காலத்தை வெல்லும் காயத்ரி ஹோமம்
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
26.08.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படு, ஆடி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை காலத்தை வெல்லும் காயத்ரி ஹோமம் நடைபெறுகிறது.
ஓம்
பூர்ப்பவஸ்ஸுவஹ
தத்ஸவ விதுர்
வரேண்யம்
பர்கோ தேவஸ்ய
தீமஹி
தியோ யோ
நப்ரசோதயாத்
விஸ்வாமித்திரர்
உச்சரித்த மந்திரம் காயத்ரி மந்திரம்
மேற்கண்ட காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும்
பொழுது., “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக் குறிப்பிட்டுள்ளார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் “நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் “பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள்
ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது
மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மனித குலம் அனைத்துக்கும் ஒரே மந்திரம் இது. மந்திரங்களுக்கெல்லாம்
தாயாக விளங்குவது. விண்ணிலிருந்து பறித்தாற்போல அசரீரி ஒலியாகத் தான்
உள்வாங்கிக்கொண்ட அந்த மந்திரத்தால் விஸ்வாமித்திரர் மனம் மகிழ்ந்தார்.
அந்த மந்திரத்துக்கு உருவம் தந்து காயத்ரியை தேவியாக்கி உலகத்திற்கு தந்தார். என்று புராணங்கள் கூறுகின்றன.
காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் “உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை
நீக்க வேண்டும்” என்பதாகும்.இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது
எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது.
இதன் காரணமாக 24 வகை
சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
இத்தகைய பெருமைகள் வாய்ந்த காயத்ரி தேவிக்கு மிகச்சிறந்த நிவாரண பூமியாக விளங்கும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் மஹாமேருவுடன் ஸ்ரீ காயத்ரித் தேவிக்கு, சிறப்பாக ஸ்ரீகாயத்ரி பீடம் அமைத்துள்ளார்.
இத்தேவி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக அமைந்து வருகை புரியும் பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுத்து வருகிறார் என்பது பக்தர்களின் மூலம் அறிய முடிகிறது. மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரிது என்பதைப்போல
மிகச்சிறிய சன்னதி என்றாலும்
அதன் சக்தி பெரிது என்பதை இங்கு வரும் பக்தர்களின் மெய்சிலிர்ப்பான அனுபவத்தின் மூலம் உணரமுடிகிறது. இச்சன்னதி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பரிவார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்துள்ள சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள், ஸ்ரீ தங்க அன்னபூரணி, ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ தத்தாத்ரேயர் சன்னதிகளை கடந்து
சென்றால் பஞ்சலோகத்தில் காயத்ரி தேவி தாமரை மலரில் அமர்ந்து கிழக்கு நோக்கி பேரருள் புரிகிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன், காயத்ரி,
சாவித்திரி ஆகிய 5 கடவுளர்களின்
வடிவமாக அன்னை திகழ்கிறாள். மேலும் தன்
கரங்களில் கதை, அங்குசம், சங்கு,
சக்கரம், தாமரை மலர், சாட்டை,
கிண்ணம் ஆகியவற்றை ஏந்தி உள்ளார். அன்னையின் பாதத்தின் அருகே மஹா மேருவும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கடுமையான தோஷங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்கள் நிவாரணம் பெறுவதற்காக வருகை புரிந்து பீடத்தில் அவ்வப்பொழுது தாமரைப் பூக்களை கொண்டு நடைபெறும் ஸ்ரீ காயத்ரி ஹோமத்தில் கலந்துகொண்டு தோஷங்கள் தீர பிரார்த்தனை செய்து செல்கின்றனர் என்பது மிகவும் மகிழ்சியான செய்தியாகும் தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமி மற்றும் சிறப்பு நாட்களிலும் பக்தர்களின் ஜன்ம க்ஷத்திரத்திலும் காயத்ரி ஹோமம் நடைபெறுகிறது. அந்த வகையில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, வருகிற ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஏராளமான தாமரை மலர்கள், தேன் கொண்டு அவிட்ட நக்ஷத்திரத்தில் மஹா காயத்ரி ஹோமம் நடைபெறுகிறது.
இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு
வழிபடும் நபர்களுக்கும், காயத்ரி தேவியின் மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கும் படிப்பு, ஞானம் கிட்டும், திருமணத் தடை,
நோய் நொடி நீங்கும், வேலையின்மை, அத்தனை வேண்டுதல்களும் நிறைவேறும். அனைத்து செல்வங்களையும் பெற்று பூரண
வாழ்வு கிட்டும். மனோ பீஷ்டம் அகலும், புத்தி பிரகாசிக்கும்.
சௌபாக்யம் கிட்டும், முக்திக்கு வழி கிட்டும், தோஷங்கள் அகலும். பாபங்கள் அகலும், கொடிய வினைகள் நீங்கும், நினைத்ததெல்லாம் நிறைவேறும். உடல்பலம், மனோபலம் கூடும். சகல நன்மைகளும் நம்மை வந்து சேரும், தொழில் முடக்கம் தீரும் கம்பீரத் தோற்றம், தரமான பேச்சு, வறுமை நீங்குதல், அபாயம் நீங்கும், நரம்புகளும், சுரப்பிகளும் வலுபெறும், ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர்
திறமையாகப் படிப்பார்கள் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
முக்கியமாக யாகம் நடைபெற்றவுடன் வருகை புரியும் பக்தர்களுக்கு ஸ்வாமிகள் திருக்கரங்களால் அனைத்துவிதமான தோஷங்கள் நீங்கவும், பிரார்த்தனைகள் நிறைவேறவும் அர்ச்சனை செய்த குங்குமம், புஷ்பங்கள் ஸ்ரீ காயத்ரி ஹோமத்தின் மஹா பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த
யாகத்திற்கு இந்த யாகத்திற்கு தாமரை புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை
பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள்,
பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில்
ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு
:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல்
- 9443330203
No comments:
Post a Comment