Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Saturday, June 30, 2018

27 Nakshatra Gayatri Homam.....


வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்
வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை
நன்மை தரும் நக்ஷத்திர காயத்ரி ஹோமங்கள்

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வருகிறோம். அனைவரும் நிம்மதியாக வாழ்கின்றோம் என்றால் இல்லை எனலாம். ஒரு சில குடும்பத்தில் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. சிலருக்கு குழந்தை பாக்யம் இல்லை, பலருக்கு தொழில் அமையவில்லை, கணவன், மனைவி பிரிவினை, பிள்ளைகளும் பெற்றோர்களும் பேசுவது கூட கடினமாக உள்ளது, சிலருக்கு கடன், காமம், குரோதம் போன்ற பிரச்சனைகள், இதுபோன்ற செயல்களை நாம் கூறிகொண்டே போகலாம். இவற்றுக்கு எல்லை என்பதே இல்லை.

மேற்கண்ட காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மேலும் பாதிப்புகள் வராமல் இருக்க பிராயச்சித்த ஹோமமாக வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை த்விதீய திதியில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை  உலகில் பிறந்த அனைத்து மக்களின் உடல் பிணி உள்ளத்துப் பிணி நீங்கவும், நக்ஷத்திர தோஷங்கள் அகலவும் மற்றும் பல்வேறு காரணங்களின் தீர்வுகளுக்காக 27 நக்ஷத்திர காயத்ரி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்கேற்று வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றத்தை அடைய அன்புடன் அழைக்கின்றோம்.

* அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்.

* பரணி
ஓம் க்ருஷ்ண வர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்.

* கிருத்திகை
ஓம் வன்னி தேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்.

* ரோஹிணி
ஓம் ப்ராஜா விருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்.

* மிருகசீரிடம்
ஓம் சசி சேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்.

* திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்.

* புனர்பூசம்
ஓம் ப்ரஜா வ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்.

* பூசம்
ஓம் ப்ரம்ம வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்.

* ஆயில்யம்
ஓம் ஸர்ப ராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்.

* மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்.

* பூரம்
ஓம் அரியம் நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்.

* உத்திரம்
ஓம் மஹா பகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்.

* அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்.

* சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்.

* சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்.

* விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்.

* அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்.

* கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்.

* மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்.

* பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்.

* உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்.

* திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்.

* அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்.

* சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்.

* பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.

* உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்.

* ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்!
மேற்கண்ட யாகத்தில் பங்கேற்பது மற்றும் 27 நக்ஷத்திர காயத்ரீ மந்திரங்களை அவரவர்கள் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி, பாரயாணம் செய்துவந்தால் வேண்டிய பலன்களை வேண்டியவாறு பெறலாம்.

மேற்கண்ட 27 நக்ஷத்திர காயத்ரீ ஹோமத்தில் பங்கேற்க விரும்பவர்கள் நக்ஷத்திர மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, மஞ்சள், குங்குமம், அன்னதான மளிகைப் பொருகள், நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203


No comments:

Post a Comment