வாலாஜாபேட்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
27
நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள் நடைபெற்றது.
27 யாக குண்டங்களில்
27 நக்ஷத்திர காரர்கள் பங்கேற்று யாகம் செய்தனர்.
வேலூர்
மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை
ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள் சிறப்பாக
நடைபெற்றது.
50 க்கு
100 அடி நீளத்தில் 3 X 3 சதுரமாக 27 யாக குண்டங்கள் அமைத்து, அந்த யாக குண்டங்களுக்கு
விசேஷ அலங்கரம் செய்து தனித்தனியாக 27 கலசங்கள் வைத்து, மஞ்சள், குங்குமம், புஷ்பம்,
பழம், போன்ற பூஜை பொருட்களுடன் மூலிகைகள், பழங்கள், நிவேதனங்கள் கொண்டு வேதவிர்பணர்கள்
27 நக்ஷத்திர காயத்ரி மந்திரங்களை கூற பக்தர்கள் மந்திரங்களை சொல்லி யாகம் செய்தனர்.
இதனை தொடர்ந்து
பங்கேற்ற பக்தர்கள் பீடத்தில் காலசக்கிரமாக அமைத்துள்ள 27 நக்ஷத்திர விருட்சங்களுக்கு
கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனையுடன் பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து யாக பிரசாதங்களும்
அன்னதானமும் வழங்கப்படட்து.
மேற்கண்ட
யாகம் உலகில் பிறந்த 27 நக்ஷத்திர காரர்களின் குடும்பத்தில் குழந்தைகளுக்கு
திருமணம் குழந்தை பாக்யம், தொழில், கணவன்
மனைவி ஒற்றுமை, கடன்,
காமம், குரோதம்
போன்ற பிரச்சனைகள் தீர, தேவையற்ற பழக்க வழக்கங்களில் இருந்து விடுதலை பெறவும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்கு தீர்வு வேண்டியும்
27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் நடைபெற்றது. இந்த தகவலை
தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment