு மரம் அரச மரம் திருக்கல்யாணம் – 108 தம்பதி பூஜை

இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மிஅஸ்வத் ராஜா (வேப்ப மரம்அரச மரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண்பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்த்கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜையும் 15.03.2019 பங்குனி மாதம் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 2.00 வரை நடைபெறுகிறது.

மேற்கண்ட அனைத்து பூஜைகளும், ஹோமங்களும் மார்ச் 16, 17 ல் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் நடைபெறும் திருக்கல்யானத்திற்கான பூர்வாங்க பூஜைகளாகும். இந்த தகவலை தனவந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203