வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பிரதி மாதம் ஷஷ்டி திதியில்
சத்ரு பயம் நீக்கி சந்தான பாக்யம் தரும் ஷஷ்டி ஹோமம் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி
“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 02.08.2018
வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஷஷ்டி திதியை
முன்னிட்டு ஷஷ்டி ஹோமம் நடைபெறுகிறது.
சட்டியில்
இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில்
ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும்
என்று பொருள் கூறுகின்றனர்.
இங்கு அகப்பை
என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று
பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள
குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக
பொருள் கிடைக்கலாம். ஐம்புலனை அடக்கி மன அமைதி கிடைப்பதை சஷ்டி விரதம் உணர்த்தும்
உண்மை.
தியானத்துடன் நில்லாது மனம் வேறெங்கும் செல்லாமல் இறையருளை நாடி
வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில்
ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனு பூதி, கந்தர் கலி
வெண்பா போன்ற நூல்களை படிப்பதின் மூலம் பல்வேறு நன்மைகள் பெறலம்.
விரதங்கள்
மக்களின் மனவலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின்
அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன.
சஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கலாம். மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப்
பெண்கள் நல்ல கணவனை வாழக்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை மேற்கொள்ளலாம். மிகக் கடுமையான நோய்களைக்கூட உண்ணாநோன்பின் மூலம் நீக்கிவிட முடியும்.
சஷ்டி விரதம்
என்பது மிகப் பெரிய வர பிரசாதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால்
அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது. 6 ஆம் எண்ணுக்கு
உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை
தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில்
விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில்
ஒன்றாகவே குழந்தைப் பேறு முக்கியமாக கருதப்படுகிறது. குழந்தைப்பேறுடன் மீதமுள்ள அனைத்து
பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. சஷ்டி விரத நாட்களில் மிகவும்
நம்பிக்கையுடனும், பய பக்தியுடனும் சிரத்தையாக இருந்து விரதம்
மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம்.
தீராத வழக்குகள், பல ஆண்டுகளாக
தீராத நோய்களுக்கு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஷஷ்டியில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நோய் நொடிகள் நீங்கி ஆரோக்யம் வேண்டியும், குழந்தை பாக்யம் வேண்டியும், பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு வேண்டியும், எதிரிகள், சத்ருக்கள் தொல்லைகள் நீங்கவும், தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள கார்த்திகை குமரனை வேண்டி சஷ்டி ஹோமம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விரும்பவர்கள்
நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம்,
சுக்கு, மிளகு, நல்லெண்ணை,
பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள்
கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள்
பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடம்
அனந்தலை
மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை
- 632 513.
வேலூர்
மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
No comments:
Post a Comment